Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கும் லெமன் ஜுஸ்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



வாஷிங்டன் : சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் எலுமிச்சை சாறு தடுக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் சான்டியகோவில் உள்ளது ஒருங்கிணைந்த சிறுநீரக நல மையம். அதன் இயக்குனர் ரோஜர் சர். அவர் கூறியதாவது: சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி எனது தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. 

வியாழன், செப்டம்பர் 23, 2010

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா? 

ஒழுக்கம் 

சந்தேகம் 

வயதான ஆணாக இருப்பது 

குழந்தைப் பாசம் 

உடல் நலக்குறைவு 

கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல் 

கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு 

அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம் 

சமூக நிலை 

விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம் 

காதலனின் துணிவு 

கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம் 

அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம் 

நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன் 

காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை 

காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது 

உலக, பொது அறிவு இல்லாதவன் 

அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம் 

கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம் 

கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம் 

இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்


www.eegarai.net

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

காயத்ரீ மந்திரத்தின் மகிமை — காஞ்சி மஹா பெரியவாள்

.


வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam


மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராமணனாக மாட்டான்.  அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்கிரஹாரம் ஆகாது.  அது குடியானவர் தெருதான்.  ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராமணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்

சனி, செப்டம்பர் 18, 2010

வர்ம புள்ளிகள் 1

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


உடலின் பக்கவாட்டு வர்மம் (அடப்பம் சார்ந்த வர்மம்)




அடப்ப காலம்: மனதில் மறைந்து இருக்கும் மாயை அடங்கி இருக்கும் பகுதி அடப்ப காலம். ஆஸ்மா தாக்குதல் உடனே சரியாகும். இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும்.

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.





               ன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
 

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.  அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away”  இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.  

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது.  ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.  இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது.  அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும்.  இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன்  இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.


http://www.nakkheeran.in

நினைவாற்றல்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.  இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான்.  நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது.  இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.  கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம்.

பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும. 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ் தாது உப்பு இருக்கிறது.  குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.  செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள்.  இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.  இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை,  பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது.  இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான்.  இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும்.  மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.


http://nakkiran.com/