Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், மார்ச் 22, 2010

அழகு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ன்று முக அழகை பராமரிப்பதற்கென்றே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. இதற்குக் காரணம் அழகு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையேஅதிகம் ஏற்பட்டதன் விளைவுதான். இயற்கையான மூலிகைகளைக் கொண்டே முகத்தில்பொலிவை ஏற்படுத்த முடியும் என்பதை அன்றே சித்தர்கள் கண்டறிந்துகூறியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இயற்கையின் மாசுபாட்டால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் முகம் மென்மையான பகுதியாகும். அகத்தின் அழகு முகத்தில்தெரியும் என்ற பழமொழியின்படி உடலின் உள்ளே உள்ள உறுப்புகளின் பாதிப்புமுகத்தில்தான் தெரியும்.

இளம் வயதினருக்கு முகப்பரு, நடுத்தர வயதினருக்கு கரும்புள்ளி, முகக்கருப்பு, 45 வயதை தொடுபவர்களுக்கு முகச் சுருக்கம் என அனைத்துவயதினரையும் கவலை அடையச் செய்யும் பகுதி முகம்தான்.

உடலின் முக்கிய உறுப்பான கண்கள், வாய், மூக்கு அமைந்துள்ள பகுதியும் முகம்தான்.

முகத்தை பளபளப்பாகவும் அழகாகவும் வைக்க சில எளிய வழிமுறைகளை அறிந்துகொள்வோம்.

முகச் சுருக்கம் நீங்க

காய்ச்சாத பசும் பால் - 50 மி.லி.

எலுமிச்சம் பழச்சாறு - 10 மி.லி

எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து, இளம் சூடானநீரில் முகத்தை கழுவி, மென்மையான பருத்தியினாலான துண்டு வைத்து துடைத்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்கி பளபளப்பாகும்.

காரட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பசைபோல் அரைத்து முகத்தில் தடவிகாய்ந்த பின் இளம் சூடான நீரில் கழுவி வந்தால் முகச் சுருக்கம் மறையும்.

காரட், கோஸ், தக்காளி இவற்றை பச்சையாக அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.

கரும்புள்ளி மறைய

தக்காளி சாறு - 50 மி.லி.

எலுமிச்சசை பழச்சாறு - 10 மிலி

கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரில் முகத்தைகழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரங்கள் செய்து வந்தால்கரும்புள்ளி மாறும்.

முகக் கருப்பு மறைய

மஞ்சள் தூள் - 10 கிராம்

கோதுமை பவுடர் - 10 கிராம்

எடுத்து கலந்து பேஸ்ட் மாதிரி செய்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் முகம் கழுவினால் முகச்சுருக்கம் முகக் கருப்பு மாறும்.

முகம் பொலிவு பெற

மகிழம் பூ பொடி - 250 கிராம்

கிச்சிலி கிழங்கு - 125 கிராம்

கஸ்தூரி மஞ்சள் 125 கிராம்

கோரைக் கிழங்கு - 150 கிராம்

எடுத்து இடித்து அதனுடன் சந்தனத்தூள் - 100 கிராம் சேர்த்து ஒன்றாக கலந்துதினமும் சிறிது எடுத்து நீர்விட்டு குழைத்து முகத்தில் பூசி 1/2 மணிநேரம்கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் முகம் பொலிவு பெறும்.




www.nakkheeran.in

கருத்துகள் இல்லை: