ஊனுண்ணித் தாவரம் (Carnivorous plant, சிலவேளைகளில் பூச்சியுண்ணும் தாவரங்கள் எனவும் அழைக்கப்படும்) என்பது விலங்குகளையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் தாவரம் ஆகும்
. இத்தாவரங்கள் பெரும்பாலும் பூச்சிகளையும் கணுக்காலிகளையுமே குறிவைக்கின்றன. மண்ணில் ஊட்டச்சத்துக்கள் (குறிப்பாக நைட்ரசன்) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன. எனவே பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து நைதரசனைப் பெறுகின்றன.
இரையைப் பிடிக்கும் ஐந்து முறைகள் இத்தாவரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:
- குழி மூலம் பிடித்தல் - செரிக்க வைக்கும் என்சைம்/நொதி அல்லது பாக்டீரியா ஆகியவற்றைக் கொண்ட உருண்ட இலைகள் மூலம் பிடித்தல்
- பசை போன்ற நீர்மத்தை இலையில் கொண்டிருப்பதன் மூலம் இலையின் மீது அமரும் உயிரைப் பிடித்தல்
- இலைகளை வேகமாக அசைத்துப் பிடித்தல்
- வெற்றிடத்தை ஏற்படுத்தி இரையை உறிஞ்சிப் பிடித்தல்
- செரிமான உறுப்புக்கு இரையைச் செலுத்தும் வண்ணம் உள்நோக்கிய முட்களை பயன்படுத்திப் பிடித்தல்
http://ta.wikipedia.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக