Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, டிசம்பர் 04, 2009

பிரபஞ்சத்தில் நீண்டு செல்லும்.....

Vaalka Valamudan


பிரபஞ்சத்தில் நீண்டு கொண்டு செல்லும் அற்புதங்களின் பட்டியல்
மனித குலத்தை அச்சுறுத்தும் விண்கற்களால் ஆபத்து நேருமா?


பெளதிகம், இரசாயனம், கணிதம், தொழில் நுட்பம், இலத்திரனியல் போன்ற பல்வேறுபட்ட விஞ்ஞானத்துறைகளுள் மிகவும் பழைமை வாய்ந்தது வானசாஸ்திரம். எமது அயல் நாடான பாரதத்தில் கூட வான சாஸ்திரம் அக்காலகட்டத்திலேயே கொடிகட்டிப் பறந்தது என்று வரலாறு இயம்புகின்றது.
தற்பொழுது அமெரிக்கா, சோவியத் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் அண்மையில் நிலாவிற்கு சந்திராயன் என்ற பெயருடைய செயற்கைக் கோளை ரொக்கெட் மூலம் ஏவி சாதனைபடைத்தது. அம்புலியிலிருந்து சந்திராயன் அனுப்பிவைத்த தகவல்களின்படி அங்கு தண்ணீர் உள்ளது என்பது உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பண்டைய காலத்தில் வாழ்ந்த ஆசிவாதிகள் இரவு, பகல் அடுத்தடுத்து உண்டாவதையும் வடக்கு, தெற்கு துருவப் பிரதேசங்களில் நீங்கலாக ஏனைய கண்டங்களில் சூரியன் இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்குள் பன்னிரெண்டு மணிநேரம் காட்சியளிக்கின்றமையும் கண்டறிந்தனர். வீடு நிர்மாணிப்பதற்கு முக்கிய மூலவஸ்து வாகத் (மற்aரியல்) திகழ்கின்ற சீமெந்து கண்டுபிடிக்கப் படாமையினால் இரவில் திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்.
இதனால் புராதன மக்கள் ஆகாயத்தில் அவ்வப்போது தோன்றுகின்ற சந்திரன் அடங்கலாக விண்மீன்கள், வானிலிருந்து புவியை நோக்கி மின்னல் வேகத்தில் விழுகின்ற விண்கற்கள் போன்றவற்றினால் தங்களுக்கு ஏற்படுகின்ற நன்மைதீமைகள் எவை என்பதை நன்கு உணர்ந்துகொண்டனர்.
மேலும் வானத்தில் அபூர்வமாகக் காட்சியளித்த வால்வெள்ளி! அவர்களுக்கு பெரும் கிலியை உண்டு பண்ணியது. தூமகேது தோன்றினால் தமக்கோ அல்லது நாட்டிற்கோ கெடுதல் ஏற்பட்டுவிடும் என்று முழுமையாக நம்பினார்கள்.
எனவே ஆகாய கங்கையில் சூரியனை நீர்வட்டமாகச் சுற்றி வருகின்ற பூமி, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் நெட்ரியூன் மற்றும் கிரகங்கள் பட்டியலில் இருந்து சர்வதேச விஞ்ஞானிகளினால் நீக்கப்பட்ட புளூட்டோ என்பனவற்றின் தாற்பரியங்கள் எவை என்பதை நோக்குவோம். அத்துடன் நட்சத்திரங்கள் விண்கற்கள், விண்துகள்கள் போன்ற பற்றியும் சிறிது ஆராய்வோம்.
அதற்கு முன் வான்வெளியில் நாம் காண்கின்ற விண்மீன்கள், கோள்கள் போன்றவற்றின் அசைவு, உருவமைப்பு, தன்மை ஆகியவற்றின் ஆராய்ச்சியே விண்ணியல் ஆகும் என்றும் கூறலாம். இது ஏனைய அறிவுத்துறைகளை எல்லாம் உள்ளடக்கிய பரந்த துறையாகும்.
