Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 24, 2009

நாள்காட்டி ஜோதிடம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நமது பாரம்பரிய ஜோதிடத்தில் வருங்காலத்தைப் பற்றிக் கணக்கிட தசா முறையைப் பின் பற்றுகிறோம். ஆனால் மேலை நாட்டவர் ஜோதிடத்தில் இந்த தசா கணித முறை கிடையாது.   "Progression"  என்ற முறையைக் கையாளுகின்றனர். இது கிரக பார்வையின் அடிப்படியிலானது. 
நாம் கோச்சார பலன்கள் கூறுகின்றோமல்லவா?  அதற்கு ஜென்ம ராசிச் சக்கரத்திலுள்ள சந்திரனின் நிலையைக் கொண்டுதானே கூறுகின்றோம்.  ஆனால் மேலை நாட்டவர்கள் சந்திரனின் நிலையைக் கொண்டு கூறுவது இல்லை;  மாறாக சூரியனின் நிலையைக் கொண்டு கூறுகின்றார்கள். 
நாம் தாயாரைப் பற்றி 4-ம் இடத்தையும், தகப்பனாரைப் பற்றி 9-ம் இடத்தை வைத்தும் கூறுகின்றோமல்லவா?  அவர்கள் 4-ம் இடத்தை தகப்பனாருக்கும், 4-ம் வீட்டிற்கு 7-ம் வீடான 10-ம் இடத்தை தாயாருக்கும் அளித்துள்ளார்கள்.  நமது அனுபவப்படி தகப்பனாரைப் பற்றி அறிய 9-ம் இடமே சரியான இடம் என்பது நமது கருத்து.
ஒரு கிரகம் நல்லதா? அல்லது கெட்டதா? என்று எப்படிக் கூறுவது. நமது ஜோதிடத்தில் கிரக பலத்தைக் கணக்கிட "ஷட் பலம்" என்ற முறையைக் கையாளுகின்றார்கள். ஷட்பலம் என்றால் 1. ஸ்தான பலம், கிரக திருஷ்டி பலம் 2. கால பலம் 3. அயன பலம், கிரக யுத்த பலம், 4. நைசிர் கிரக பலம், 5. திக்குப் பலம் 6. சேஷ்டாபலம் ஆகியன அடங்கும்.  இவைகளையெல்லாம் கண்டு பிடிப்பது மிகவும் கடினமான காரியம். மிகவும் உழைத்து பலன்களை அறிய வேண்டும்.  இவ்வளவு கணக்கு, வழக்குகள் மேலை நாட்டவர் கையாளவில்லை. 
ஜோதிடத்தில் பல கிளைகள் உண்டு.  எல்லாவற்றையும் அறிந்தவர் எவரும் இலர். மருத்துவ ஜோதிடம் என்ற கிளை உண்டு.  இதில் ஒவ்வொரு கிரகமும், ராசியும் உடலின் சில உறுப்புக்களைக் குறிக்கும். கிரக அமைப்புக்களுக்கு  ஏற்றவாறு உடல் நிலையில் பாதிப்புக்கள் உண்டாகின்றன.  குருவானவர், உடல் உள்ளுருப்பில்  Liver  ஐக் குறிக்கிறார்.  சனிதான் மந்தமானவர் ஆயிற்றே.  குருவுடன் அவர் சேர்ந்தால்  Liver -  சம்மந்தமான உபாதைகளை அவருக்கு உண்டாகும். குரு, ஆயுள் காரகனான சனியுடன் சேர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்பதெல்லாம் ஜாதகரின் பொதுப் பலன்களைக் குறிப்பிடும்போதுதான். மருத்துவ ஜோதிடத்தில் அதே சேர்க்கையை வேறு விதமாகக் கூற வேண்டியதுள்ளதல்லவா?
உலக நாடுகள் சம்மந்தமான ஜோதிடம்:- எந்த நாட்டில் என்ன நடக்கும் என்று கூறுவது தான் இந்த ஜோதிடம்.  எப்போது வெள்ளம் வரும், எங்கே சண்டை வரும், எங்கே பஞ்சம் வரும் என்பதன வெல்லாம் இத்ல் மூலம் கூறுவர். ஆனால் இதன் மூலம் கூறும் பலன்கள் நிச்சமமற்ற தன்மையாக இருக்கின்றன. உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் 12 ராசிக்குள் அடக்கி இருக்கின்றனர்.  ஒவ்வொரு ராசிக்கும் பல நாடுகள் உண்டு.  ஆக இந்த நாட்டில்தான் இவ்வாறு நடக்குமென்று கூறுவது  நிச்சயமற்றதாகி விடுகிறது.  ஆகவே பலர் இதில்  கருத்துச் சொல்ல விரும்புவதில்லை.
வானிலை ஜோதிடம்:-  கிரக அமைப்பை வைத்துச் வானிலையைக் கூறுவது.  இப்போதெல்லாம் வானிலை மையங்கள் வந்த பிறகு இதற்குத் தேவையில்லாது போய்விட்டது.  இருப்பினும் இதைப் பலனாகச் சொல்பவர்களும் மிக, மிக சொற்பம். 
நாள்காட்டி  ஜோதிடம் : இதை ஆங்கிலத்தில்  Electional Astrology  என்று கூறுவர்.  அதாவது திருமணம் எப்போது செய்ய வேண்டும், வீடு கட்ட எப்போது மனை பூஜை செய்ய வேண்டும் என்பது போன்றவைகளுக்கு நாட்கள் தேர்ந்தெடுப்பது. இது பெரும்பாலும் நாட்கள் தேர்ந்தெடுப்பது சம்மந்தப் பட்டதே.
சகுனங்கள், நிமித்தங்கள் சம்மந்தப்பட்ட ஜோதிடம்:- இதற்கு ஜாதகமே தேவையில்லை.  கேள்வி கேட்க்கும் சமயத்தில் நிகழும் சகுனங்கள் அல்லது நிமித்தங்களை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஜோதிடத்தை நமது பெரியவர்களே அங்கீகாரம் செய்துள்ளனர்.  நாமும் பல சமயங்களில் இத்தகைய ஜோதிடத்தைப் பயன்படுத்தி வந்துள்ளோம்.  சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பட்டிமன்ற நிகழ்ச்சியில் சகுனங்களைக் கேலி செய்து நகைச்சுவையாகக் கூறினார், நடுவர் என்றழைக்கப் பட்டவர்.
ஒருவர் வெளியில் செல்லும்போது குறுக்கே பூனை சென்றதாம்.  பூனை குறுக்கே சென்றால் அது நல்லதல்லவே என்று அவர் நினைத்தாராம்.  அப்போது குறுக்கே சென்ற பூனை ஒரு வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டதாம். ஆகவே கெடுதல் பூனைக்குத்தானென்றும்,  மற்றவர்களுக்கு இல்லையென்றும் நகைச்சுவையுடன் கூறினார்.  இது நகைச்சுவைக்குத்தான் உதவும். உண்மை இதில் இல்லை.  சகுனங்களும், நிமித்தங்களும் எதிர்காலத்தில் நடப்பவைகளை முன்கூட்டியே அறிவிக்கும் அசிரீரிகள்.  இதில் உண்மை நிச்சயம் உண்டு.   நகைப்புக்கு இடமில்லை.

ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com

கருத்துகள் இல்லை: