Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

புதன், ஜூன் 30, 2010

கடல்நீரில் உப்பு வந்தது எப்படி?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


வெப்பக்கோளமாக இருந்த பூமியில், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து பெய்த மழையால் தான் கடல் உருவானது என்று கூறப்படுகிறது.


பாறைகளில் இருக்கும் உப்பு, மழைநீரால் கரைக்கபட்டு, ஆற்றுநீரால் அடித்து வரபட்டு கடலில் வந்து கலந்தது; அதன்பிறகு ஆவியாதல் முலம் கடலநீர் மேலே சென்றுவிட, உப்பு மட்டும் கடலிலேயே தங்கி விட்டது. இதுபோல் லட்சக்கணக்கான வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றதால் கடலில் அதிகளவு உப்பு சேர்ந்து விட்டது என்றே கருதபட்டது.

ஆற்று நீரில் அதிகளவு இருப்பதோ, கால்சியம் மற்றும் பை-கார்பனேட் உப்பு. கடலில் அதிகளவு இருபது நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பு. அதாவது அடிபடையில் ஆற்றுரில் உள்ள உப்பும், கடல்நீரில் உள்ள உப்பும் வெவ்வேறானவை. எனவே, கடலநீரில் காணப்படும் சோடியம் குளோரைடு உப்பு எங்கிருந்து வந்தது?

பூமி, முதலில் பாறைக்குழம்புக் கோளமாக எரிமலைகளுடன் இருந்தது. அதன்பின்னர் படிபடியாகக் குளிர்ந்ததால், பல்வேறு அடுக்கு பாறைகளுடன் புவி ஓடு உருவானது. பாறைக்குழம்பில் இருந்து பாறைத் தட்டுகள் உருவானபோது, நீர் தனியே பிரிந்து பூமிக்கு மேல் வந்ததால் தான் கடல் உருவானது.

ஆதிகாலத்தில் எரிமலைகளின் முலமாக பூமிக்குள் இருந்து சோடியம் குளோரைடு உப்புகள், வாயு வடிவில் பூமிக்கு மேல் வந்ததால் தான் கடலநீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறது. இக்கருத்துக்கு ஆதாரமாக பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் வியாழன் கிரகத்தின் துணைக்கிரகமான `இயோ’ விளங்குகிறது.

பூமியில் உள்ள எரிமலைகளை விட, இயோவின் மேற்பரப்பில் அதிக வெப்பமுள்ள எரிமலைகள் காணபடுகின்றன. இந்த எரிமலைகளில் இருந்து சோடியம் மற்றும் குளோரைடு உள்பட உப்பு முலபொருட்கள் வாயு வடிவில் பீய்ச்சியடித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாகின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாரல் ஸ்ட்ரோபில் என்ற ஆராய்ச்சியாளர் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

1974-ம் ஆண்டு பாபிரவுன் என்ற ஆராய்ச்சியாளர், இயோவின் வாயு மண்டலத்தில் மெலிதான சோடியம் மேகங்கள் இருப்பதை தொலைநோக்கி முலம் கண்டறிந்து அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்பு பல ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியபட வைத்தது. காரணம், இயோவின் மேற்பரப்பில் எங்குமே உப்பு படிவங்கள் இல்லை. முதன்முறையாக எரிமலைகளின் முலம் உப்பு வாயுக்கள் பீய்ச்சியடித்துக் கொண்டிருபதை டாரல் கண்டுபிடித்ததன் முலம், பல்வேறு புதிர்களுக்கு விடை கிடைத்திருக்கிறது.

அதிக வெப்பநிலையில் பாறைக்குழம்புக் கோளமாக இருக்கும் இயோவில், உப்பு எரிமலைகள் இருப்பதைபோல், நம் பூமியும் முதலில் பாறைக்குழம்புக் கோளமாக இருந்தபோது எரிமலைகளில் இருந்து சோடியம் குளோரைடு வெளிவந்தது தெளிவாகிறது. எனவேதான், கடல்நீரில் அதிகளவு சோடியம் குளோரைடு உள்ளது


 www.newlankasri.com

கருத்துகள் இல்லை: