Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைதூரக் கடவுள்- பாகம் 01


வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

இவ்வாறு ஒரு குளிர் மற்றும் பனிக்கட்டிகள் நிறைந்த கிரகமாக பூமி மெல்ல மெல்ல அனைத்துக் கற்களையும் தூசித் துகளைகளையும் ஈர்த்தது. அப்போது சூரியனில் ஹைரஜன் சங்கிலித் தொடர் தாக்கம் உச்ச அளவை எட்டிக் கொண்டிருந்தது. சூரியனில் இருந்து புறப்படும் வெப்பக் கதிர்கள் பூமியை மெல்ல மெல்ல வந்தடைய ஆரம்பித்தன
. பூமிக்கு அருகிலருகில் சுழற்சியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு பாரிய விண் கல்லே சந்திரனாகும். சந்திரனின் விட்டம் மற்றும் அதன் சுழற்சி காரணமாக பூமி அதனை ஈர்க்க முடியவில்லை.

தற்போது பூமி தன்னைத் தானோ சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதை எல்லோரும் அறிவோம். பூமி தன்னைச் சுற்ற 24 மணிநேரம் சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் எனத் தெரிந்துவைத்திருக்கும் எமக்கு, பூமி எந்த வேகத்தில் சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் பயணிக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள், பூமி தற்போது நீள்வட்டப் பாதையில் சுமார் 1 செக்கனுக்கு 29.7 கி.மீ வேகத்தில் செல்கிறது. அதாவது 1 மணித்தியாலத்தில் பூமி சுமார் 1740 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது என்றால் நம்ப முடியுமா உங்களால். அப்படியாயின் பூமி 1 வருடத்தில் சுமார் 15242400 கி.மீ தொலைவை சுற்றுகிறது.

பூமி இவ்வளவு வேகமாக எப்படி பயணிக்க ஆரம்பித்தது. எந்த சக்தியால் பூமியை இவ்வளவு வேகமாக தள்ளிவிட முடியும்? பூமியின் நிறைக்கு இது சாத்தியமாகுமா? என எண்ணிப் பார்த்தால் புரியும். அதைப் போல மீதமுள்ள 9 கிரகங்களும் அதன் துணைக் கோள்களும் கிட்டத்தட்ட அதே அளவு வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமி உருவாகியதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்போது ஒரு பனிக்கட்டியாகவும் தூசித்துகள்களாகவும் காணப்பட்ட பூமி அதிகரிக்கும் சூரிய வெப்பம் காரணமாக வெப்பமடைய ஆரம்பித்தது. பல கோடி ஆண்டுகளாக விண்வெளியில் மிதந்த தூசித் துகள்கள் சூரிய ஒளியை தெறிப்படையச் செய்ததால் பூமிக்கு சூரியனின் ஒளி சரிவரக் கிடைக்கவில்லை. அத்துடன் அவை அனைத்தும் அடங்கிய பின்னரே பூமி வெப்பமடைய ஆரம்பித்தது.

உப்பு கற்கள் பூமியின் மூன்றில் இரண்டு பங்குகளாக காணப்பட்டது. எல்லையற்று இருந்த பனிக்கட்டிகள் சூரியவெப்பத்தால் உருகி நீராக மாற அந்த நீரில் உப்புக் கற்கள் கரைந்தன, அதனால் கடல் உருவானது. சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகி நீராவியாக மாறியது. அதனால் மேகங்கள் தோன்றியது. ஏற்கனவே உறைந்து திரவ நிலையில் இருந்த காற்று வெப்பம் காரணமாக காற்றாக மாறியது. ஒரே விண் கல் ஒன்பது துண்டுகளாக உடைந்தால், ஏன் பூமியைப் போல சந்திரன் இல்லை, அல்லது பூமியைப் போல செவ்வாய் கிரகம் ஏன் இல்லை என நீங்கள் கேட்கலாம். நீளமான வால் வெள்ளியில் தலைப் பகுதியில் வேறு கற்களும் கனிமங்களும் திரவங்களாலும், நடுப்பகுதியில் வேறுபட்ட கனிமங்களும் காணப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது நிலாவிலும் நீர் இருப்பது உறுதியானது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இவ்வாறு பூமி எப்போது தன்னைத் தானே சுற்ற ஆரம்பித்ததோ அன்றில் இருந்து நேரம் ஆரம்பித்தது எனலாம், அத்துடன் பூமியில் போனால் திரும்பாது என்றால் அது நேரம் ஆகும். ஒரு கணத்தை இழந்தாலும் அது மீண்டு வராது.

பிறந்த ஒரு மனிதக் குழந்தையை சில மணிநேரம் கவனிக்காமல் விட்டால் அக் குழந்தை இறந்துவிடும் என்பது யாவரும் அறிந்ததே. அப்படியாயின் உலகில் முதல் முதல் பிறந்த குழந்தை எவ்வாறு உயிர்வாழ்ந்திருக்கும்???? 


 http://athirvu.com

கருத்துகள் இல்லை: