Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

சனி, செப்டம்பர் 18, 2010

வர்ம புள்ளிகள் 1

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


உடலின் பக்கவாட்டு வர்மம் (அடப்பம் சார்ந்த வர்மம்)




அடப்ப காலம்: மனதில் மறைந்து இருக்கும் மாயை அடங்கி இருக்கும் பகுதி அடப்ப காலம். ஆஸ்மா தாக்குதல் உடனே சரியாகும். இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும்.

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.





               இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன.
 

அவை நீரிழிவு, இரத்த அழுத்தம்.

இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும்.

சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது.

இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.  அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும்.

ஆப்பிள் பழம் இதயத்திற்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.

“An apple a day, keeps the doctor away”  இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும்.  

இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும்.

வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம் அளிப்பவை.

நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது.  ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  இதனை ஜாமாகவும், இலேகிய மாகவும் செய்து சாப்பிடலாம்.

மார்பில் வலியும், மரத்துப்போன உணர்வும் ஏற்பட்டால் உடனே திராட்சைச் சாறு அருந்தலாம்.  இது வலியைக் குறைக்கும் இதய நோயாளிகள் தினமும் திராட்சை சாறு பருகுவது நல்லது.  அது நோயைக் குணப்படுத்த உதவும்.

ஆரஞ்சு பழமும், அதன் பழச்சாறும் இதயம், மார்புநோய் போன்றவற்றிற்கு சிறந்த டானிக் ஆகும்.  இதனை இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் தினமும் அருந்துவது நல்லது.

அதுபோல் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, அத்திப்பழம் போன்றவை இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன்  இதயத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

உடலில் உள்ள அதிக உப்பைக் குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கனிகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான கனிகளை உண்டு இதயத்தைப் பாதுகாப்போம்.


http://www.nakkheeran.in

நினைவாற்றல்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.  இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான்.  நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது.  இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரைத் தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள்.  கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம்.

பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளை பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.

அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும. 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ் தாது உப்பு இருக்கிறது.  குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும்.  செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள்.  இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.

சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.  இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை,  பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது.  இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான்.  இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும்.  மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.


http://nakkiran.com/

ஞாயிறு, ஆகஸ்ட் 01, 2010

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மூளை வளர என்ன சாப்பிடலாம்? 

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

புதன், ஜூலை 28, 2010

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

படிக்க... ஜெயிக்க.

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், "கல்வி என்பது என்ன?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு, "நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும். ஆனால், அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இருக்கிறதோ... அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி" என்றாராம் ஐன்ஸ்டீன்.
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-47

உடலை விட்டு வெளியேறும் ஆன்மா!


மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். அவை Out of body experiences (OBE) என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் ஆராயப்பட்டு வருகின்றன.
வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.




மரணத்துக்குப் பின் என்ன?


ரேமண்ட் மூடி தன் ஆராய்ச்சி முடிவில் மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள் இவை தான்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்

செவ்வாய், ஜூலை 27, 2010

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமி தோன்றியது எப்போது?

தற்போது இந்த பூவுல கில் மனிதர் கள் எண் ணற்ற அதிசயங்கந ளயும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.
முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,

ஞாயிறு, ஜூலை 25, 2010

வர்மத்தின் மர்மங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.





                      அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம்  அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை.  இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார்.  காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங்கியுள்ளது.

சனி, ஜூலை 24, 2010

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர்.

வெள்ளி, ஜூலை 23, 2010

ஆயுளைப் பெருக்கும் வாழைப்பூ

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூக்கள் நமக்கு மன அமைதியையும், நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன. இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

 
தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.

நார் சத்து

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.

எப்படி தூங்கவேண்டும் ?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம். சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.

செவ்வாய், ஜூலை 20, 2010

எக்காலத்திலும் கிடைக்கும் நார்த்தம்பழத்தின் நன்மைகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும்.

உலகம் உங்களை மதிக்க வேண்டுமென்றால் ?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam. 

மாபெரும் சபையினில் நீ நடந்தால்… நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கிறார்களே, அதற்கெல்லாம் என்ன பொருள்?

கடலுக்குள் ஆய்வு நிலையம்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நிலவில் கால்பதித்த சாதனை `மனிதனின் சிறிய அடி’ என்று வர்ணிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த பெரிய (அடியாக) திட்டமாக செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது. நிலவைவிட செவ்வாய் அதிக தூரத்தில் உள்ள கோளாகும். மேலும் அங்குள்ள சீதோஷ்ண நிலை பூமி, நிலவு இரண்டையும்விட பலவிதங்களில் மாறுபட்டது. உதாரணமாக பூமியைவிட 6-ல் ஒரு பங்கு ஈர்ப்பு ஆற்றல்தான் நிலவில் காணப்படுகிறது.

பழைய சாதத்துல வியக்கத்தக்க‌ இவ்வளவு விஷயமா?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய.. முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

வெள்ளி, ஜூலை 16, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


 கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன.

எலிகளை விழுங்கும் தாவரம் கண்டுபிடிப்பு!



வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள்