Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூன் 29, 2010

உண்மை என்றால் என்ன!?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

”வாய்மையே வெல்லும்” என்று சொல்லித்தான் இந்தியாவில் வளர்க்கப்படுகிறோம். ஆனால், இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேற்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, ஒரு விடயம் உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பப்படுகிறது, அதாவது அந்த இரண்டு பரிமானத்தை(பரிணாமம் இல்ல) தாண்டி வேறு இல்லை என்று அர்த்தம்!


உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே,
அது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க படுவதே ஆதாரப்பொருள், முடிவில்லாது முடிக்கப்படும் விவாதங்கள் இரு தன்மையிலும் நிலை கொள்கிறது, அது வாதி, பிரதிவாதிகளின் நம்பிக்கை தன்மையின் அடிப்படையில் ”முடிவில்லாத முடிவிலியாக முடிவுசெய்யபடுகிறது”(இப்பவே கண்ண கட்டுதே), ஆனாலும் அது உண்மையா, பொய்யா என்பது முடிவில் முடியாது,(மூன்றாம் பரிமானம்!?)

வாதங்களில் வாதி, பிரதிவாதியின் முன்முடிவுகளே உண்மையாக நம்பபடுகிறது, இரண்டு வாதிகளாலும் சில நேரங்களில் விட்டுகொடுக்க பட்டாலும், வாதி/பிரதிவாதியின் நிலைபாடு மாறுவதே உண்மையான உண்மையின் வெற்றி, ஆனாலும் எல்லா வாதத்திலும் இது நடக்கிறதா என்பது கேள்விகுள்ளாக்கபடவேண்டிய உண்மை, அவரவர் நம்பிக்கையை உண்மையென நம்பும் போது, உண்மையான உண்மையை உண்மை என நம்ப உண்மையாகவே சிலருக்கு தயக்கமாக இருக்கிறது, (மூச்சு வாங்குதுடா டேய்)

உண்மையில் திட/திரவ/வாயு தன்மையுள்ள நிலைப்பாடுகள்(பொருள்கள்) மட்டுமே நிருபிக்க பட தகுதியுள்ள உண்மைகளாக உள்ளன, அதை நிருபிப்பது சுலபம். நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவை, என்றென்றும் இறுதி தன்மை இல்லாததாகவே இருக்கிறது, அவை அதிகபட்ச சாத்தியகூறுகளின் எண்ணிக்கையில் உண்மையை தக்க வைத்து கொள்ளும், சிலருக்கு குறைந்த பட்ச சாத்தியகூறுகளே போதுமானதாய் இருக்கிறது!


உண்மை, தனிமனித நம்பிக்கை மற்றும் தனிமனிதனை பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விக்குள்ளாக்க படுவது, ஒருவரின் முந்தய நம்பிக்கை மற்றும் அவரின் வாத நிலைப்பாட்டு தோற்றம் பற்றிய நிலைபாடு நமக்குள் ஒரு முன்முடிவுகளை தரும், அவரவர் நம்பிக்கையும், கருத்துக்களும், குணங்களை பற்றிய நம்பிக்கை தரும், ஆனால் அவையெல்லாம் உண்மை தானா?


http://valpaiyan.blogspot.com

கருத்துகள் இல்லை: