Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூலை 19, 2011

மரபியல் பண்பு அல்லது ஜீன்கள் என்றால் என்ன ? பாகம்- 1

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மரபியல் அதாவது ஜெனடிக்ஸ் என்னும் சொல் பண்டைய கிரேக்க மொழியில் இருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. தாவரங்கள், விலங்குகள், செடி, கொடிகள் மற்றும் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் இந்த மூலக்கூறே உயிரினத்தை நிர்ணயிக்கும் பொருளாக அமைகிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
அதாவது ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னரே அதன் உயரம், எடை, புத்திசாதூரியம், கண்களின் நிறம், தோலின் நிறம் எல்லாமே இவைகளால் நிர்ணயிக்கப்பட்டு விடும். மரபணுக்கள் 4 வகையான சங்கிலித் தொடுசல் மூலக்கூறுகளால் ஆனவை. இதில் காணப்படும் இந்த நியூக்ளியோடைட்களின் வரிசை மரபணு தகவல்களை சேகரித்து வைக்கவும் அதனைச் சந்ததிகளுக்கு கடத்தும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது.

ஒரு மரபணுவில் உள்ள நியூக்ளியோடைட்கள் வரிசையில் அமினோ அமிலங்கள் புரதங்களை உருவாக்கி சங்கிலித் தொடர் வரிசையை ஏற்படுத்துகிறது. இத்தொடரில் மரபணுக்கள் தமது குறியீட்டை சேமித்து வைத்திருக்கின்றன. அது ஒரு மூன்று பரிமாண வடிவத்துக்கு மடிகிறது. எப்படி ஒரு புரத அமினோ அமிலங்கள் தீர்மானிக்க இந்த அமைப்பு, திரும்ப புரதமாக மாறிச் செயல்படுகிறதோ அதற்கான சக்தியும் அந்தப் புரதத்தில் இருந்தே பெறப்படுகிறது. மரபணுவில் உள்ள டி.என்.ஏ ஒரு மாற்றம் அல்லது அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டை மாற்ற புரதம் தான் அமினோ அமிலங்களாக தம்மை மாற்றி செயல்படுத்துகின்றன. இதனால் இச் செல்கள் ஒரு வியத்தகு விளைவுகளை ஏற்படுத்தவல்லவை.

உடலுறவின்போது ஆணில் இருந்து வெளிப்படும் விந்துவில் காணப்படும் பல்லாயிரம் கோடி விந்தணுக்களிலும் இந்த டி.என்.ஏ என்று சொல்லப்படும் மரபணுக்கள் காணப்படுகின்றன. இந்த விந்தணுவானது நீந்திச் சென்று சூல் பையை அடையும் போது அங்கே இருக்கும் பெண்ணின் முட்டையைத் துளைத்து கருக்கட்டுகிறது. இது என்னமோ வாசிக்க இவ்வளவு தானா என்று தோன்றும் ஆனால் இங்கே நடக்கும் பாரிய மாற்றங்கள் பல இன்னும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படவே இல்லை. பல்லாயிரம் கோடி விந்தணுக்கள் நீந்திச் சென்றாலும் ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் பாதியிலேயே இறந்து விடுகின்றன. சில நூற்றுக்கணக்கான விந்தணுக்கள் மட்டுமே நீந்தி சூல் பை அல்லது கருவை அடைகிறது.

அவ்வாறு கரு முட்டைக்கு பக்கத்தில் செல்லும் எல்லா விந்தணுக்களும் முட்டைடை ஊடறுத்து உள்ளே செல்ல முயற்சிக்கும் ஆனால் ஏதோ ஒரு பக்கத்தில் அதுவும் ஒரு வகை ஈர்ப்புக்கொண்ட ஒருரே ஒரு விந்தணுவைத் தான் கரு முட்டை ஊடறுத்துச் செல்ல அனுமதிக்கிறது. கரு முட்டையின் சுவர் பகுதி அதனை அனுமதித்தால் மாத்திரமே கருக்கட்டல் நடக்கும். தன்னைச் சுற்றி ஏராளமான விந்தணுக்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கும்போது, எந்த ஒரு விந்தணுவை அனுமதிப்பது என்று முட்டைக்கரு எவ்வாறு முடிவெடுக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவ்வாறு ஒரு விந்தணுவை அது ஏற்றுக்கொண்டால் மறு வினாடியே ஒருவகை திரவம் சுரக்க ஆரம்பிக்கும்.

இதன் காரணமாக கரு முட்டையின் சுவர் தடிக்க ஆரம்பிக்கும். இதனால் வேறு விந்தணுக்கள் துளைத்துச் செல்லமுடியாத நிலை தோன்றுகிறது. இந்தச் சுவர் தடிப்படைவது சிறிது தாமதமானால் மற்றுமொரு விந்தணு உட்செல்ல நேரிடும். அப்போது ரெட்டைக் குழந்தை உருவாக அது ஏதுவாகிறது. ஆனால் இவ்வாறு அங்கே சுரக்கப்படும் திரவம் தாமதமாகுவது அல்லது ஒரு விந்தணு உட்சென்ற பின்னர் கருவின் சுவர் தடிப்பது தாமதமாகுவதும் கூட மரபியல் பண்பு என்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இரட்டையர்கள் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும் ரெட்டைக் குழந்தை பிறக்க 90% வாய்ப்பு இருக்கிறது. இது கூட அவர்களின் தாய் தந்தையரிடம் இருந்து வந்தது தான் என்று கூறுகிறார்கள். அதில் உண்மையும் உள்ளது !www.athirvu.com

கருத்துகள் இல்லை: