வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
மருதமலை முருகனைக் கண்டு கொள்ளும் பக்தர்கள் இந்த அனுவாவி முருகனை அறியாமையினால் கண்டு கொள்வதில்லை. மருதமலை முருகன் வீற்றிருக்கும் அதே மலையின் நேரெதிரே அடுத்த பக்கத்தில் பெரிய தடாகம் எனும் ஊரில் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் பின்னனியில் ஒரு சுவாரசியமான புராணக்கதை உண்டு. சஞ்சீவி மலையினைத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கும் போது ஏற்பட்ட தாகத்தினால் அனுமான் இந்த மலையில் ஒதுங்கி இருக்கிறார். ஆனால் அவரது தாகத்தினை தவிர்க்க அங்கு தண்ணீர் இருக்கவில்லை. உடனே அவர் முருகக் கடவுளை வேண்ட அவர் தனது வேலினால் மலையின் ஒரு இடத்தில் துளைக்க நீர் ஊற்று தோன்றி அனுமானது தாகத்தினை தணித்திருக்கிறது. அனுமானிற்கு வாவி உருவாக்கி தாகம் தணித்த இந்த இடம் அனுவாவி என்று அழைக்கப் படுகிறது.
கோவையில் இருந்து ஆனைகட்டி செல்லும் சாலையிலிருந்து கொஞ்சம் தள்ளி பெரிய தடாகம் எனும் சிறு கிராமத்தில் உள்ளது இந்த கோவில். கோவை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு சிறிய கோவில்தான். இன்னும் சொல்லப் போனால் கோவையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரியாது.
இயற்கை எழில் சூழ்ந்த அழகான அமைதியான சூழலில் மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலை சுமார் 500 படிகளை ஏறி அடையலாம். மாலைவேலையில் இங்கு சென்றால் பல்வேறு பட்ட பறைவைகளின் கானங்களை கேட்டு மகிழலாம். கோவை முழுவதற்குமே இந்த பகுதிகளில் இருந்துதான் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. முன்பெல்லாம் மிகவும் பசுமையான மரங்களுடன் ஆக்ஸிஜன் தொழிற்சாலையாக இருந்த இப்பகுதி தற்போது செங்கல் காலவாய்களின் வருகைக்குப்பின் மாசடைந்து புகைமூட்டத்துடன் எப்பொழுதும் காணப்படுகிறது.
http://kadalodi.baranee.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக