ஆத்திரமடைந்த முனிவர், இவள் ஒரு ஆண், ஆனால் 10 மாதத்தில் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பான், அந்தப் பிள்ளையால் உங்கள் யாதவ குலமே அழியும் எனச் சாபமிட்டார் என்று புராணம் கூறுகிறது. அதைப் போல 10 மாதத்தில் அவனும் ஒரு கடாயுதத்தை பிள்ளையாகப் பெற்றெடுத்தான், அதனைக் கொண்டு சென்று யாதவர்கள் கண்ணனிடம் காட்டினார்கள், அதனை துண்டு துண்டாக, நொருக்கி யமுனை ஆற்றில் கலக்கும் படி கண்ணபிரான் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். இருப்பினும் பொடி பொடியாக நொருக்கப்பட்ட அந்த உலோகம், யமுனை ஆற்றின் கரையில் ஈட்டியைப் போன்ற கூரான ஆயுதமாக ஒரு செடிபோல வளர ஆரம்பித்தது என்கிறது புராணம்.
பின்னர் ஒரு முறை கண்ணபிரான் தனது படைகளுடன் யமுனை ஆற்றைக் கடக்க முயற்சிகும் வேளையில், உட்பூசல் காரணமாக அவ்விடத்தில் யாதவர்கள் தமக்குத் தாமே மோதிக் கொண்டனர். அதில் அவர்கள் யமுனை ஆற்றின் கரையில் காணப்பட்ட அந்த கூர்மையான ஆயுதச் செடியைப் பயன்படுத்தி மோதி பலர் இறந்தனர். இதனை சமாளித்து, களைத்துப் போன கண்ணபிரான் ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அப்போது அங்கு வந்த வேடுவன் ஒருவன், இந்த கூர்மையான செடியைக் கண்டு அதை எடுத்து தனது அம்பிற்கு பயன்படுத்தினான், பின்னர் அவன் அங்கு வரும் போது தூரத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த கண்ணபிராணை ஒரு மான் என நினைத்து தன் அம்பை எய்கிறான்.
காயமடைந்த கண்ணபிரான் உயிர் பிரியும் நிலை நெருங்கியது, அவர் அப்போது தனது சீடர்கள் சிலரை அழைத்து தான் இறந்தால் மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கிவிடும், நீ சென்று அங்குள்ள மக்களை வெளியேற்று அதுவரை நான் இறக்கமாட்டேன் என்று சொல்கிறார். அந்தச் சீடர்களும் அவ்வாறே சென்று மக்களை அப்புறப்படுத்துகிறார்கள். கண்ணபிரான் இறந்ததும் மதுரா நகரம் தண்ணீரில் மூழ்கியதாக புராணங்கள் சொல்கின்றன. எனவே சுனாமி, மற்றும் நிலநடுக்கம், என்பன நடந்ததற்கு புராணங்களும் ஒரு சாட்சியாக இருக்கின்றன.
இருப்பினும் தற்போது டைனசார்களின் எச்சங்களை அகழ்ந்தெடுத்து ஆராட்சியாளர்கள் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் அவற்றின் மரபணுக்களையும் ஆராய்ந்துள்ளனர். இதன் மூலம் வெளிவந்த தகவல் என்னவென்றால், டைனசார்கள் இடும் முட்டை, அதில் உள்ள குஞ்சுகள் ஆணா இல்லைப் பெண்ணாகப் பிறப்பதா என்பதைப் புறச்சூழலில் உள்ள வெப்பத்தைக் கொண்டே முட்டை முடிவு எடுக்கிறது. ஏன் இன்று கூட மணிதனுக்கு ஏன் ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பிறக்கிறது என்பது குறித்து சரியான விளக்கத்தை யாராலும் கொடுக்கமுடியாது. ஒரு பிள்ளை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்கவேண்டும் என்பதைத் தூண்டும் காரணி எது என்று விஞ்ஞானிகள் இதுவரை சரியாக கண்டறியவில்லை.
இப்படியான ஒரு பெரிய கல் பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் மோதியுள்ளது, அக் கல்லு மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும், அதில் இருந்து புறப்பட்ட சாம்பலும், தூசித்துகள்களும் பூமியின் காற்றில் பல ஆண்டுகளாக மிதக்க, சூரியனின் ஒளி அப்படியே பிரதிபலிக்கப்பட்டுள்ளது, இதனால் வெப்பம் இழக்க நேரிட்டு, பூமியின் பல பகுதிகளில் குளிர் சூழ்ந்தது. அப்போது இருந்த டைனசார்கள் திடீர் மாற்றத்தால் இறக்க அது இட்ட முட்டைகள் குஞ்சுபொரித்தது. இருப்பினும் வெப்பநிலை மாற்றத்தால் அவை அனைத்தும் அலிகளாப் பிறந்ததாகக நம்பப்படுகிறது, பின்னர் பிறந்த பல டைனசார் குட்டிகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் அவை பூண்டோடு அழிந்ததாக சில விஞ்ஞானிகள் தற்போது விளக்கம் கூறுகிறார்கள், இதனை, மறுப்பதற்கில்லை.
ஒருவேளை காற்றில் உயிர்வாழும் ஒருவகை பக்றீரியா அல்லது வைரஸ் எமது உடலில் உள்ள இனப்பெருக்க உறுப்பைத் தாக்கவல்லது என ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம். அதனை கட்டுப்படுத்தவே முடியாது என்றால் எம் இனம் அழிவது நிச்சயம். மனிதன் தற்போது அறிவியலில் வளர்ச்சியடைந்து இருப்பதால், இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தன்னைத் தவிர்த்து வருகிறான். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று பலவருடங்களாக சொல்லப்பட்டு வந்தது, அது பொய் என தற்போது அக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது. அது ஏன்? என அடுத்த தொடரில் ஆராயலாம்,
http://athirvu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக