Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், ஜூன் 16, 2011

ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.



சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதிக்கு நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டெல்அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பேராசிரியர் மைக்கேல் ஒவாடியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் பட்டையின் பெருமை தெரியவந்தது.

மறதி நோய்க்கான காரணமும் தீர்வும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வு முடிவில் வெளியாகி உள்ள தகவல்கள்: உணவில் ருசி மற்றும் வாசனையை அதிகரிக்கவும், எளிதில் செரிமானமாவதற்கும் சேர்க்கப்படும் தாவரப் பொருளான பட்டை மறதி நோய்க்கும் மருந்தாகிறது.

பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.

இந்த பக்டீரியாக்கள் மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும்.

மறதி நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும்கூட பட்டையை தேவையான அளவு உட்கொள்ளலாம். அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 10 கிராம் என்ற அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

http://www.lankasritechnology.com

கருத்துகள் இல்லை: