Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, ஜூலை 02, 2010

மாவுச் சத்து உணவுகள

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்)உணவு மற்றும் பண்டங்களை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு இரண்டு மடங்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.


மாவுச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்கிறவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறு உள்ளதா என்று மேற்கொண்ட ஆய்வு விவரம் வருமாறு:

மாவுச் சத்து உணவுகள் உட்கொள்ளும் 15 ஆயிரம் ஆண்கள் மற்றும் 32 ஆயிரம் பெண்களைத் தேர்ந்தெடுத்து சுமார் 8 ஆண்டுகள் தொடர்ந்து அவர்கள் கவனிக்கப்பட்டு வந்தனர். இதில் 158 பெண்களும், 305 ஆண்களும் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.மற்ற சத்து உணவுகளை உட்கொள்பவர்களைவிட,மாவுச் சத்து உணவுகளை உட்கொள்கிறவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்தது.

மாவுச்சத்து உணவே அபாயமல்ல.அந்த உணவும் ரத்தத்தில் கலப்பதற்காக குளுக்கோஸை விடுவிக்கும் வேகம்தான் பெரிய அபாயம். அதிவேகத்தில் குளுக்கோஸை விடுவிக்கும் மாவுப் பொருள்கள் ஹைகிளைகேமிக் குறியீட்டெண் உடையவை என்று அறிவியல் நிபுணர்கள் வரையறை செய்துள்ளனர்.இவை தான் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இதனால் 25 சதவீதம் பெண்கள் இதய நோய்க்கு ஆளாகின்றனர்.

மற்ற எளிய உணவுகள், பழங்கள், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுவதில்லை.மாவுச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.முடி இது இலையில் இருந்தால் அசிங்கம். தலையில் இல்லாவிட்டால் அசிங்கம். தலையில் ‘மயிர் நீப்பின் உயிர் வாழா கவரி மான்’ என்பார்கள். முடி உதிரும் பிரச்சனை மான்களுக்கும் இருந்துள்ளது. அது மட்டுமல்ல, மானே மயிர் உதிர்ந்தால் உயிரைப்போக்கிக் கொள்ள நினைக்கிறது என்றால் அழகுணர்ச்சி அதிகம் உள்ள மனிதனின் நிலையை எப்படிச் சொல்வது.திருமணச் சந்தையில் ஆண்கள் பலர் விலை போகாத நிலைக்கு முடியும் காரணமாக உள்ளது.கல்யாண மாப்பிள்ளைக்கு உள்மாடி காலியாக இருந்தால்கூட பரவாயில்லை. மேல்மாடி மொட்டையாக இருந்தால் கண்டிப்பாக ரிஜக்ட்தான். பலர் முடிவளர்க்கிறேன் பேர்வழி என்று விளம்பரங்களில் காண்பவை முதல் காணாத வேர், இலை, தழை என்று எல்லா உரங்களையும் தெளித்துத் தலையில் பயிர் வளர்க்கப்படாத பாடு படுகின்றனர்.அதுமட்டுமல்ல, இப்போது தலையில் முடியை நாற்று நடுதல் போல நட்டுவிடும் புதிய முறையும் (Hair Planting) வந்துவிட்டது.

இப்பிரச்சினைக்கு விரல் நுனியில் உள்ளது தீர்வு.விரல்கள் பத்தும் மூலதனம் என்பது உடல்நலத்திற்கும் பொருந்தும்.

இரு கைகளிலும் உள்ள நான்கு விரல்களின் (கட்டைவிரலைத் தவிர) நகங்களை ஒன்றோடு ஒன்று சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். வலக்கையின் நான்கு விரல்களின் நகங்களும் இடக்கையின் நான்கு விரல்களின் நகங்களும் உரையுமாறு விரல்களை அசைத்துக்-கொண்டிருக்க வேண்டும். விரலின் பின்பக்க நுனிகள் அதாவது நகங்கள் இருக்கும் பகுதி தலைமுடியின் வேர்ப்பகுதியில் இணைகிறது. அதனால் நகங்கள் ஒன்றோடு ஒன்று உராயும்போது தலைமுடியின் வேர்ப்பகுதி தூண்டிவிடப்படுகிறது. இதனால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. மேலும் முடி வளரவும் இம்முறையில் அதிகம் வாய்ப்பிருக்கிறது. காசா? பணமா? சும்மா இருக்கும்போதெல்லாம் விரல் நகங்களை உரசிக் கொண்டிருப்பதால் நாமும் சுறுசுறுப்பாகவும் இருந்த மாதிரி இருக்கும். முடியும் வளர்ந்து விடுமல்லவா? விரல்கள் இருப்பவர்கள் ஒருகை பார்த்து விடலாமே!இதற்காக ஒன்றும் நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.கைகள் வேலையற்று இருக்கும்போதெல்லாம் செய்யலாமே... தொடங்கிவிட்டீர்களா...

வளர வாழ்த்துக்கள்...

http://www.kumudam.com

1 கருத்து:

myblog சொன்னது…

முடி நடுவதை பற்றி சொல்லுங்கள் நண்பரே