Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 10, 2009

சித்த மருத்துவத்தில் மூலிகை - 02

வாழ்க! வளமுடன்!வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில் இதற்கு 
புயசடiஉ என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும் காரமதிகம்
 நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.
மருத்துவ குணங்கள்
1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி
2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.
4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.
5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன. ஒன்று 

Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால்
6)வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும் உடற்சக்தியை 

அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, 
ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.
7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.
8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.
9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும்

 சீரண சக்தியை அதிகரிக்கும்.
10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.
11)Cholosterol-ஐ கட்டுப்படுத்தும்.
12)மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.
13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.
14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.

15.பூண்டுப்பால்
உரித்த பூண்டு 15 பற்கள்
பால் 1ஃ4 லிட்டர்
பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு 

நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.
16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது.

 வெள்ளைப்பூண்டு.
18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக 

விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில்
 உருவாகிறது.
19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல் தடுக்கிறது.
20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது 

Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.


வெந்தயமும் வெந்தயக்கீரையும்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே வெந்தயத்தை மகத்தான 

மூலிகை என்றார்கள் அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகை என்றார்கள். 
அதைப்போலவே இந்த நூற்றாண்டிலும் இது சஞ்சீவி போன்ற மூலிகை 
என்று இன்றைய உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எலும்பை வளர்க்கும் பாஸ்பரஸ் உப்புக்களும் (Phosphorus) சதையை 

வளர்க்கும் லெஸிதின் பொருளும் (Lecithin) முட்டை சத்து போன்ற 
நூக்லியோ அல்பீயமனும் (Albumin) இதைப்போன்ற பிற சத்துக்களும்
 இரும்பு சத்தும், கால்சியமும் வெந்தயத்தில் உள்ளன.

வெந்தயக் கீரையில் Vitamin A, B, C, Sodium, Chlorine போன்ற தாதுப்

 பொருட்களும் உள்ளன.

பயன்கள்
1)வெந்தயத்தை வறுத்து பொடித்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.
2)வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் பெருகும், குருதி பெருகும்.
3)அரைத்து தலையில் தேய்க்க தலைமுடி கருப்பாகவும் 

பளபளப்பாகவும் காணும்.
4)வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் நீராகாரமாக

 உட்கொண்டால் உடல் பெருக்கும்.
5)கல்லீரல் வீக்கத்திற்கும், நாட்பட்ட இருமல், வயிற்று வலி, 

இவற்றிற்கும் மிகவும் நல்லது.
6)மூத்திர உறுப்புகளை சுத்தப்படுத்தி நீரை துரிதமாக இறக்கும்.
7)பசியை உண்டாக்கும்.
8)மூளை நரம்பை பலப்படுத்தும்.
9)வெந்தயக்கீரை சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், மந்தம், 

வாயு, இருமல், மாதவிடாய்த் தொல்லை வயிற்று வலி முதலியன 
குணமாகும்.
10)வெந்தயம் கணக்காய்ச்சல், சீதக்கழிச்சல் வெள்ளை உடல் எரிச்சல், 

நீர்வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் தீர்க்கும், ஆண்மை தரும்.
11)இலையை அரைத்துக் கட்ட உள் (அ) வெளிப்புறத்தில் காணும் வீக்கம் 

புண்கள் போகும்.
12)வெந்தயக்கீரை + கோழிமுட்டை + தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில்

 சமைத்து சாப்பிட இடுப்பு வலி தீரும்.
13)வெந்தயக்கீரை + வாதுமைப் பருப்பு + கசகசா + கோதுமைப்பால் + நெய் + 

பால் + சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுவலுக்கும் 
வன்மையுண்டாகும்

கருத்துகள் இல்லை: