Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், நவம்பர் 15, 2011

குளிர்ந்த நீரில் குளியுங்கள்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.


இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில் குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது.

இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம்.

கருத்துகள் இல்லை: