Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூன் 29, 2010

சூரிய நமஸ்காரம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும், ஆதாரமாக விளங்குவது சூரியன். நாம்இரவில் உறங்கி காலையில் எழும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் மிகவும்சோர்வான நிலையில் இருக்கும். இரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும். காலையில்எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம்அதிகரித்து உடலும் உள்ளமும் சுறுசுறுப்படையும்.

உடல், உள்ளம், மூச்சு, ஆன்மா இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகநலமாகச் செயல்பட வைப்பதே சூரிய நமஸ்காரமாகும். சூரிய நமஸ்காரத்தில் உள்ளபன்னிரண்டு யோகாசன நிலைகளை சென்ற இதழ்களில் தெரிந்துகொண்டோம் சூரியநமஸ்காரத்தின் பன்னிரண்டு நிலைகளில் ஒன்றின் தொடர்ச்சியாகவே மற்றொன்றுவரவேண்டும். நிலை ஒன்றில் துவங்கி ஏறுவரிசையில் எட்டு நிலைகள், இறங்குவரிசையில் நான்கு நிலைகள் என மொத்தம் பன்னிரண்டு நிலைகள் வரைசெய்யும்போது ஒரு சுற்று முடிவடையும். மொத்தம் பன்னிரண்டு நிலைகளில்எட்டுவகையான ஆசனங்கள் அடங்கும். இறங்கு வரிசை நிலையில் சூரிய நமஸ்காரம்செய்யும்போது நான்கு ஆசனங்கள் சுற்றின் பின் பகுதியில் மீண்டும் வரும்.ஒவ்வொரு நிலையிலும் ஐந்து முதல் பத்து வினாடிகள் இருந்து பின்னர் அடுத்தநிலைக்கு செல்ல வேண்டும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதினால் நமக்குகிடைக்கும் பலன்கள்

* அகந்தை நீங்கி மனம் அமைதி பெறும்.

* சுயக்கட்டுப்பாடு வளர்ச்சி பெறும்

* விழிப்புணர்வு அதிகரிக்கும்.

* முகத்தசைகள், கண்கள், மூளை, இதயம் போன்ற உறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

* நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நல்ல நினைவாற்றலும் ஆழ்ந்த கவனமும் ஏற்படும்.

* பார்வை கூர்மையடையும். தைராய்டு மற்றும் பாராதைரய்டு சுரப்பிகளின் செயல்திறன் அதிகரிப்பதினால் தைராய்டு குறைபாடுகள் சரியாகும்.

* வயிற்று நாளங்கள் சிறப்பாக செயல்பட்டு ஜீரண மண்டலம் வலிமை பெறும்.

* நுரையீரலின் சுருங்கி விரியும் செயல்திறன் அதிகரிக்கும்.

* உள்ளங்கைகள், மணிக்கட்டு, மற்றும் முழங்கைகள், தோள்கள் வலிமைபெறும்.

* தசைகளுக்கும் எலும்பு மூட்டுகளுக்கும் தேவையான நெகிழ்வுத்தன்மை கிடைப்பதினால், தசைகள், கால்கள் , பாதங்கள் சீராக வலிமை பெறும்.

* உடலின் செல்களில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு செல்கள் புத்துணர்வுடன் இயங்கும்.

* உடலின் உயிர்சக்தி அதிகரித்து உடல் நலமடையும். உடலின் இயக்கங்கள் சீரடையும்.

* உடலும், மனமும் சமநிலையில் இயங்கும்.

சூரிய நமஸ்காரம் என்பது வெளியில் இருக்கும் சக்தியின் உருவமான சூரியனைவழிபட்டு, நம்முடைய கட்டுப்பாட்டில் சுவாசத்தினை முறைப்படுத்திஇயங்குவதாகும். நம் உடலின் உள்ளே தானே இயங்கக்கூடிய உறுப்புகளையும்முறையாகச் செயல்படச் செய்து, உயிர்ச் சக்தியைத் தூண்டி நம்மை நாமேபலப்படுத்த உதவும் ஓர் அற்புத பயிற்சியாகும்.

ஐந்து வயது முதல் எண்பது வயதிற்கு உட்பட்டவர்கள் வரை சூரிய நமஸ்காரம்செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் நல்லது. அதுவும் குறிப்பிட்ட காலைநேரத்தில் செய்வது மனதிற்கு ஒரு ஒழுக்க முறையை கொண்டுவரும். பன்னிரெண்டுஆசனங்களையும் அவரவர் வேகத்திற்கு, உடல் தகுதிக்கு ஏற்ப, 5 முதல் 15நிமிடங்கள் செய்யலாம். தினமும் உலகிற்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்சூரிய பகவானின் திருநாமத்தை அதற்குரிய மந்திரத்தோடு உரக்கக் கூறிநமஸ்காரம் செய்து வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று நலமுடன்வாழ்வோம்.




www.nakkheeran.in

கருத்துகள் இல்லை: