வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
தலை முடிப் பாதுகாப்பிற்கு
.jpg)
முடியை நாம் சீராக பராமரித்து வந்தாலே போதும். அது தானாக வளரும்.தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும், ஈரமான தலையை சீப்பைக் கொண்டு வாராமல் இருப்பதும், கண்ட கண்ட ஷாம்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்தாமல் இருந்தாலும் போதும் தலை முடி அழகாக வளரும்
. .jpg)
.jpg)
மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அதை வெயிலில் காய வைத்து தொடர்ந்து தலையில் பூசி வர முடி உதிர்தல் குறைந்து நன்கு முடி வளரும்.மருதாணி இலையுடன் நிலாவாரை (நிலவாகை) இலையை சேர்த்து அரைத்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர தலைமுடியின் செம்பட்டை நிறம் மாறும்.மருதாணிப் பூவினை தொடர்ந்து தலையில் சூடி வர பேன் தொல்லை விலகும்.
www.tamilkathir.com
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
அழகு
இன்று முக அழகை பராமரிப்பதற்கென்றே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. இதற்குக் காரணம் அழகு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையேஅதிகம் ஏற்பட்டதன் விளைவுதான். இயற்கையான மூலிகைகளைக் கொண்டே முகத்தில்பொலிவை ஏற்படுத்த முடியும் என்பதை அன்றே சித்தர்கள் கண்டறிந்துகூறியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் இயற்கையின் மாசுபாட்டால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் முகம் மென்மையான பகுதியாகும். அகத்தின் அழகு முகத்தில்தெரியும் என்ற பழமொழியின்படி உடலின் உள்ளே உள்ள உறுப்புகளின் பாதிப்புமுகத்தில்தான் தெரியும்.
இளம் வயதினருக்கு முகப்பரு, நடுத்தர வயதினருக்கு கரும்புள்ளி, முகக்கருப்பு, 45 வயதை தொடுபவர்களுக்கு முகச் சுருக்கம் என அனைத்துவயதினரையும் கவலை அடையச் செய்யும் பகுதி முகம்தான்.
உடலின் முக்கிய உறுப்பான கண்கள், வாய், மூக்கு அமைந்துள்ள பகுதியும் முகம்தான்.
முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைக்க சில எளிய வழிமுறைகளை அறிந்துகொள்வோம்.

முகச் சுருக்கம் நீங்க
காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி.
எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி
எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.
காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும்.
காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.
கரும்புள்ளி மறைய
தக்காளி சாறு - 50 மி.லி.
எலுமிச்சசை பழச்சாறு - 10 மிலி
கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரில் முகத்தைகழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால்கரும்புள்ளி மாறும்.
முகக் கருப்பு மறைய
மஞ்சள் தூள் - 10 கிராம்
கோதுமை பவுடர் - 10 கிராம்
எடுத்து கலந்து பேஸ்ட் மாதிரி செய்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகம் கழுவினால் முகச்சுருக்கம் முகக் கருப்பு மாறும்.
முகம் பொலிவு பெற
மகிழம் பூ பொடி - 250 கிராம்
கிச்சிலி கிழங்கு - 125 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 125 கிராம்
கோரைக் கிழங்கு - 150 கிராம்
எடுத்து இடித்து அதனுடன் சந்தனத்தூள் - 100 கிராம் சேர்த்து ஒன்றாக கலந்துதினமும் சிறிது எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம்கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் முகம் பொலிவு பெறும்.
www.nakkheeran.in
மனைவிக்கு சில அறிவுரைகள்
மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த காலம் தொட்டே பல விஷயங்கள் கூறப்பட்டு வருகிறது. இவை பெண் அடிமைத்தனத்திற்காகக் கூறப்பட்டவை என்று நீங்கள் நினைத்தால் இது உங்களுக்கல்ல.
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.
நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
http://tamil.webdunia.com