Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

புதன், ஜூலை 07, 2010

வள்ளுவர் கோட்டம்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டது
.


சிற்பத் தேர்

     இங்கு திருவாரூர் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு உள்ளது. இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

     இத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

http://www.inbasutrula.com

கருத்துகள் இல்லை: