Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

அறிவியல்

பரிணாமம் - இனப்பெருக்கம்! 

தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியிலுருந்து பரிணாமத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் மனித இனம் வரை அனைத்திற்க்கும் தலையாய கடமை இனப்பெருக்கம், ஒரு உயிர் பல்கி பெருக அவைகளில் ஜீன்களில் எழுதபட்டிருக்கும் ஒரே விசயம் நீ வாழ்ந்தே ஆக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்!. காட்டு விலங்கிலிருந்து சமூக விலங்கான பிறகு மனித இனம் மட்டும் தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து கொள்ளும் தகுதியை வளர்த்து கொண்டது, மனிதனின் அபார வளர்ச்சி மற்ற உயிரின பெருக்கத்திற்கு பல வகையில் ஆபத்து என்றாலும் இயற்கை தன்னை சமன்படுத்தி கொள்ள சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக மனிதனையும் காவு வாங்குகிறது!

உயிரினத்தின் தொடக்கும், முதலில் தாவரங்களிலிருந்து விலங்கினமாக மாறியது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தும் படைப்புவத கொள்கையுடவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை, வழக்கம் போல ஏன் இன்னும் குரங்கு குட்டைபாவாடை போடல என்பதிலேயே அவர்கள் கேள்வி நிற்கிறது, விலங்கு செல்லுக்கும், தாவர செல்லுக்கும் அதிகபடியான ஒற்றுமைகள் அறிவியலால் நிறுபிக்கபட்டாலும் எந்த விளக்கமும் கேட்காமல் அதை மறுக்கும் ஒரு சில கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன, நாம் இங்கே பார்க்கப்போவது தவாரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திருந்தாலும் ஒரு சில உயிரினங்கள் அதன் நீட்சியை இன்னும் கடைபடித்து வருவதை தான்!




உயிரினங்களின் தொடர்ச்சி தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியாக தான் வாழ்க்கையை ஆரம்பித்தது, இன்றும் பலதரபட்ட உயிரினங்களின் உள்ளிருந்து அதனை இயக்கி கொண்டிருப்பது செல்கள் தான், அவைகளில் பிரதி எடுக்கபட்டு பிரியும் ஒவ்வொரு செல்லும் அதே வடிவை மீண்டும் அடைகிறது, இவைகளின் சுழற்சியே ஒவ்வொரு உயிரனத்தையும் தனிதனி அடையாளத்துடன் வளர்க்கிறது, நரம்பு மணடலங்கள் பெறாத தாவரங்கள் தன்னை பெருக்கி கொள்ள ஆரம்பத்தில் காற்றையே நம்பியிருந்தது, முதல் உயிரினம் நீரும், ஒளி சார்ந்த இடத்தில் தோன்றியிருக்க தான் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது, அது நாம் சாதாரணமாக பார்த்து பழகிய பாசி!

பலசெல் உடலைப்புடன் தனக்கு தேவையான உணவை தானே உருவாக்கி கொள்ளும் தகுதியுடன் வளர்ந்த தாவரம் நீரின் வேகத்தின் மூலம் இனபெருக்கம் செய்து கொண்டது, தாவரத்திலிருந்து விலங்காக மாறி கொண்டிருக்கையில் ஒரே ஒரு உயிரினம் இன்னும் முழுமையடையாமல் பாதியில் நின்று கொண்டிருக்கிறது, இம்மாதிரியான உயிரினங்கள் தான் பரிணாமம் நம்க்கு விட்டு சென்றுள்ள சுவடுகள், பவழப்பாறை என அழைக்கப்படுவது என்னவென்று பலர் அறிந்திருக்கலாம்! கடற்பரப்பு இவ்வளவு செழுமையாக இருக்கிறது என அறிய பவழப்பாறைகள் தான் சாட்சி, தாவரத்தை போன்று ஓரிடத்தில் தனது காலனியை வளர்த்து கொள்ளும் பவழப்பாறைகள் பெருமளவு தாவரத்தின் குணங்களை கொண்டது, ஆனால் அவைகள் தனிதனியே முட்டையையும், விந்தையும் பீச்சியடித்து இனப்பெருக்கம் செய்து கொள்கிறது!

இனபெருக்க உறுப்பை பெற்றிருந்தாலும் இன்னும் பாலூட்டி அல்லாத மீன்கள், விந்தையும், முட்டையையும், பீச்சியடித்து தான் இனபெருக்கம் செய்து கொள்கின்றன, தாவரங்களுக்கு இனபெருக்கத்திற்கு பருவகாலம் இருப்பது போல், மீன்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களும் தனக்கென ஒரு காலத்தை வைத்திருக்கின்றன, விதைகள் எவ்வாறு கடினமான ஓடுகளால் பாதுகாக்கபடுகின்றதோ அதே போல் பல உயிரினங்களின் முட்டைகள் கடினமான ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன! பாலூட்டிகள் அல்லாத அனைத்து விலங்களும் பிறந்த உடனே தனியாக வாழும் தகுதியை பெற்றிருக்கின்றன, ஆனால் அவ்வாறு தகுதி பெறாத விலங்குகள் தான் பாலூட்டிகளாக பரிணமித்தன என்பதே உண்மை!

உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை, மனிதனுக்கு மட்டுமே இனபெருக்கத்தின் தேவையையும் மீறி உடலுறவில் அதிகபட்சம் இன்பம் தேவைபட்டது, ஏன் என்ற கேள்விக்கு இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது, நாடோடிகளாக வாழ்ந்த முதல் வளர்ச்சி பெற்ற மனித இனம் உணவுக்காக சண்டையிட்டு கொண்டதை விட இணைக்காக சண்டையிட்டதே அதிகம் என்கிறார்கள்!


நான்கு காலில் நடந்து கொண்டிருந்த மனிதன் நிமிர்ந்து நின்றது, உடலுக்கு குறைவான வேலையும், அறிவுக்கு(மூளைக்கு) அதிகப்பட்ச வேலை கொடுத்தது, உடைகள் மூலம் இனபெருக்க உறுப்பை மறைத்தது, மனிதனுக்கு உடலுறவில் மேல் நாட்டத்தை குறைத்தது என்பது விஞ்ஞானிகள் கருத்து, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இனபெருக்கம் கட்டாய கடமை என்றாலும் மனித இனத்தில் மட்டுமே ஆன்மீகம் குறுக்கே நின்றது, பிரம்மச்சார்யம், கடவுளுக்கு உகந்த நாட்களில் மட்டுமே கூட வேண்டும் என பூசாரிகளால் உடலுறவு மறுக்கப்படுதல், இடைவிடாத போர்களால் பல ஆண்கள் உயிரிழப்பு,(தலைவனுக்கு தான் பெண்கள், மீதி தான் மற்றவர்களுக்கு) ஆகியவை மனித இனத்தொகை வெகுவாக குறைத்தது, வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!

 

http://valpaiyan.blogspot.com 

பரிணாமம் - தொடர்சி


பலதரபட்ட உயிரனங்கள் கண் முன் இருந்தாலும் அவைகளின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து அவற்றை ஒரு குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகிறார்கள்! உதாரணமாக புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை பூனை குடும்பத்தை சேர்ந்தது!, அவைகளுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமை, முக்கியமாக தலை அமைப்பு, எழும்புகூட்டின் ஒற்றுமை, வேட்டையாடும் தன்மை இவற்றை உறுதி படுத்துகிறது! இந்த குடும்பத்தில் உடல் வலிமை வாய்ந்தது சிங்கம் என்றாலும் புத்திசாலி விலங்கு எதுவென்றால் அது சிறிய இனமான பூனை தான் எனலாம்!, ஒரு விலங்கு தான் உயிர்வாழ தேவையான உணவை எப்படி பெறுகிறது, அதற்காக அது வகுக்கும் வியூகம் என்ன என்பதிலேயே அதன் புத்திசாலி தனம் தெரிந்துவிடும்!, காட்டில் பூனைகுடும்பத்தில் புத்திசாலி சிறுத்தை!



பூனையாகட்டும், நாயாக்கட்டும் நமக்கு செல்லபிராணிகளாக இருப்பது இன்று தான்! என்னுடய கணிப்பில் மனித உணவின் எச்சங்களை சாப்பிட ஊர் எல்லையில் குழுமியிருந்த நாய் மற்றும் பூனை இனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் வந்தன, அதிக ஆபத்தில்லாத விலங்குகளாக மனிதர்களுக்கு தோன்றியதால் அவர்கள் அதை விரட்டவில்லை, ஆம் என்னுடய கணிப்பில் ஆரம்பத்தில் அதை வளர்க்க அவர்கள் ஆசை பட்டிருக்க முடியாது, அதே நேரம் தொரத்தவும் மனமில்லாமல் விட்டதால் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு பின் அந்த விலங்குகள் அவர்கள் குடும்பத்தோடு ஒட்டியிருக்க வேண்டும்!, இன்னொரு விசயம் எந்த விலங்காக இருந்தாலும் குட்டியாக இருக்கும் போது அதை எடுத்து கொஞ்ச வேண்டும் என்று தோன்றும்!


ஏற்கனவே சொன்னது போல் விலங்கின் முக அமைப்பை கொண்டு இது இன்ன குடும்பம் என வகைபடுத்துகிறார்கள்!, குடும்பம் என்றால் படைப்புவாத கொள்கையின் படி குடும்பம் குடும்பமாக படைப்பட்டதல்ல, ஊர்வன, பறப்பன போல் பாலூட்டிகளில் ஏற்பட்ட கிளைகளை ஒரு குடும்பம் என்கிறோம்!, ஒரு குடும்பத்திற்கும், மற்றொரு குடும்பத்திற்கும் இருக்கும் இணைப்பே பரிணாமத்தின் ஆதாரபுள்ளிகள்!, அதே நேரம் ஒரே குடும்பத்தில் இருந்து அதன் பழக்கவழக்கங்களை மாற்றி புதிய குடும்பமாக அல்லது மேம்படுத்தபட்ட உயிரினமாக மாறுவது சமகாலத்தில் கண் முன் இருக்கும் பரிணாமத்தின் பேராதாரங்கள்.



ஒநாய், நரி என்ன குடும்பம் என்றால் பெரும்பாலோர் பட்டென்று சொல்லிவிடுவார்கள் அது நாய் குடும்பத்தை சேர்ந்தது என்று, ஆனால் கரடி என்ன குடும்பம் என்றால் பலர் யோசிக்க நான் பார்த்திருக்கேன்!, அதன் தலை அமைப்பு, மற்றும் எலும்பு உள்கட்டமைப்பு சொல்லிவிடும் அதுவும் நாய் குடும்பம் தான் என்று, ஆனால் பெரும்பாலோர் யோசிக்க காரணம் கரடி தன் குடும்ப உணவு பழக்க முறையிலிருந்து மாறி கொண்டிருப்பது தான்!, நாய் இன்று அனைத்துண்ணியாக தெரிந்தாலும் உண்மையில் அவை அசைவ பட்சினிகளே!, நாய்களால் பச்சை/வேகவைத்த காய்கறிகளை சாப்பிடமுடியாது! அசைவபட்சிணிகளுக்கு கோரை பற்கள் உண்டு என்பது நாய் ஒரு அசைவ பட்சிணி தான் என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் விசயம்!





கரடி இனங்களில் தற்பொழுது பல வகைகள் காணபட்டாலும் முழுமையான அசைவபட்சிணிகளாக வாழ்வது துருவ கரடிகளே! மேலும் அங்கு காய்கறிகளுக்கு வழியில்லை என்பது கவனிக்கபட வேண்டிய ஒன்று!, கரடிகளில் பல அனைத்துண்ணிகளாக மாறி சில நாட்கள் மூங்கில் குருத்து மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் என சாப்பிட்டு, சில நேரங்களில் சா(ல)மன் மீன்களை சாப்பிட கூட்டமாக வேட்டைக்கு கிளம்பும்!, இது வரை அனைத்துண்ணிகளக அறிய பட்டவைகள் என்னவென்று அறிந்தால் கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கும்! ஆம் குரங்கு/மனித இனங்களே இதுவரை முழுமையாக அறியபட்ட அணைத்துண்ணிகள்!, மனிதன் அசைவபட்சிணியாக இருந்து தற்பொழது மாறியிருக்கிறான் என்பதற்கு நம்பிடம் பல உதாரணங்கள் இருக்கிறது, முதலாவதாக நமது பல்லில் எஞ்சியிருக்கும் கோரைபற்கலின் நீட்சி! இரண்டாவதாக முப்பரிணாம தோற்றத்தில் உணவு விலங்கை பார்க்க வேட்டையாடும் மிருகங்களுக்கு இருப்பது போல் கண் அமைப்பு!,(சொன்னா நம்பவா போறாங்க) கரடி இனங்கள் கடைசி பத்தாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வருடத்திற்குள் உணவு முறை மாற்றத்தை ஏற்படித்தி கொண்டிருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகள் கருத்து!

இந்த பதிவில் நான் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஒன்று மிச்சம் இருக்கு!, ஒரு விலங்கு தேவையின் பொறுத்து அனைத்துண்ணியாக மாறுவது ஆச்சர்ய பட ஒன்றுமில்லை, கண் முன்னே நாயையும், பூனையும் இதன் இயல்பு வாழ்விலிருந்து விலக்கி கெடுத்து வைத்திருக்கிறோம், அதனால் அவைகளின் வாழ்நாளில் குறைவும், மரபணு மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்கிறது விஞ்ஞானம்! ஆனால் இயற்கையாகவே ஒரு விலங்கு, அசைவ பட்சிணியாக இருந்து முழுக்க முழுக்க சைவ பட்சிணியாக மாறியிருக்கிறது! எதிரிகளிடமிருந்து தப்பிக்க மூங்கில் மரமேறிய பாண்டா கரடி இன்று முழுக்க முழுக்க அதை மட்டுமே உணவாக எடுத்து கொள்கிறது!, அவைகளில் பழைய வாழ்க்கையின் சாட்சியாக கோரைபற்றுகளும், தாவரபட்சிணிக்கு இருப்பது போல் வலுவான கடவாய் பற்கள் இல்லாமல் வலுவான தாடைகளும், வலுவற்ற கடவாய் பற்களும் உள்ளன!, இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உடலமைப்பு மாறி அவைகள் வேறு வடிவமான உடலமைப்பு பெறலாம்! ஏற்கனவே குரங்கிற்கு அடுத்து கரடிகள் தான் புத்திசாலி விலங்குகள் என கண்டறிந்துள்ளார்கள்!



மரமேறுவது, திறமையாக வேட்டையாடுவது என அனைத்து துறைகளிலும் திறையை வெளிபடுத்தும் கரடிகள் கூட்டுகுடும்ப வாழ்க்கையில் தற்சயமம் அதிக கவனம் செலுத்துவதாக கண்டறித்துள்ளார்கள், ஒரு இனம் தழைக்க இனபெருக்கம் மிக முக்கியம், அதை விட முக்கியம் அதன் குட்டிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி முழுமையாக வளர்ப்பது!, குரங்குகளை விட கரடிகள் இவ்விசயத்தில் மிகுந்த திறமையுடன் நடத்து கொள்வதாக ஆராய்ச்சி சொல்கிறது, வலுவான உடலமைப்பு, மரம் ஏறும் திறமை கைகொடுத்தாலும், எதிரிகளை பயமுறுத்த மிக முக்கியமாக முன்னங்கால்களை தூக்கி எழுந்து நிற்கும் திறமையையே வெகுவாக விஞ்ஞானிகள் சிலாகிக்கிறார்கள்! ஆம் மனித நாகரிகம் அவன் எழுந்து நின்ற பிறகே ஆரம்பித்தது

 

 http://valpaiyan.blogspot.com

பரிணாமம் - ஆரம்பம்

தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!, டார்வீன் பரிணாமத்தின் ஆரம்பம் மட்டுமே, அவரது காலத்தில் இவளவு நுண்ணிய விஞ்ஞானம் வளரவில்லை, ஆனால் இப்போதும் டார்வினை வைத்தே விவாதத்தை கொண்டு செல்வது சிறுபிள்ளை தனமான விவாதம், சமகாலத்தில் கண் முன் இருக்கும் உயிரினங்களை வைத்தே விவாதிப்போம்!



பரிணாமவளர்ச்சி என்பது உள்ளது சிறத்தல் என்ற பொருள் தரும் சொல்!, தன் தேவைகேற்ப ஒரு உயிரினம் சிறப்பாக இருப்பது போல் தோன்றினால் அவைகளுக்கு உருவ மாற்றம் தேவையில்லை, பல லட்சம் ஆண்டுகளாக கரப்பான்பூச்சி ”ஹிமோகுளோபின்” இல்லாமல் வாழ்வது, சுறா உருவத்தில் பெரிய மாற்றம் அடையாமல் இருப்பது இதற்கு சாட்சி! வளர்ச்சி மாற்றத்தில் அனைத்தும் அந்த உயிரினத்திற்கு சாதகமாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை! சில நேரங்களில் புலன்கள் செயலற்று போகலாம், அதற்கு பதிலாக வேறு புலன்கள் சிறப்பு தகுதி பெறலாம்! கண்பார்வை குறைவான விலங்குகளுக்கு நுகரும் சக்தி அதிகமாக இருப்பது இதற்குச் சான்று!


ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாக இருப்பது சுயதேவை மற்றும் சுற்றுபுற காரணிகளால் ஏற்படும் மரபணு மாற்றம், ஆம் பரிணாம வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் மரபணு மாற்றம் அல்லது மரபணு குறைபாடு! வம்சாவழியாக பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் ஜீன்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அப்படியே மாறாமல் இருப்பதால் இந்த மாற்றமும் இல்லாமல் உயிரினங்கள் உள்ளன! தற்பொழுது இருக்கும் சுற்றுசூழல் கூட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருந்தாலும் அவை நடைபெறும் காலம் மிக மிக மெதுவானது! ஒரு செல் ஒருநாளைக்கு ஆறிலிருந்து எட்டு முறை பிரிந்து அழியலாம், ஆனால் அதில் மாற்றம் ஏற்பட லட்சம் வருடங்கள் கூட ஆகும்!



குரங்குகளுக்கும், மனிதனுக்கும் முந்தய வம்சாவழியில் வந்த மனிதன் பூமியில் எல்லா இடங்களிலும் கால்வைத்து விட்டான், அவனது தோற்ற வேறுபாட்டிற்ற்கு காரணமே அது தான்! ஒன்றினைத்த கண்டமாக பூமியில் நிலபரப்பு இருந்த போது தோன்றிய உயிரினங்கள் இடபெயர்ச்சி செய்தவை கண்டங்கள் பிரியும் போது ஆங்காங்கே தங்கியது! ஆப்பிரிக்காவில் தங்கிய இனம் மரபுவழியாக மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் முந்தய தோற்றத்திலிருந்து சிறிதே மாறியது, குறிப்பாக உடல் முழுவது இருந்த ரோமத்தை இழந்ததை கூறிப்பிடலாம்! கிழக்கு ஆசிய பகுதிகளில் பனியுக காலத்திலிருந்தே வாழ்ந்து வரும் மங்கோலிய இனமக்கள் வேர்த்திருக்க அதிக வாய்ப்பு இல்லாததால், ”புருவமேட்டு கண் பாதுகாப்பு” அமைப்பு பெரிதாக தேவைப்படவில்லை!, ஒரு ஆப்பிரிக்க இனமும், ஐரோப்பிய இனமும் இணையும் போது புதிய தோற்றத்துடன் சந்தததி உருவாகுவது மரபணு மாற்றத்திற்கான ஆதாரம், அதுவும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம் எனலாம்!

கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை பெற்றிருப்பது அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு ஆதாரம், சித்திர எழுத்து வழக்கம் கொண்டவர்கள், சூரியன் என்பதை சூ ரி ய ன் என்று பிரித்து எழுத வேண்டியதில்லை, அவர்களது ஒரே ஒரு எழுத்து சூரியன் என்ற அர்த்தத்தை தரும்! உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மான்ட்ரின் என்ற சீனமொழியை போலயே ஜப்பனிஷ், கொரியன் இருந்தாலும் அவைகளுக்குள் மலையளவு வித்தியாசம் இருப்பது நமக்கு தெரியாது!, அவர்களது மொழியின் உருவ ஒற்றுமை அவர்கள் ஒரே இனத்திலிருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு மற்றொரு ஆதாரம்!

இயற்கை சுற்றுசூழல் மாற்றத்தின் மூலமே பரிணாம மாற்றம் கண்டுகொண்டிருந்த உயிரினங்கள் தற்போதைய நாகரிக உலகின் மூலமும் மாறி கொண்டிருப்பது கண்டறியபட்டுள்ளது!, அலாஸ்கா பகுதியில் குட்டைகளில் வாழும் தவளை இனங்கள் அனைத்தும் கால் வளர்ச்சியில் குறைபாடுடனும், சிலவற்றிற்கு நான்குக்கும் மேற்பட்ட கால்கள் இருப்பதும் கண்டறியபட்டுள்ளது!, பயிர்களுக்கு உபயோகிக்கும் பூச்சிகொல்லிகளால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கண்டறிந்தாலும் மாற்றம் எங்கே ஆரம்பிக்கிறது என்பது இன்றைய விஞ்ஞான உலகில் கண்டறிவது பெரிய கடினமல்ல, உயிரினத்தில் பரிணாம வளர்ச்சியின் பாதி கட்டத்தில் இருக்கும் தவளை மீன் போன்று தலைபிரட்டை வாழ்க்கை சிறிது நாட்கள் வாழ்ந்து பின் கால்கள் முளைத்து தவளையாகிறது, அப்பொழுது தான் அவற்றிக்கு வெளிப்புற ஆக்சிசனை சுவாசிக்கும் நுரையீரலும் வளருகிறது என்பதும் முக்கியமானது!, பூச்சிகொல்லிகளால் தலைபிரட்டைகள் முழுமையான தவளையாக முடியாமல் கால்கள் வளருவது தடைபட்டு மாற்று திறனுடன் உருவாகிறது!



மரபணு மாற்று விதையின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என அதிகாரபூர்வ ஆதாரம் நம்மிடம் இல்லையென்றாலும், அவற்றால் மரபணு குறைபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது! பரிணாம வளர்ச்சியை நம்பமறுக்கும் மதவாதிகள் கண்முன் மாற்றத்தை பார்ப்பார், கை, கால் இல்லாமல் குழந்தைகள் பிறக்கலாம், மீண்டும் ஊர்ந்து பழகி, வால் முளைத்து நாக்கை நீட்டி மனிதனும் ஒரு வகை பாம்பாகலாம்! மரபணு விதைகளை தடை செய்யவில்லை என்றால் எந்த கடவுளும் உயிரின அழிவை தடுக்க முடியாது என்பதே உண்மை!

 

http://valpaiyan.blogspot.com 



தொலைதூரத்தல் இருந்து வந்த கடவுள்


இரண்டாம் பாகம் 20-12-2009

நிச்சயம் உயிர்வாழ்ந்திருக்க முடியாது. அது சாத்தியமான நிலையும் இல்லை. நம்மில் எத்தனை பேர் லிமோரியாக் கண்டன் ஒன்று இருந்ததாக அறிந்திருக்கிறோம்? அப்படி ஒரு கண்டம் இருந்து பின்னர் அது கடல்கோள் காரணமாக கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது. இந்தியா சீனா, உட்பட இலங்கை தொடக்கம் மடகஸ்கார் மற்றும் மாலை தீவு அத்துடன், அவுஸ்திரேலியா அடங்கலாக ஒரு பெரிய கண்டம் இருந்தது. அதாவது இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா வரை நடந்தே செல்லும் அளவுக்கு இந்தக் கண்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக் கண்டத்திலேயே முதல் முதல் மனித இனம் தோன்றியதாகவும், பின்னர் படிப்படியாக அவர்கள் பல நாடுகளுக்குச் சென்றதாகவும் ஆங்கில விஞ்ஞானிகள் தெரிவிக்க்கின்றனர். உலகில் முதல் முதல் தோன்றிய மனிதன் கறுப்பு இன மனிதன் என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

லிமோரியாக் கண்டம் (lemuria) என்று நீங்கள் இணையத்தளங்களில் தேடிப்பார்ப்பீர்களானால், பல சுவாரசியமான விடயங்கள் வெளிவரும். அதாவது ஆணும் பென்ணும் ஒன்றாகக் கலந்த உருவமுடைய, கடல் வாழ் இனமாக மனிதன் முதலில் தோன்றியதாகவும், பின்னர் அந்த கடல்வாழ் பிராணி, தரையை அடைய பல மில்லியன் ஆண்டுகள் ஆனதாகவும் கூறப்படுகிறது, முதலை, நண்டு, போல கடலிலும் தரையிலும் வாழ கற்றுக் கொண்ட சில பிராணிகளில் நாமும் ஒருவகை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக இந்தப் பிராணிகள், கடலைவிட தரையிலேயே கூடுதலாக வாழக் கற்றுக் கொண்டன. இதன் காரணமாக இதன் இனப் பெருக்கம் வாழ்க்கை முறை என்பன தரையிலேயே தொடர ஆரம்பித்தன.

அதென்ன ஆணும் பெண்ணும் கலந்த உயிரினம் என்று கேட்கிறீர்களா, ஆம் அப்படிப்பட்ட ஒரு உயிரினம் இந்த உலகில் மிச்சம் உண்டு. ஆபிரிக்க காடுகளில் வாழும் ஒரு வகை நாக்குளிப் பூச்சிகள் ஆணும் பெண்ணும் உள்ளடக்கியவை எனக் கண்டறியப்பட்டுள்ளது, இனப் பெருக்கத்திற்கு ஆண் பெண்ணையோ அல்லது பெண் ஆணையோ நாடவேண்டியது இல்லை, அதுவாகவே கருத்தரிக்கிறது. இவ்வாறு அடையாளம் காணப்படாத ஆண் பெண் இருபாலும் கலந்த உயிரினம் வேறு சிலவும் இந்த உலகில் இருக்கலாம்.

பரிணாம வளர்ச்சி என்பதுடன் இயைவாக்கம் அடைவது என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று, அது இந்த பூமியில் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதாவது இலங்கையில் நிற்கும் ஒரு ஆட்டை அல்லது மாட்டை , ஐரோப்பாவிற்கு கொண்டுவந்தால், அது இங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னை இயைவாக்கம் அடையச் செய்யும், அது சில ஆண்டுகள் ஆகலாம் அல்லது, அது ஈன்றெடுக்கும் பிள்ளைகளாக இருக்கலாம், ஒரு வகையில் இயைவாக்கம் அடைந்தே தீரும் அதுவே ஆச்சரியம். அதாவது மாட்டின் தோல் கூடுதலான கொழுப்பைச் சேர்த்து , தோலின் மொத்தத்தை அதிகரித்தல், மற்றையது தோலில் கூடுதலான ரோமங்களை ஹர்மோன்கள் உருவாக்கும். இந்த ரோமங்கள் கூடுதலாக வளர்ந்தால் குளிரை தாங்கும் சக்தி இயற்கையாகவே உருவாகும்... இதுவே இயைபாக்கம் அடைவது. அதாவது ஒன்றை உள்வாங்கிக் கொள்வது எனலாம்.

லிமோரியாக் கண்டத்தின் வரைபடத்தை நாம் உற்றுநோக்கினால், அது இந்தியா, இலங்கை அவுஸ்திரேலியா அடங்கலாக பரந்து விரிந்து இருந்த ஒரு பாரிய கண்டம். அதில் இலங்கைக்கும் மாலை தீவிற்கும் இடையில், பெரு ஆறு, குமரி ஆறு, மூதாறு என்று பல ஆறுகள் ஓடியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது, அதாவது தற்போது கடலில் மூழ்கியிருக்கும் பரப்புகளில் ஒரு காலத்தில் அவை கடலுக்கு மேல் மட்டத்தில் இருந்த வேளை அங்கு ஆறுகள் கூட ஓடியுள்ளன. தற்போது மாலை தீவு என்றழைக்கப்படும் பகுதி ஒரு காலத்தில் ஓலை நாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. அதாவது லிமோரியாக் கண்டம் என்ற ஒன்று இந்தப் பூமியில் இருந்து பின்னர் அழிந்து போனது என்பதற்குச் சான்றாக உள்ளது இலங்கைத் தீவு, மாலை தீவு, மற்றும் மடகஸ்கார் தீவுகள் ஆகும். இவை கடலுக்கு நடுவில் இன்னமும் காணப்படுவதே அதன் கடைசி இருப்பின் ஆதாரமாகும்.

பல நூறு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு பாரிய நில நடுக்கம் காரணமாக, லிமோரியாக் கண்டம் துண்டுகளாக உடைந்தது, என்றும் அப்போது ஏற்பட்ட சுனாமியால் பல பகுதிகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது, அதில் மிக மிக உயரமாக, இலங்கை, மடகஸ்கார் மற்றும் மாலை தீவு போன்ற பகுதிகளே மிஞ்சி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது லிமோரியாக் கண்டத்தில் அதி உயர் மட்டத்தில் இருந்த இடங்களே தற்போது மிஞ்சி இருக்கும் சில நாடுகள். அதற்கு நல்ல எடுத்துக் காட்டு, மாலை தீவுகள். சுமார் 2,000 தீவுகள் இங்கு உள்ளது. அங்கு சென்று கடலுக்கு அடியே சுழியோடினால், மாலை தீவின் அடித்தளம் தெரியும். அங்கு பார்த்தால் மாலை தீவு ஒரு செங்குத்தான மலை என்பதைக் கண் கூடாககாணலாம், அதாவது கடலில் குச்சிகளை நட்டுவைத்தது போல இருக்கும்.

லிமோரியாக் கண்டத்தில் தோன்றிய மனிதன் போன்ற உருவமைப்புக் கொண்ட பிராணிகள் ஒளிரும் தன்மை உடையவை எனக் கூறப்படுகிறது, கடல் வாழ் பிராணிகள் சில தாமாகவே பலவண்ண ஒளிக்கதிர்களை தோற்றுவிக்கக் கூடியவை, உதாரணமாக ஜெல்லி மீன்கள். அதே போல பல விதமான நிறங்களுடன் கூடிய ஒளிக்கீற்றைத் தோற்றுவிக்கக் கூடிய, ஒரு பிராணியாக மனிதன் இருந்திருக்கவேண்டும் எனவும், கடலுக்கு அடியில் காணப்படும் சில கிறிஸ்டல்களை அவர்கள் வெளிச்சத்திற்கு பாவித்து வந்ததாகவும் ஊகங்கள் இருக்கின்றன. இதனாலேயே தற்போதும் மனிதன் உருவாகுவது பன்னீர் குடம் என்று அழைக்கப்படும் ஒரு திரவத்தில் தான். தாயின் கருப்பையில் காணப்படும் இந்த திரவ பலூனுக்குள் தான் இன்றுவரை மனிதன் உருவாகிறான்.

இவ்வாறு சில கண்டங்கள் அல்லது பாரிய நிலப்பரப்புக்கள் , நீரில் மூழ்கியதற்கு இந்து மதத்திலும் ஒரு சாட்சி இருக்கிறது, பகவத் கீதையிலும் சரி, மகாபாரத்த்திலும் சரி கண்ணன் ஆண்டுவந்த மதுரா என்னும் நகரம் கண்ணபிரான் இறந்ததும் கடலில் மூழ்கியதாக வரலாறு சொல்கிறது, அதாவது தான் ஆண்ட மதுரா நகரம் தான் இறந்ததும் நீரில் மூழ்கிவிடும் என கண்ணபிரான் சொல்கிறார், ஆகவே அங்கிருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு காயப்பட்டு உயிர் பிரியும் நிலையில் உள்ள கண்ணபிரான் சொல்வதாக பாரதத்தில் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் மதுரா நகரம் என்று ஒன்று உண்மையாகவே கடலில் புதைந்து கிடப்பதை ஆராச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்காக கண்ணபிரான் வாழ்ந்தார் பின்னர் இறந்தார் என்பதை நாம் உறுதிப்படுத்துவதாகச் சொல்லவில்லை, புராண நூல்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே கண்ணன் என்று அழைக்கப்படும் கடவுள் அந்தக் காலத்தில் ஒரு விஞ்ஞானியாகவும் இருந்திருக்கலாம், மறுப்பதற்கு இல்லை. இருப்பினும் மதுரா நகரம் எவ்வாறு அழிந்தது? ஏன் டைனசோர்கள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் மனிதன் தோன்றினான்? உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் 5அறிவு ஆனால் மனிதனுக்கு 6 அறிவு என்று ஏன் சொல்லவேண்டும், மற்றைய ஜீவராசிகளை விட நாம் ஏன் பல நூறு மடங்கு முன்னேறி, அறிவில் சிறந்து விளங்கவேண்டும்? இதுபோன்ற கேள்விகளுடன் தொலைதூரக் கடவுள் கட்டுரை அடுத்த வாரம் தொடரும்.... (ஞாயிறு)



தொலைதூரக் கடவுள்- பாகம் 3
27-12-2009

இவ்வாறு மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கும் என கண்ணபிரான் கூறினார். கண்ணன் அவதாரமாக இப் பூமியில் பிறந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அவர் மகாபாரதப் போரை நடத்தினார் என்பது பலருக்குத் தெரியும் அவர் எவ்வாறு இறந்தார் என்பது அனைவரும் அறிந்திருக்க சாத்தியம் இல்லை. மகாபாரதப் போர் முடிந்த பின்னர் மதுரா என்னும் நகரத்தை ஆண்டுவந்தார் கண்ணபிரான். அப்போது ஒரு நாள் அங்கு மிகவும் சக்திவாய்ந்த முனிவர் ஒருவர் வந்திருந்தார். கண்ணனின் குலமான யாதவ குலத்தில் இருந்த சிலர் ஒரு ஆணைப் பெண்போல வேடமிட்டு, அவரை ஒரு கர்ப்பிணி போல உருமாற்றி முனிவர் முன் நிறுத்தினர், அவளுக்கு பிள்ளை எப்போது பிறக்கும், பிறக்கப் போவது ஆணா இல்லை பெண்ணா என கேள்விகேட்டு முனிவரைச் சோதித்தனர்.

ஆத்திரமடைந்த முனிவர், இவள் ஒரு ஆண், ஆனால் 10 மாதத்தில் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பான், அந்தப் பிள்ளையால் உங்கள் யாதவ குலமே அழியும் எனச் சாபமிட்டார் என்று புராணம் கூறுகிறது. அதைப் போல 10 மாதத்தில் அவனும் ஒரு கடாயுதத்தை பிள்ளையாகப் பெற்றெடுத்தான், அதனைக் கொண்டு சென்று யாதவர்கள் கண்ணனிடம் காட்டினார்கள், அதனை துண்டு துண்டாக, நொருக்கி யமுனை ஆற்றில் கலக்கும் படி கண்ணபிரான் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். இருப்பினும் பொடி பொடியாக நொருக்கப்பட்ட அந்த உலோகம், யமுனை ஆற்றின் கரையில் ஈட்டியைப் போன்ற கூரான ஆயுதமாக ஒரு செடிபோல வளர ஆரம்பித்தது என்கிறது புராணம்.

பின்னர் ஒரு முறை கண்ணபிரான் தனது படைகளுடன் யமுனை ஆற்றைக் கடக்க முயற்சிகும் வேளையில், உட்பூசல் காரணமாக அவ்விடத்தில் யாதவர்கள் தமக்குத் தாமே மோதிக் கொண்டனர். அதில் அவர்கள் யமுனை ஆற்றின் கரையில் காணப்பட்ட அந்த கூர்மையான ஆயுதச் செடியைப் பயன்படுத்தி மோதி பலர் இறந்தனர். இதனை சமாளித்து, களைத்துப் போன கண்ணபிரான் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது அங்கு வந்த வேடுவன் ஒருவன், இந்த கூர்மையான செடியைக் கண்டு அதை எடுத்து தனது அம்பிற்கு பயன்படுத்தினான், பின்னர் அவன் அங்கு வரும் போது தூரத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த கண்ணபிராணை ஒரு மான் என நினைத்து தன் அம்பை எய்கிறான்.

காயமடைந்த கண்ணபிரான் உயிர் பிரியும் நிலை நெருங்கியது, அவர் அப்போது தனது சீடர்கள் சிலரை அழைத்து தான் இறந்தால் மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கிவிடும், நீ சென்று அங்குள்ள மக்களை வெளியேற்று அதுவரை நான் இறக்கமாட்டேன் என்று சொல்கிறார். அந்தச் சீடர்களும் அவ்வாறே சென்று மக்களை அப்புறப்படுத்துகிறார்கள். கண்ணபிரான் இறந்ததும் மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே சுனாமி, மற்றும் நிலநடுக்கம், என்பன நடந்ததற்கு புராணங்களும் ஒரு சாட்சியாக இருக்கின்றன.

டைனசார்களைப் பற்றி நோக்குவோம், மனிதன் தோன்றுவதற்கு முன்னர் டைனசார்கள் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஜெராசிக் என்பது ஒரு காலம், கற்காலம் பனிக்காலம் என்பது போல டைனசார்கள் வாழ்ந்த காலத்தை ஜெராசிக் காலம் என அழைக்கிறார்கள், இவை அழிவுற்றதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன, முதலாவது காரணம், உணவு பற்றாக் குறை என்று கூறுகிறார்கள், இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் டைனசார்களின் மாமிச பட்சி தாவர பட்சி இரண்டுமே காணப்படது, மாமிசம் தான் முடிந்திருந்தாலும் தாவரப் பட்சி உயிர் வாழ்ந்திருக்கும். இரண்டாவதாகச் சொல்லப்படும் காரணம் சூரியனில் அதிகரித்த வெப்பக் குழம்பு அதில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இவை இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போது டைனசார்களின் எச்சங்களை அகழ்ந்தெடுத்து ஆராட்சியாளர்கள் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் அவற்றின் மரபணுக்களையும் ஆராய்ந்துள்ளனர். இதன் மூலம் வெளிவந்த தகவல் என்னவென்றால், டைனசார்கள் இடும் முட்டை, அதில் உள்ள குஞ்சுகள் ஆணா இல்லைப் பெண்ணாகப் பிறப்பதா என்பதைப் புறச்சூழலில் உள்ள வெப்பத்தைக் கொண்டே முட்டை முடிவு எடுக்கிறது. ஏன் இன்று கூட மணிதனுக்கு ஏன் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பிறக்கிறது என்பது குறித்து சரியான விளக்கத்தை யாராலும் கொடுக்கமுடியாது. ஒரு பிள்ளை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கவேண்டும் என்பதைத் தூண்டும் காரணி எது என்று விஞ்ஞானிகள் இதுவரை சரியாக கண்டறியவில்லை.

ஆனால் டைனசாரில் அது கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது. புறவெப்பச் சூழலில் உள்ள வெப்ப நிலையைப் பொறுத்து ஒரு முட்டைத் தொகுதி அப்படியே முழுவதும் ஆண் டைனசார்களா பிறந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சில முட்டைகள் முழுவதும் பெண்ணாகப் பிறந்துள்ளது. அப்படி இருக்கும் சமயத்தில், விண் கல் ஒன்று பூமி மீது மோதியதன் காரணமாகவே இவை அழிந்திருக்க சாத்தியம் உண்டு என்று தற்போது நம்பப்படுகிறது. அண்டவெளியில் பல கோடி விண் கற்கள் உலவி வருகின்றன, சில நீள்வட்டப் பாதையிலும், சில நேர்கோடாகவும் பயணித்து வருகிண்றது. இதில் சில கற்கள் இலங்கைத் தீவைவிடப் பெரியவையும் உண்டு, அத்துடன் உலகத்தை விடப்பெரிய கற்களும் உண்டு,

சில விண் கற்கள் விண்வெளியில் பறந்துவந்து பூமியைக் கடக்கும்போது புவியீர்ப்பு விசையால் கவரப்படுகிறது, அவ்வாறு பூமியின் காற்று மண்டலத்தில் அது பிரவேசிக்கும்போது, அதன்வேகம் காரணமாக காற்றுடன் உராய்வடைந்து நெருப்பு பிளம்பாக மாறி உருகும். சுமார் 50 மீட்டர் அகலமான கல் பூமியில் வந்து வீழ்ந்தால் அது தரையை அடையும்போது ஒரு எலும்பிச்சைப் பழம் அளவும் தான் தரையை வந்து சேரும் மீதிக் கல் காற்றில் எரிந்துவிடும். இவ்வாறு எரியும் கல்லில் இருந்து வால்போல ஒரு வெளிச்சம் தோன்றும் அதனையே நாம் வால்வெள்ளி என்கிறோம், பூமியில் சுமார் ஒரு நாளைக்கு எத்தனையோ விண் கற்கள் வீழ்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை பூமியின் தரைக்கு வருவதே இல்லை. இந்தக் காற்று எமக்கு ஒரு கடவுள் ஒரு காவல் தெய்வம் எனலாம்.

இப்படியான ஒரு பெரிய கல் பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் மோதியுள்ளது, அக் கல்லு மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும், அதில் இருந்து புறப்பட்ட சாம்பலும், தூசித்துகள்களும் பூமியின் காற்றில் பல ஆண்டுகளாக மிதக்க, சூரியனின் ஒளி அப்படியே பிரதிபலிக்கப்பட்டுள்ளது, இதனால் வெப்பம் இழக்க நேரிட்டு, பூமியின் பல பகுதிகளில் குளிர் சூழ்ந்தது. அப்போது இருந்த டைனசார்கள் திடீர் மாற்றத்தால் இறக்க அது இட்ட முட்டைகள் குஞ்சுபொரித்தது. இருப்பினும் வெப்பநிலை மாற்றத்தால் அவை அனைத்தும் அலிகளாப் பிறந்ததாகக நம்பப்படுகிறது, பின்னர் பிறந்த பல டைனசார் குட்டிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அவை பூண்டோடு அழிந்ததாக சில விஞ்ஞானிகள் தற்போது விளக்கம் கூறுகிறார்கள், இதனை, மறுப்பதற்கில்லை.

ஒருவேளை காற்றில் உயிர்வாழும் ஒருவகை பக்றீரியா அல்லது வைரஸ் எமது உடலில் உள்ள இனப்பெருக்க உறுப்பைத் தாக்கவல்லது என ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம். அதனை கட்டுப்படுத்தவே முடியாது என்றால் எம் இனம் அழிவது நிச்சயம். மனிதன் தற்போது அறிவியலில் வளர்ச்சியடைந்து இருப்பதால், இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தவிர்த்து வருகிறான். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று பலவருடங்களாக சொல்லப்பட்டு வந்தது, அது பொய் என தற்போது அக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது. அது ஏன்? என அடுத்த தொடரில் ஆராயலாம்,                               
 தொலைதூரக் கடவுள பாகம் 4  
வெளியான தேதி : 07.01.2010


குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும், பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் முறையே :


இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும்

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும்

500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின.

475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின.

360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது

300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும்

200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும்

150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும்

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும்

2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது.

200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ் எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன் தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும் ஆய்வாளர்களும் அகழ்வாரய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சூரிய ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது எமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் விம்பமாகத் தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள் சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத் தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விடயம்.

உதாரணமாக ஒரு மனிதன் முதல் முறையாக காயப்படுகிறான் என்று வைத்துக்கொள்வேம், அவனுக்கு குருதிப்பெருக்கு அதிகமாகி, ரத்தம் கூடுதலாக வெளியேறுகிறது. அப்போது இரத்த அழுத்தம் குறைகிறது, உடனே மூளை உடலில் உள்ள ரத்த நாளங்கள் அனைத்தின் விட்டத்தை குறைக்க சமிக்ஞைகளை அனுப்பி, அதன் விட்டத்தைக் குறைத்து ரத்த அழுத்தத்தை சீர்செய்ய முனைகிறது, இந்த அறிவு மூளைக்கு எவ்வாறு வந்தது என்று யாராலும் கூறமுடியுமா? இல்லை ஒரு எண்ணைத் துளியை எடுத்து நீரில் போட்டால் அது ஏன் வட்டமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ தோன்றுகிறது, ஏன் ஒரு முக்கோணமாகவோ அல்லது சதுரமாகவோ தோன்றுவது இல்லை எனக் கூறமுடியுமா? அல்லது தண்ணீரில் கல்லை எறிந்தால் அதில் உண்டாகும் அதிவலைகள் ஏன் வட்டமாக இருக்கவேண்டும்?

அதாவது இவ் உலகில் பொளதீகம் என்பது மாறுவது இல்லை. சூரிய ஒளி, ஒளி விம்பம், ஒலி அதன் வேகம் என்பன மாறவில்லை, அதற்கு ஏற்றால் போல் நாம் மாறி இருக்கிறோம். இரவில் பார்க்கும் திறன் பூனைக்கும் சில மிருகங்களுக்கும் உண்டு, இவற்றில் சில பகலிலும் இரவிலும் பார்க்கும் திறன் கொண்டவை, இவ்வளவு பரிணாம வளர்ச்சியடைந்த மனிதனுக்கு ஏன் இரவில் பார்க்கும் கண்கள் இல்லை? ஏன் இயற்கை எமக்கு அதனைத் தரவில்லை? இப்படி பல கேள்விகள் உண்டு.

மொத்தமாகச் சொல்லப்போனால், இதை எல்லம் நெறிப்படுத்த ஒரு காரணி உண்டு, ஆனால் அது உடலில் இருக்கிறதா இல்லை புறச்சூழலில் இருக்கின்றதா என்பதே பெரும் கேள்வி. ஆனால் நிச்சயம் அது கடவுள் அல்ல.. ஆனால் அது ஒரு சக்தி. மற்றைய விலங்கினத்தில் பல மாறுதல்கள் ஏற்படுத்தாது ,மனிதனில் மட்டும் இவ்வாறான பல மாற்றங்கள் ஏற்படக் காரணம் என்ன? எமது உடலில் குறிப்பாக மூளை இயங்கும் தன்மையை நெறிப்படுத்தும் மரபணு எங்கிருந்து வந்தது என்பதே தற்போதைய பெரும் கேள்வி. ஏனெனில் அதில் 100 ஆகப் பிரித்து ஒரு பங்கு ஒரு விலங்கினத்திற்கு சென்றிருந்தால் கூட அந்த விலங்கினம் கொஞ்சம் கூடுதலான மூளையுடன் செயல்திறன் மிக்கதாக மாறியிருக்கும்.

விலங்கினங்கள் பிறந்த அதே உலகில் நாமும் பிறந்தோம் இருப்பினும் எம்மில் மட்டும் ஏன் இந்த அபார மூளை வளர்ச்சி? விலங்குகளை விட நாம் ஏன் பல லட்சம் மடங்கு உயர்வாகக் காணப்படுகிறோம். இது ஒரு மர்மமான விடயம், கேட்டால் 6 ஆவது அறிவு இருப்பதாகச் சொல்லி தட்டிக் கழித்துவிடுவார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது விலங்கினத்திற்கு 5 அறிவு மனித இனத்திற்கு 6 அறிவு என்பார்கள் அப்படியாயின் இந்த 1 அறிவு வித்தியாசத்தில் பல லட்சம் மடங்கு நாம் உயர்வாக இருக்கிறோமா? ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.

எமது உடலில் சில மரபியல் பண்புகளை சந்ததிக்குக் கடத்தும் செயல் இருக்கிறது மறுப்பதற்கு இல்லை. அதேபோல மனித உடலில் இயங்கும் சில தானியங்கி உறுப்புக்கள் இவ்வாறான பண்புகளைக் கொண்டு இயங்குகின்றன. குறிப்பாக நான் மேற்குறிப்பிட்டது போல சில மரபியல் பண்புகள் மூளையில் ஏற்கனவே பதிவாகி இருப்பதால் அவை அதுபோல இயங்க ஏதுவாக அமைகிறது. இருப்பினும் மூளையில் சேகரிக்கப்படும் சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் செல்கள் அந்த நினைவுகளை சந்ததிகளுக்கு கடத்துவது இல்லை அது ஏன்? உதாரணமாக ஒருவர் ஓவியம் வரையும் திறமைகொண்டவராக இருக்கலாம், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளில் ஒன்று நிச்சயம் ஓவியம் வரையும் திறனைக் கொன்டிருக்கும், ஆனால் அவர் நினைவுகளைச் சுமக்கும் செல்கள் அதனை தன் பரம்பரைக்கு கடத்துவது இல்லை.

இது என்ன ஒரு அறிவியல் அற்ற கேள்வி என நீங்கள் எண்ணலாம், அது மூளையில் சேகரிக்கப்படும் ஒரு விடயம், அப்படியாயின் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்திருக்கும், கரு உருவாகும் போது குறிப்பிட்ட செல் மூளையை அடைந்து அந்த சில சம்பவத்தை ஏன் நினைவில் வைத்திருக்கக் கூடாது? இப்படி ஏன் நாம் படைக்கப்படவில்லை? என எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்தது உண்டா? நாம் கண்களால் பார்க்கும் காட்சிகள் சுமார் 3 செகண்டுகள் நிலைத்திருப்பதால் அவை மூளையின் முதல் சேமிக்கும் பரப்பில் பதிவாகின்றன. சில சம்பவங்கள் எம்மைக் கவர்ந்தால் அவை இரண்டாவது பரப்பில் சேமிக்கப்படுகின்றன, அதை நாம் யோசித்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் சில அதிர்ச்சிச் சம்பவங்கள் எமது மூளையில் மூன்றாவது படலத்தில் சேமிக்கப்படுகின்றன, அவை வாழ்நாளில் மறக்கமுடியாதவையாக, அல்லது நிதம் நினைவில் இருக்கக்கூடியவையாக பதிவாகின்றன.

உடலில் எப்பகுதியிலாவது ஒரு சிறு குண்டூசி குத்தினாலும் நரம்புகள் அதை மூளைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நாம் வலியை உணர்கிறோம், ஆனால் மூளையில் இருந்து மூளைக்கு உணர்ச்சி நரம்புகள் ஏதும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?அதாவது மூளையின் வெளிப்புறத்தை நீங்கள் தொட்டால் அது மூளைக்கே தெரியாது. அல்லது மூளையை ஒரு ஊசியால் குத்தினால் மூளை அதனை உணராது. இவ்வாறு அமைய காரணம் என்ன, மனிதனின் உடலமைப்பு இந்த பூமியோடு ஒத்துவாழ ஏதுவாகவா அமைந்திருக்கிறதா? இல்லை மனிதனும் விலங்குகளைப் போல தோன்றி உயிர் வாழ்ந்துகொண்டிருந்த சமயம், அவனை நெறிப்படுத்த, அவன் மூளையை சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற புத்திஜீவி ஒன்று முயன்றதா?

ஆதி காலம் தொட்டு கடவுள் மனிதனைப் படைத்ததாகவும் அவர் வானத்தில் இருந்து வந்ததாகவும் ஏன் எல்லா மதங்களும் சொல்கின்றன? ஒரு மதத்திலும் மண்ணுக்கு அடியில் இருந்து கடவுள் வந்ததாக சொல்லப்படவில்லையே, கோவில் தொடக்கம் சர்ஜ் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மீது ஏன் உலோகத்தால் ஆன ஆண்டனா போன்ற (உள்வாங்கிகள்) அமைப்பு காணப்படவேண்டும்? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மனிதர்கள் தங்கியிருந்த இடம் தான் பின்னர் கோயில் என்று அழைக்கப்பட்டதா, இது பேன்ற மர்மமான கேள்விகளின் விடைதேடி அடுத்த பாகம் வெளியாகும்...


http://www.athirvu.com/தொலைதூரத்தல் இருந்து வந்த கடவுள்