Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், டிசம்பர் 12, 2011

அதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வொன்றை நடத்தினர். தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.




தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களை விட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரியவந்தது.

அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் அழகாக தோற்றமளித்தது. மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறு சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.


http://thulikal.com/


கருத்துகள் இல்லை: