வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.
1. திருகணிதப் பஞ்சாங்கம்.
2. வாக்கியப் பஞ்சாங்கம்.
திருகணிதத்திற்கு முன்பு வந்தது வாக்கியப்பஞ்சாங்கம். முதன்முதலில் கிரகங்களின் வேகம், சுற்றும் பாதை ஆகியவற்றைக் கண்டறிந்த நமது முனிவர்கள் அவற்றை ஸ்லோகங்களாக வடித்தனர். இந்த ஸ்லோகங்களின் அடிப்படியில் கணிக்கப்பட்டதுதான் வாக்கியப் பஞ்சாங்கம்.
அதற்குப் பிறகு வந்த நமது பெரியவர்கள் அதில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார்கள். சந்திரன் இழுப்பு சக்தி, பூமியின் இழுப்பு சக்தி, மற்றும் சூரியனின் இழுப்பு சக்தி ஆகியவற்றை விடக் குறைவாக உள்ளதால் அடிக்கடி அவர்களின் ஈர்ப்பு சக்திக்குட்பட்டு தன் பாதையில் வளைந்து நெளிந்து செல்கிறது. அதன் பாதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதன் காரணமாக அதன் பாதையில் சில வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இவ்வித்தியாசங்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது திருகணிதப் பஞ்சாங்கம்.
ஆகவே திருத்தப்பட்ட பஞ்சாங்கம் திருகணிதப் பஞ்சாங்கம். திருகணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் அதிக பட்சமாக 6 3/4 மணி நேரம் வரையில் வித்தியாசம் ஏற்படலாம். இந்த நேர வித்தியாசத்தால் நட்சத்திரங்கள் மாறும். இருப்புதசையில் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும்.
இன்றைய நாட்களில் கணிதம் மிக வேகமாக வளர்ந்துள்ளது. துல்லியமாகச் சந்திரனில் நாம் இறங்க முடியும். இவ்வாறு இன்றைய நாட்களில் உள்ள கணக்கும், திருகணித ரீதியிலான கணிதமும் ஒரே மாதிரியாக இருப்பதனால் திருகணிதம்தான் ஜோதிடத்தில் கையாள முடியம். Drik System is astronomically and mathematically correct. ஆகவே ஜோதிடம் பயில உள்ள நமது நேயர்கள் திருகணித முறையையே கையாள வேண்டுமென கூறிக் கொள்கிறோம்.
ஜோதிடரத்னா S. சந்திரசேகரன் [feedback@tamiloviam.com]
http://www.tamiloviam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக