Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 24, 2009

ஜோதிடத்தின் எல்லைகள்


வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இரட்டைப் பிறவிகளின் ஜாதகம் ஒரே மாதிரியாக இருக்கிறது.  ஆனால் அவர்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இல்லையே!" என வினவி இருந்தார். மற்றொருவர் 'சுனாமியில் பல ஆயிரக் கணக்கானவர்கள் காலமானார்களே! அவர்கள் எல்லோருக்கும் மாரக திசையா? " என வினவி இருந்தார். இதற்கு நாம் பதில் சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறோம்.


நாம் ஏற்கனவே இரட்டைப் பிறவிகளைப் பற்றி எழுதிருக்கிறோம்.  சில நிமிட இடைவெளியில் ஒரே தாய், தந்தையருக்குப் பிறந்தவர்கள் இரட்டைப் பிறவிகள். ராசி, நவம்சம் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கிறது.  பொதுவாக ஜாதகம் கணிக்கும்போது ராசி, நவாம்சம் இரண்டை மட்டும் தான் கணித்துக் கொடுக்கிறார்கள்.  நவாம்சம் என்பது ராசியை ஒன்பது கூறுகளாகப் பிரிப்பது. இதைத்தவிர பாவம், திரேக்காணம், திரிசாம்சம், சப்தாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், சஷ்டியாம் சம் ஆகிய பல சக்கரங்களைப் போடத்தான் வேண்டும்.  சஷ்டியாம்ச்சம் என்பது ஒரு ராசியை அறுபதாகப் பிரிப்பது.  இந்த அம்சங்களெல்லாம் இரட்டையர் ஜாதகத்தில் மாறும்.ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

தவிரவும் "Sub-lord" theory  இரட்டையர் பிறப்புக்களில் அவர்கள் வாழ்க்கை மாறி இருப்பதற்குக் காரணத்தை விளக்குகிறது.  ஒர் நட்சத்திரத்ததை அதாவது 13 டிகிரி 20 நிமிடத்தை ஒன்பதாகப்பிரித்துப் பலன் சொல்வது. லக்கினத்தை ஸ்புடம் செய்வது போன்று 12 பாவங்களையும் ஸ்புடம் செய்யும்போது ஒவ்வொரு பாவமும் ஒவ்வொரு  Sub-lord" - ன் கீழ் வருகிறது. சில நிமிட இடை வெளியில் பிறந்தோருக்கு இந்த "Sub-lord" நிச்சயம் மாறும். 
நமக்கு நன்றாகத் தெரிந்த இரட்டையர்கள் ராமசாமி முதலியார், அவர் சகோதரர் லட்சுமணசாமி முதலியார் (Former Vice-Chancellor of Madras University). இவர்கள் சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். ஒருவர் வழக்கறிஞர்; மற்றொருவர் மருத்துவர். அவர்கள் ஜீவனத்தைக் குறிக்கும் வீட்டின் Sub-lord  ஒருவருக்கு குருவாகவும், மற்றொருவருக்கு சூரியனாகவும் இருந்ததே காரணம்.  இந்த இரட்டையர்களுக்கு வாழ்க்கை வித்தியாசத்தை  "Sub-lord" theory  தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இந்த Sub-lord theoryஐப் பற்றி நாம் அதிகம் விளக்கப் போவதில்லை. அதை இங்கு விளக்குவது நமது நோக்கமல்ல. இரட்டையர்களின் வாழ்க்கை முறை வித்தியாசப் படுவதற்குக் காரணம் உண்டு என்று விளக்குவதற்காகவே அதைப் பற்றி எழுதினோம்.
ஒரே ஊரில் ஒரே நேரத்தில் ஒரு பணக்காரருக்கும் ஒரு ஏழைக்கும் பிறந்த இரு குழந்தைகள் ஜாதகம் ஒன்றாக இருந்த போதிலும், வாழ்க்கை முறையில் வித்தியாசம் இருப்பதற்குக் காரணத்தை நாம் நமது பாடத்தில் எழுதி இருக்கிறோம்.  சந்தேகம் இருப்பவர்கள் அதைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களினால் ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றார்கள். அவர்கள் எல்லோருக்கும் மாரக தசை வந்து விட்டதா? இரு மற்றொரு வாசகரின் கேள்வி. ஒருவர் ஜாதகத்தைப் பார்த்து ஒருவருக்கு தீர்க்காயுள் ஜாதகமா? அல்லது மத்திய ஆயுள் ஜாதகமா? அல்லது அற்பாயுள் ஜாதகமா? எனக் கூறுகிறோம். தீர்க்காயுள் ஜாதகம் என்று கூறப்பட்டவர் மேற்சொன்ன இயற்கை சீற்றங்களினால் மரணம் எய்தலாம். அப்படியானால் ஜோதிடம் பொய்த்து விட்டதா? 
ஒரு நாட்டின் நடப்புக்களுக்கு உட்பட்டதுதான் நம் அனைவரின் தனிப் பட்ட வாழ்க்கை. ஒரு நாட்டின் நடப்புக்களைப் பற்றிக் கூறுவது  "Mundane Astrology "  என்பது.  இது ஒரு நாட்டில் எப்போது சண்டை வரும், பூகம்பம் வரும், வெள்ளம் வரும்; நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? என்பது போன்ற நாட்டு நடப்புக்களைக் கணிப்பது இந்த Mundane Astrology. This is another branch of Astrology. தனிப்பட்ட நபர்களின் ஜாதகம் வேறு, இந்த Mundane Astrology வேறு. விதிகள் எல்லாமே வேறு.  இதைக் கையாளுபவர்கள் மிகச் சிலரே.  அனேகமாக எல்லாருமே தனி நபரின் ஜாதகத்தை அதாவது  Natal Astrology - ஐத் தான் கையாளுகிறார்கள். நம் தனிப்பட்டவர்களின் ஜாதகமானது இந்த  Mundane Astrology -  க்கு உட்பட்டதே. ஒரு நாட்டில் சண்டையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ அல்லது பூகம்பத்தினாலோ மக்கள் மடிய வேண்டுமென்றால் மடியத்தான் வேண்டும்.  அதிலிருந்து தப்பிக்க முடியாது. Mundane Astrologyக்கு உட்பட்டதே  Natal Astrology. நமக்கு மட்டும் தீர்க்காயுள் என்று தப்பிக்க முடியாது.  There is limitation to Astrology.  Within the limitation we can predict properly.
இந்த எல்லை அழிவுக்கு மட்டும் இல்லை. பொருளாதார வளர்ச்சிக்கும்தான். நமது நாட்டின் பொருளாதாரம் மிக நல்ல நிலையில் இருக்கிறதே. அதனால் நாம் அனைவரும் பயன் பெறவில்லையா? எவ்வளவுபேர் அயல் நாடுகளில் குறிப்பாக அமெரிக்கவில் பணிபுரிகின்றனர். அதனால் பொருளாதாரம் வளரவில்லையா? கடந்த 15 ஆண்டுகளில் எவ்வளவுபேர் அமெரிக்கா சென்று தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். அதனால் நாட்டையும் வளர்த்துள்ளனர். இந்த வளர்ச்சி இதற்கு முன் இருந்ததா? இவ்வளவு பேர் முன்புவெளிநாடு சென்றார்களா?
ஆக ஒரு நாட்டின் நடப்புக்களை Mundane Astrology  தெரிவிக்கின்றது. அதற்கு உட்பட்டதுதான் தனி மனிதரின்  Natal Astrology.   ஆகவே எல்லாவற்றையும்போல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு.  Within the limitation we can predict.

ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com

கருத்துகள் இல்லை: