வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர்.
ஆனால் எவ்வளவுக்கு தொழில் நுட்ப ரீதியில் முன்னேறுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக பூமியின் தொடக்காலம் பற்றிய கேள்விகள் ஆழமாகியுள்ளதோடு, அதை ஒட்டிய பல்வேறு திசைகளும் வெளிப்பட்டுள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில், பூமி தற்போது உள்ள நிலையை அடைவதற்கு முன், என்ன வடிவத்தில் இருந்தது என்பது பற்றிய நிலைப்பாடுகள் பல மாறியுள்ளன.
ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் 1924-இல் வெளியிட்ட தனது ஆய்வுக்கட்டுரையில், கார்பன் மூலக்கூறுகள் நிறைந்த பூமியின் நீர், வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னல் ஆகியவற்றிலிருந்து உருவான குழம்பிலிருந்து, உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின என்றார். மிகவும் பிரபலமடைந்தத இக்கோட்பாட்டின் சாத்தியக்கூற்றை ஆராய 1953 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹெரால்ட் யூரேயின் மாணவரான ஸ்டான்லி மில்லர் ஈடுபட்டார்.
பூமி உருவாவதற்கு முன்னர் இவ்வுலகம் இருந்த நிலைமையை செயற்கையாக உருவாக்கி, அதில் உண்டாகும் மாற்றங்களை ஆராய்வதே அவரது நோக்கம். மூடிய தெர்மா குடுவை போன்ற அமைப்பில் நீரையும் வாயுவையும் அடைத்தார்.
வளி மண்டலத்தில் ஏற்பட்ட மின்னலுக்கு பதிலாக, அதனுள் மின்சாரத்தை செலுத்தினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு, அதிலிருந்த நீர் பழுப்பு வண்ணமடைந்து, புரோதத்தை உருவாக்கக்கூடிய அமினோ அமிலம் தெர்மா குடுவையில் படிந்திருந்ததை அவர் கண்டார். தெளிவுப்படுத்தி எடுக்கப்பட்ட கலவையில் உயிர்களின் அடிப்படை இயக்கத்திற்கு இன்றியமையாத பல மூலக்கூறுகளையும் கண்டுடறிந்தார். மில்லரின் இந்த சோதனை மூலம், தொன்மையான நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான குழம்பிலிருந்து உயிர் உருவானது என்ற கண்டுபிடிப்பு, பூமி கோளில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களினால் உயிர்கள் தோன்றியதற்கான ஆதாரமாக புகழப்பட்டது
http://www.mykathiravan.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக