Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, நவம்பர் 04, 2011

தெரிந்த வெந்தயம் தெரியாத இரகசியம்.

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

தமிழ் மக்களின் பல்வேறு உணவுகளிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் குணப்படுத்துவதாக சொல்கிறார்கள்
.

நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்கும் குணமும் வெந்தயத்துக்கு இருக்கிறது. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், ஆண் ஹோர்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சிநடத்தப்பட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் 25 வயது முதல் 52 வயது வரை உள்ள 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். தினமும் 2 வேளை என 45 நாட்களுக்கு அவர்களுக்கு வெந்தயச்சாறு கொடுக்கப்பட்டது. அவர்களது ஹோர்மோன் அளவு, தாம்பத்திய உறவில் ஆர்வம் ஆகிவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மற்றொரு பிரிவினருக்கு வெந்தயம் அல்லாத வெறும் சாறு கொடுக்கப்பட்டது.

வெந்தயச் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரியவந்தது. வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள், ஹோர்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. வெறும் சாறு குடித்தவர்களின் ஹார்மோன் உற்பத்தியில் எந்த மாற்றமும் இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: