Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

புதன், ஜூன் 30, 2010

சூரிய குடும்பத்துக்கு வெளியே இளமையான கோள் கண்டுபிடிப்பு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


சூரியக்குடும்பத்துக்கு வெளியே புதிய இளமையான கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கோள் உருவாக்கம் பற்றிய விதிகளை இக்கோள் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

உடலுறவு இதயத்தைப் பாதிக்குமா?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


நம் நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

தாயின் மனநிலையே சேயின் மனநிலை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் : அறிவியலாளர்கள் எச்சரிக்கை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது.

செவ்வாய், ஜூன் 29, 2010

உண்மை என்றால் என்ன!?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

”வாய்மையே வெல்லும்” என்று சொல்லித்தான் இந்தியாவில் வளர்க்கப்படுகிறோம். ஆனால், இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேற்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, ஒரு விடயம் உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பப்படுகிறது, அதாவது அந்த இரண்டு பரிமானத்தை(பரிணாமம் இல்ல) தாண்டி வேறு இல்லை என்று அர்த்தம்!

சூரிய நமஸ்காரம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியிலுள்ள அனைத்து படைப்புகளுக்கும், ஆதாரமாக விளங்குவது சூரியன். நாம்இரவில் உறங்கி காலையில் எழும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் மிகவும்சோர்வான நிலையில் இருக்கும். இரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும். காலையில்எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் புத்துணர்வு பெற்று இரத்த ஓட்டம்அதிகரித்து உடலும் உள்ளமும் சுறுசுறுப்படையும்.

பரிணாமம் - இனப்பெருக்கம்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியிலுருந்து பரிணாமத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் மனித இனம் வரை அனைத்திற்க்கும் தலையாய கடமை இனப்பெருக்கம், ஒரு உயிர் பல்கி பெருக அவைகளில் ஜீன்களில் எழுதபட்டிருக்கும் ஒரே விசயம் நீ வாழ்ந்தே ஆக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்!. காட்டு விலங்கிலிருந்து சமூக விலங்கான பிறகு மனித இனம் மட்டும்

பரிணாமம் - தொடர்சி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பலதரபட்ட உயிரனங்கள் கண் முன் இருந்தாலும் அவைகளின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களை அறிந்து அவற்றை ஒரு குடும்பத்தின் கீழ் வகைபடுத்துகிறார்கள்! உதாரணமாக புலி, சிங்கம், சிறுத்தை ஆகியவை பூனை குடும்பத்தை சேர்ந்தது!, அவைகளுக்குள் இருக்கும் உருவ ஒற்றுமை, முக்கியமாக தலை அமைப்பு, எழும்புகூட்டின் ஒற்றுமை, வேட்டையாடும் தன்மை இவற்றை உறுதி படுத்துகிறது! இந்த குடும்பத்தில் உடல் வலிமை வாய்ந்தது சிங்கம் என்றாலும் புத்திசாலி விலங்கு எதுவென்றால் அது சிறிய இனமான பூனை தான் எனலாம்!, ஒரு விலங்கு தான் உயிர்வாழ தேவையான உணவை எப்படி பெறுகிறது,

பரிணாமம் - ஆரம்பம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



 தினந்தோறும் புதுபுது தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! அறிவியல் கூட தேவையில்லை, நம் சுற்றுசூழலை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனித்தால் போதும், ஒவ்வொரு உயிரனத்திற்கும் உள்ள தொடர்புகளை அறிந்து கொள்ளலாம்! ஆனால் நம் மதவாதிகளுக்கு “குரங்கு ஏன் இன்னும் குட்டபாவாடை போடல” என்ற கேள்வியை தவிர வேறு தெரியாது!,

திங்கள், மார்ச் 22, 2010

அழகு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இன்று முக அழகை பராமரிப்பதற்கென்றே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. இதற்குக் காரணம் அழகு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையேஅதிகம் ஏற்பட்டதன் விளைவுதான். இயற்கையான மூலிகைகளைக் கொண்டே முகத்தில்பொலிவை ஏற்படுத்த முடியும் என்பதை அன்றே சித்தர்கள் கண்டறிந்துகூறியுள்ளனர்.

முக்கனி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.






                    பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள் கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுபழங்கள் தான்.

வர்மத்தின் மர்மங்கள் உயிர்தரும் உயிர்க்காற்று

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஞான சிருஷ்டி என்பது ஆத்மாவின் சக்திகளை ஒருங்கிணைத்து சித்தாக்கி அண்டசராசரங்களையும் கோள்களின் இயக்கத்தையும், முக்காலத்தையும் கண்டறியும்தன்மையாகும். இந்த ஞான சிருஷ்டி மூலம்தான் சித்தர்கள் உடலின் இயக்கம்,அதனால் உண்டாகும் தாக்கம் பற்றி அறிந்துகொண்டனர். அதுபோல் கோள்களின்ஆதிக்கத்தை கண்டறிந்து வானசாஸ்திரம், சோதிட சாஸ்திர நூல்களைப் படைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் மனித உடலில் இருப்பதால் அண்டத்தில் உள்ளதுபிண்டத்திலும் உள்ளது என்றனர் சித்தர்கள். இதனால் ஒவ்வொரு உயிரினங்களைப்பற்றியும் துல்லியமாக ஆராய்ந்து அவர்களால் கூற முடிந்தது.

மங்கையர்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தலை முடி‌ப் பாதுகா‌ப்‌பி‌ற்கு

 
முடியை நா‌ம் ‌சீராக பராம‌ரி‌த்து வ‌ந்தாலே போது‌ம். அது தானாக வளரு‌ம்.தலைமுடியை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், ஈரமான தலையை ‌சீ‌ப்பை‌க் கொ‌ண்டு வாராம‌ல் இரு‌ப்பது‌ம், க‌ண்ட க‌ண்ட ஷா‌ம்புகளை மா‌ற்‌றி மா‌ற்‌றி பய‌ன்படு‌த்தாம‌ல் இரு‌ந்தாலு‌ம் போது‌ம் தலை முடி அழகாக வளரு‌ம்

நினைவுத்திறனை அதிகரிக்கும் உளுந்து

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.

திங்கள், மார்ச் 08, 2010

திருப்பதி ஏழுமலையான்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.






திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்உள்ளன..அவைகளில் சில...


1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள்உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒருஇரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில்தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால்அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம்தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்பு ஏற்படுவதில்லை.


3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்..உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான்திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையைஎடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்கவேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில்நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல்பளபளப்பாகஇருக்கின்றன.


4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும்திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்குவியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்குமுன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும்அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம்,சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை,ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார்செய்யப்படுகின்றன

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்தநைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம்,தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம்செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அதுமிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்தஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்தவேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இதுமேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்துவருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டுமுறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள்காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்துபுனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகுகஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம்நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால்திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம்,நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம்இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ளநகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள்தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம்உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர்..ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றைகல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கைசமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம்செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்தவிக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவிநகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைதேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாதஅர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்குவைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம்அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்திஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடியஅருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும்சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர்,மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீதுசேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும்இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர்நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்றுஅழைக்கப்பட்டார்

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது.அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர்குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின்பக்தர்கள் ஆவர்

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை.ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால்அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடிபூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால்தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார்செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள்பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளைகுளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமளஅறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்குசேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள்சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமானநீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயேவிடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலைசம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும்.சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில்ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம்செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப்பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பிகும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம்படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டுஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்திவணங்கிணார்28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ,பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ணதேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடுஅரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.