கிரேக்க நாட்டு விஞ்ஞானியான அரிஸ்ரோட்டில் மற்றும் தொலமி ஆகியோர் புவி தட்டையானது அல்ல முட்டை வடிவானது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தனர். மேலும் ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து இரண்டாம் ஆண்டு இத்தாலி நாட்டின் கலிலியோ என்ற விஞ்ஞானி அண்டவெளியை அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் ஆராய்ந்து மூட நம்பிக்கையை பிழையென்று நிரூபித்துக் காட்டினார்.
ஆனால் கத்தோலிக்க திருச்சபை அவர் கூறுவது பொய் என்ற அடிப்படையில் சிறைக்கு அனுப்பியது. அதன் பின்னர் இத்துறையை மிகவும் துல்லியமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள் இருவர் சூரியனைப் பூமி சுற்றிவரும் பாதை வட்ட வடிவமானது அல்ல நீள்வட்டப் பாதை என்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்தனர். ஆயிரத்து எழுநூற்று இருபத்தேழாம் ஆண்டு பிரித்தானிய கணித விஞ்ஞானியான சேர் ஐஸாக் நியூட்டன் ஒரு அப்பிள் மரத்திலிருந்து பழம் கீழ் நோக்கி விழுவதைக் கண்டு பல உண்மைகளைக் கண்டார்.
இதன் அடிப்படையில் இவ்வுலகில் உள்ள பொருட்கள் யாவும் ஒன்றையொன்று கவருகின்றன என்றும் அறிந்துகொண்டார். அதன் பின்னரே ‘நியூற்றன்ஸ் விதி விஞ்ஞானத் துறையினரின் பயன்பாட்டிற்கு அறிமுகமானது. அதன் பின்னர் தோன்றிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியின் பயனாக மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. சில விண் மீன்களிலிருந்து வெளியேறும் ஒளியானது புவியை வந்தடைய இருபது கோடி வருடங்கள் செல்கின்றன என்பதையும் அந்நட்சத்திரம் நிலைகொண்டுள்ள தொலைவை ஒளி ஆண்டு அலகில் கூறி வைத்தனர்.
அக்காலகட்டத்தில் ரொக்கெட்டோ செயற்கைக் கோளோ கண்டுபிடிக்கப்படவில்லையென்பதனால் வேற்றுக் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சி அனைத்தையும் அதிசக்தி உயர்ந்த தொலைநோக்கி மூலம் தான் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள முடிந்தது. நிலாவின் மேற்பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் மற்றும் சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள ரம்மியமான வளையங்களையும் கண்டுவியந்தனர்.
ஒரு நட்சத்திரத்தை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள தொலைநோக்கியினூடாகப் பார்த்தாலும் வெறும் கண்ணால் நோக்குவது போல அது ஒரு ஒளிப்புள்ளியாகவே தென்படும். ஏனெனில் விண்மீன்கள் புவியிலிருந்து கோடிக்கணக்கான ஒளியாண்டு தொலை தூரத்தில் இருப்பதே பிரதான காரணியாகக் கொள்ளலாம். பதினான்கு கோடி எண்பத்து எட்டு இலட்சம் கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள சூரியனின் ஒளி பூமியை வந்தடைய சுமார் எட்டு நிமிடங்கள் எடுக்கின்றன.
சாதாரண ஒளிக்கதிரை ஓர் அரியத்தின் ஊடாகச் செலுத்தினால் அவ்வொளியில் வானவில்லில் தோன்றும் ஏழு வர்ணங்களையும் வெளிப்படுத்தும் என்பதை விஞ்ஞானிகளான ஐஸாக் நியூற்றன் சி.வி. இராமன் போன்றவர்கள் நிரூபித்துக் காண்பித்தனர்.
இது வரை காலமும் பூமியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தவாறு ஆராய்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் அண்டவெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் விண்வெளி மையத்தில் இருந்தவாறு வேற்றுக் கிரகங்களின் பலவிலைமதிக்க முடியாத தரவுகள் பெறப்படுகின்றன.
இனி சூரியனை நீள்வட்டபாதையில் சுற்றி வருகின்ற பூமியைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
பூமி உருண்டை வடிவமென ஏற்றுக்கொண்டாலும் அது சரியான வட்டமாக இருப்பதில்லை. இருதுருவங்களில் சிறிது தட்டையாகவும் கற்பனைக் கோடான பூமத்திய ரேகைப்பகுதியில் சற்று படுத்தும் இருக்கின்றது. பூமத்திய ரேகையின் ஊடாகச் செல்லும் விட்டம் பன்னிரண்டாயிரத்து அறுநூற்று எண்பத்து மூன்று கிலோ மீற்றராகும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதுடன் முந்நூற்று அறுபத்து ஐந்தே கால் நாட்களில் சூரியனையும் ஒரு முறை சுற்றி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி அளவில் பூமியானது சூரியனுக்கு அருகில் வருகின்றது.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை ஒரு நாளென்றும் சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு வருடமென்றும் கொள்ளப்படுகின்றது. பூமி தன்னைத்தானே சுற்றுவதினால் இரவு, பகல் உண்டாவதும், சூரியனைச் ணி|Zரிதினால் பருவ காலங்களும் ஏற்படுகின்றன.
அடுத்து சந்திரனைப் பார்ப்போம். சந்திரன் பூமியின் உப கிரகமாகும். ஜீவராசிகளுக்கு சூரியனைப் போல் சந்திரன் அவ்வளவு முக்கியமானதல்ல. ஆனால் சந்திரன் இல்லையென்றால் குளிர்ந்த நிலா வெளிச்சத்தை நாம் கண்டுகளிக்க முடியாது. பூமி சூரியனைச் சுற்றிவருவது போலச் சந்திரனும் புவியைச் சுற்றி வருகின்றது. பூமியில் ஒருவன் ஒரு கல்லை அறுபது மீற்ற உயரத்திற்கு எறிவானெனின் சந்திரனில் முண்ணூற்று அறுபது மீற்றர் தூரத்திற்கு எறிவான். சந்திரனின் ஈர்ப்பு சக்தியானது பூமியில் உள்ளதைவிட ஆறிலொரு பங்காகும்.
பூமியில் சூரிய வெப்பத்தை வாயுக்கள் ஓரளவு தடுத்து குறைக்கின்றன. சந்திரனில் காற்று இல்லாத படியினால் சூரியக் கதிர்கள் விழுகின்ற பகுதியில் வெப்பநிலை கூடவே காணப்படும். ஏனைய பகுதிகளில் துருவப் பிரதேசங்களில் உள்ள உஷ்ண நிலையைக் கொண்டிருக்கும். தொலை நோக்கி வாயிலாக சந்திரனை உற்று நோக்கினால் அதன் மேற் பரப்பில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் அவதானிக்கலாம். இதுவே எங்களுக்கு பாட்டி வடைசுடுவது போன்று காட்சியளிக்கின்றது.
சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அதே அளவு நேரத்தில் அது தன்னைத்தானே சுற்றுகிறது. இதனால் பூமியில் உள்ளோர் நிலாவின் ஒரு பகுதியைத்தான் எப்பொழுதும் காணக்கூடியதாகவுள்ளது.
இனி புதன் பற்றி அறிவோம். இதனை ஆங்கிலத்தில் ‘மெர்க்கூரி’ என்று அழைக்கின்றனர். சூரியனுக்கு மிகவும் அண்மையில் நிலைகொண்டுள்ள கிரகம் புதனாகும். அனைத்துக் கிரகங்களுக்குள்ளும் புதனே மிகச் சிறிய கிரகமாகும். இக்கிரகத்தின் விட்டம் நான்காயிரத்து எண்ணூறு கிலோ மீற்றராகும். இது சந்திரனைவிட சிறிய பருமனுடையது.
புதன் சூரியனை ஒரு முறை சுற்றிவர எண்பத்தெட்டு நாட்கள் செல்கின்றன. நாம் வாழுகின்ற பூமியானது இருபத்து நான்கு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றுவதினால் புவியின் எல்லாப் பகுதிகளுக்கும் இரவு, பகல் மாறி மாறிக்கிடைக்கின்றது. ஆனால் புதனில் நீண்டநாட்களுக்கு இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. புதன் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது கதிரவனின் ஒளி படுகின்ற பகுதியின் வெப்பநிலை சுமார் நானூறு பாகை செல்ஸியஸ் ஆகவும் தூரத்தில் இருக்கும் வேளையில் ஏறத்தாழ இருநூற்று எண்பது பாகை செல்ஸியஸாகவும் தென்படுகின்றது என வானிலை ஆய்வாளர் கூறுகின்றனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே புதன் ஒரே நேர் கோட்டில் வலம்வரும்போது அது சூரிய பிம்பத்திற்குக் குறுக்காக ஒருசிறு கரும்புள்ளியாக ஊர்ந்து செல்லும். இதனைக் கிரகணம் என்று கூறுவதற்குப் பதிலாக புதசந்திரணம் என்று அழைக்கின்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்திலுள்ள தொலைநோக்கி வாயிலாக புதனை உற்று நோக்கினால் வளர்பிறை, தேய்பிறை பூரணை, அமாவாசை நிகழுவதைக் காணலாம். இப்பிரபஞ்சத்தில் நிகழுகின்ற அற்றபுதங்களை கண்டுகளிக்க உறுதுணை புரிகின்ற தொழில்நுட்ப கருவிகள் நவீன முறையில் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன.
சுக்கிரனை (வீனஸ்) ஆராய்வோமாகில் இக்கிரகம் பருமனிலும் திணிவிலும் பூமியை ஓரளவிற்கு ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனுடைய விட்டம் பன்னிரெண்டாயிரத்து முன்னூற்று இருபது கிலோ மீற்றராகும். இது சூரியனை ஒருமுறை சுற்றிவர இருநூற்று இருபத்து நான்கு நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரு நேர்கோட்டில் வரும்போது இதுவும் கரும்புள்ளியாகதான் தோற்றமளிக்கும். இந்நிகழ்வை சுக்கிர சந்திரணம் என அழைப்பார்கள். இது வெகு அபூர்வமாக நிகழுகின்றது.
இறுதியாக இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூன் எட்டாம் திகதி நடைபெற்றது. அடுத்ததாக எதிர்வரும் இரண்டாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி நிகழும் என்று வானியலாளர் கூறுகின்றனர். எட்டு ஆண்டுகள் இடைக்காலத்தைக் கொண்ட இச்சுக்கிரசந்தரணம் இரண்டாயிரத்துப் பன்னிரெண்டுக்குப் பின்னர் நூற்றாண்டு காலப் பகுதியைக் கடந்ததும் நிகழுமாம், இக்கிரகத்தைச் சுற்றி வென்நிற மேகப்படலம் பரிணமித்துள்ளது. இதனால் சுக்கிரனின் மேற்பரப்பைத் துல்லியமாக ஆராய்வதில் சிக்கல் நிலை தோற்றியுள்ளது.

இனி அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய் (மார்ஸ்) பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு அறுநூற்று எண்பத்தேழு நாட்கள் எடுக்கின்றது. தன்னைத்தானே சுற்ற இருபத்து நான்கு மணி நேரமும் முப்பத்தேழு நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும். பூமியின் அச்சு இருபத்து மூன்று அரை பாகை சரிந்துள்ளது.
செவ்வாய் தன்னைத்தானே சுற்றும் அச்சு இருபத்து நான்கு பாகையில் சரிந்துள்ளமையினால் பருவகாலம் புவியை ஒத்ததாகவே காணப்படுகிறது. செவ்வாய் சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம் ஏறக்குறைய பூமி கதிரவனைச் சுற்ற எடுக்கும் காலப்பகுதியைக் காட்டிலும் இருமடங்காக உள்ளதினால் காலநிலையும் இருமடங்காகின்றது. தொலைநோக்கி வாயிலாக செவ்வாயை உற்று நோக்கும் வேளையில் அது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
இனிநாம் ஆராயவேண்டிய கிரகம் வியாழன் (ஜுபிற்றர்) ஆகும். இதன் பருமன் ஏனைய கிரகங்களை விட பெரிதாக உள்ளதினால் இதனை ‘ராட்சத கிரகம்’ (ஜயன்ற் பிளனற்) என அழைக்கப்படுகின்றது.
இது தன்னைத்தானே ஒருமுறை சுற்ற ஒன்பது மணித்தியாலங்களும் ஐம்பத்து ஐந்து நிமிடங்களும் ஆகின்றது. ஆகவே இந்த ராட்சத கிரகம் பூமியை விட எவ்வளவு வேகமாகச் சுழலுகின்றது என்பதைக் கற்பனை பண்ணிப்பார்க்கலாம். அதேவேளை வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றிவர பதினொரு வருடங்களும் முந்நூற்று பதினைந்து நாட்களும் எடுக்கின்றது. வியாழனிலிருந்து கிடைக்கப்பெற்ற நிறமாலையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தபோது அங்கு அம்மோனியா, மெதேன் போன்ற வாயுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். நாம் வாழுகின்ற பூமிக்கு ஒரே ஒரு உபகிரகம் உள்ளது. ஆனால் வியாழனுக்கு பதினாறு உபகிரகங்கள் சுற்றிவருவதாக அண்மையில் கண்டிபிடித்துள்ளனர்.
எமது ஆராயவேண்டிய பட்டியலில் அடுத்து வருவது யுரேனஸ் ஆகும். ஆயிரத்து எழுநூற்று எண்பத்தோராம் ஆண்டுவரை சூரிய குடும்பத்தில் ஆறு கிரகங்களே உள்ளன என்று நம்பியிருந்தனர். வில்லியம் ஹர்ஷா என்னும் விஞ்ஞானியினால் யுரேனஸ் என்ற கிரகம் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதாம். இதன் விட்டம் நாற்பத்தெட்டாயிரம் கிலோ மீற்றராகும். தன்னைத்தானே சுற்ற பத்து மணி நாற்பத்து எட்டு நிமிடங்கள் எடுக்கின்றது. சூரியனை ஒருமுறை சுற்ற எண்பத்து நான்கு வருடங்கள் செல்கின்றது. யுரேனெஸ்ஸிற்கு ஐந்து உப கிரகங்கள் உள்ளன.
அடுத்ததாக நெப்ரியூனைப் பார்ப்போம். இக்கிரகம் ஆயிரத்து எண்ணூற்று நாற்பத்தாறாம் ஆண்டு பெர்லின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்த விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. நூற்று அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுற இது சூரியனைச் சுற்றி வருகின்றது. தன்னைத்தானே சுற்ற பதினைந்து மணி நாற்பது நிமிடங்களும் செல்லும். இக்கிரகம் சூரியனிலிருந்து மிகவும் தொலைவில் நிலைகொண்டுள்ளதினால் எப்பொழுதும் குளிராகவே காணப்படுகின்றது. இதற்கு இரண்டு உபகிரகங்கள் உள்ளன. இவ் உபகிரகங்களில் ஒன்று ஆறு நாட்களுக்கு ஒருமுறை தாய்க்கிரகத்தை எதிர்த்திசையில் வலம் வருகின்றது. நெப்ரியூனை வெறுங்கண்களால் (நேகட் ஐஸ்) பார்க்க முடியாது.
இனி இக்கால விஞ்ஞானிகளினால் கிரகங்கள் பட்டியலிலிருந்து துரதிஷ்டவசமாக நீக்கப்பட்ட புளூட்டோபற்றி சிறிது ஆராய்வோம். இக்கிரகம் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தினரால் 8qனிtபிடிக்கப்பட்டது. இது சூரியனிலிருந்து ஐநூற்று எழுபத்தாறு கோடி கிலோ மீற்றர் தொலைதூரத்தில் உள்ளது.
இனி தற்கால விஞ்ஞானிகளினால் புளூட்டோ கிரகத்தை கோள்கள் பட்டியலிருந்து நீக்கியமைக்குரிய பிரதான காரணியைப் பார்ப்போம். அதாவது புளூட்டோவிற்கு கிரகங்களுக்கு இருக்க வேண்டிய தாற்பரியங்கள் மிகக் குறைவாகவே உள்ளதைக் குறிப்பிடலாம்.
இனி விண்துகள் பற்றிப் பார்ப்போம். அதாவது செவ்வாயின் பாதைக்கும் வியாழனின் பாதைக்கும் இடையில் வித்தியாசமான பருமனுடைய பல்லாயிரக்கணக்கான சிறு வஸ்துக்கள் ஏனைய கோள்களைப் போலவே சூரியனை ஒழுங்காகச் சுற்றி வருகின்றன. இவற்றையே விண்துகள்கள் என்று அழைக்கின்றனர்.
இறுதியாக விண்கற்கள் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். வானத்தில் கரு முகில்கள் இல்லாது கோடான கோடி விண்மீன்கள் எம்மைப் பார்த்து கண் சிமிட்டுகின்ற வேளையில் நட்சத்திரம் போன்ற தோற்றமுடைய பொருளொன்று திடீரென்று புவியை நோக்கி மின்னல் வேகத்தில் வானவில்லில் உள்ள வர்ணங்களுடன் வீழ்வதைக் காண்கின்றோம். இதுதான் விண்கற்களாகும். சிறிய கற்களினால் பூமியில் வாழ்வோருக்கு பங்கம் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஆயிரத்து தொள்ளயிரத்து எட்டாம் ஆண்டு சைபீரியக்காட்டில் வீழ்ந்த பாரிய விண்கல்லினால் பெரும்சேதம் உண்டாகிவிட்டதை அறிகின்றோம்.
இதனால் ஏற்பட்ட குழி சுமார் நாற்பத்து ஐந்து கிலோ மீற்றர் விட்டம் உடையதாம். வனப் பிரதேசத்தில் வீழ்ந்த காரணத்தினால் மனித உயிர்களுக்கு அவ்வளவாக தேசம் ஏற்பட்டிருக்காது. ஆனால் நகர்ப்புறங்களிலோ அல்லது சமுகத்திரங்களோ ராட்சஷ விண்கற்கள் விழும் பட்சத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு விடும். கடலில் விழுகின்ற பாரிய பருமனுடைய விண்கல்லால் சுனாமி ஏற்படலாம். இதன் கொடூரத்தை நாம் இரண்டாயிரத்து நான்கு டிசம்பர் மாதம் நன்கு உணர்ந்து கொண்டோம் தானே!
பிரபஞ்சத்தில் உள்ள அற்புதங்களை விஞ்ஞானிகள் கண்டுகளிக்க தொழில்நுட்ப சாதனங்கள் உறுதுணை புரிகின்றன. அவற்றில் அதிசக்தி வாய்ந்த தொலை நோக்கி, ராடார், ராக்கெட்டில் ஏவப்படுகின்ற ‘ஸ்கை லாப்’ என்பனவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர் என்பது இந்நூற்றாண்டு வாழ் மக்கள் செய்த பெரும் பாக்கியம்.

கருத்துகள் இல்லை: