Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூலை 12, 2011

பழச்சாறு உடல் நலத்துக்கு கேடு!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால், உடல் பருமன், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.




இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால், பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன், கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால், இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரிக்கிறது.



உடல்பருமன்உண்டாகிறது. உடலின் வளர்சிதைமாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும், சாறில் சீனியின் அளவு அதிகரிக்கிறது. அதாவது,1ரம்ளர் பழச்சாறில், 5 தேக் கரணடி அளவு சீனி உள்ளது. எனவே, பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு ரம்ளர் பழச்சாறில்,

4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம், பழங்களைவிட, உலர் பழங்களை தின்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள்தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: