வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.
உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிண்டி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்.
www.tamilkathir.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக