Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, ஜூலை 02, 2010

உணர்ச்சி மேலாண்மை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


மனிதன் உணர்ச்சியுள்ள ஜீவன் தான். எல்லா உணர்ச்சிகளும் உபயோகமானவை தான். எதையோ நமக்குச் சுட்டிக் காட்டி நம்மில் சில மாறுதல்களை அவை உண்டாக்குகின்றன. ஆனால் அதைப் புரிந்து கொள்வதில் தான் உணர்ச்சிகள் எழும்போது, கட்டுமீறிப் போகாமல் நம்மை அதில் வைத்துக் கொள்ளப் பழகும் போதுதான் அவை பயன் தருகின்றன.


உதாரணமாக கோபம் வருகிறது. அது இவற்றைச் சுட்டிக் காட்டி திருத்தும் நோக்கமுடையதாக இருந்தால் நமக்கு அது பலன் தருகிறது. ஆனால் கோப வசப்படும் போது, எல்லை மீறி கோபம் எழும்போது, நாம் என்ன பேசுகிறோம். எப்படி நடந்து கொள்கிறோம் என்பது புரியாமல் தடுமாறுகிறோம். நமது அறிவு அப்போது வேலை செய்வதில்லை. கோபத்தில் எதிராளியைக் குத்திக் கிழித்து விடுகிறோம். அவரது மனம் புண்படும்படி பேசி விடுகிறோம். அல்லது கையை ஓங்கி அடித்து விடுகிறோம்.

பின்னால் மன்னிப்பு கேட்டு, வருந்துகிறோம். கோபத்தில் நம் முகம் சிவக்கிறது. கண்கள் சிவக்கின்றன. கைவிரல்கள் முறுக்கேறுகின்றன. உடல் பதறுகிறது. பொதுவில் நமது உடலின் இயல்பான தன்மை மாறிவிடுகிறது. அதிகம் கோபப்படுகிறவனுக்கு வயிற்றுப் புண் (அல்ஸர்) வருகிறது.

கோபம் எழும் போதே இது தேவைதானே? எந்த அளவுக்குக் கோபிக்க வேண்டும்? கோபிக்காமல் இருக்க முடியுமா? என்று சற்றுக் கவனித்துப் பார்க்கத் தெரிந்தால், தேவையானால் கோபித்துக் கொள்ளவும் தேவையில்லை என்றால் கோபத்தைக் கடுப்படுத்திக் கொள்ளவும் தெரியும் மனிதன் மற்றவர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உடையவன் ஆகிறான்.

கோபத்தில் வார்த்தைகள் தடித்து, சண்டை, சச்சரவு வளருகிறது. உறவும் கெடுகிறது. கோப வசப்படும் மனிதன் பிறரைக் கொலை செய்யவும் தயங்குவதில்லை.

தென்னாப்பிரிக்காவில் காந்திஜி இருந்த போது, ஒரு சமயம் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். வெள்ளைக்கார சக பிரயாணி ஒருவர் காந்திஜியைப் பிடித்து பெட்டியிலிருந்து வெளியே தள்ளி விட்டார். இதனால் காந்திஜிக்கு ஏற்பட்ட கோப உணர்ச்சி தான். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டது. தமது சத்தியாக்ரஹ போராட்டத்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவரது கோபம் ஆக்கபூர்வமாக இருந்தது என்பது வரலாற்று உண்மை.

இப்படித் தான் பொறாமையும் ஆனால் அது மற்றவர்களைப் பழிவாங்கும் எண்ணமாக மாறாமல் வாழ்க்கையில் முன்னேற உதவுமானால் பலனுள்ள விதமாக அமையும்.

ஆகவே, இந்த உணர்ச்சிகளை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், மாறாக உணர்ச்சி வசப்பட்டு நம் மதியை இழந்து வேறு ஏதாவது ஏடாகூடமாக செய்து விடுகிறோம்.

உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு அதனைச் சரியான திசையில் பயன்படுத்தத் தெரிந்தால் நாம் முன்னேறலாம்.

மனதில் உணர்ச்சிகள் எழும் போது விலகியிருந்து பார்க்கும் போது, நமது விழிப்புணர்ச்சி (Consciousness) மேலோங்கி நம்மை அது சரியான திசையில் வழி நடத்திச் செல்லும். ஆகவே, உணர்ச்சிகள் எழும் போது அவற்றை நாம் வசப்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும். நாம் ஒரு போதும் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது.

இதுதான் உணர்ச்சிகள் மேலாண்மை என்பதாகும்.

இருந்தாலும்!

நியாயத்திற்கு விரோதமாக தர்க்கத்திற்குப் பொருந்தாதவர்களாக தன்னலம் மிகுந்தவர்களாக மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களிடம் அன்பாக இருங்கள்.

நீங்கள் மக்களுக்கு நன்மை செய்தாலும், அவர்கள் அதற்கு ஒரு சுயநல நோக்கத்தைக் கற்பித்து உங்களைக் குறைகூறுவார்கள். இருந்தாலும் நல்லதையே செய்யுங்கள்.

உங்கள் முயற்சிகளில் வெற்றி பெற்றால், விரோதிகள் தோன்றுவது இயற்கை, இருந்தாலும் வெற்றிப் பாதையில் செல்லுங்கள்.

உண்மையும், வெள்ளை உள்ளமும் உங்களை அபாய நிலைக்குச் செலுத்திவிடும். இருந்தாலும் வெள்ளை உள்ளம் உடையவர்களாக இருங்கள்.

மக்கள் உண்மையாகவே உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ஆனால் உதவி செய்தால் உங்களையே தாக்கக் கூடும். இருந்தாலும் உதவியையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள மிகச் சிறந்தவற்றை உலகுக்கு அளியுங்கள். ஆனால் இவ்வுலகம் உங்களைக் காலால் மிதித்துத் தள்ளி விடும். இருந்தாலும் உலகுக்கு உங்களிடமுள்ள சிறந்தவற்றை வழங்குங்கள்.

http://www.kumudam.com

கருத்துகள் இல்லை: