வாழ்க! வளமுடன்!
தமிழ் சித்தர்கள் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம் தமிழுக்கே உரியதாகி “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி” என்ற தமிழின் பெருமையை உடைய மருத்துவம் ஆகும். விஞ்ஞானத்தை தன்னுள் அடக்கிய மெய்ஞ்ஞான தத்துவத்தை சித்தர்களால் தமிழ் நல்லுலகிற்கு அளிக்கப்பட்ட மருத்துவமாகிய சித்த மருத்துவத்தில் சித்தர்கள் அஷ்டாங்க யோகத்தால் பெற்ற சிறப்பு சக்தியால் மூலிகை இனங்களை தொகுத்து பட்டியலிட்டு மருத்துவ பண்புகளுடன் விளக்கி “குணவாகடம்” என்று தலைப்பிட்டு “மூலிகை” மருத்துவத்தின் சிறப்பை கூறிச் சென்றுள்ளனர்.
“தாவர வர்க்கம்”
“புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”-தாயுமானவர்.
ஓரறிவுயிர்களான புல், பூண்டு, செடி, கொடி, மரம், பட்டை, கொட்டை, வேர் ஆகிய இவைகளே மருந்திற்கு பயன்படுகிறதினால் “மூலிகை” என அழைக்கப்படுகிறது. மூலி ஸ்ரீ வேர், தலைகீழ் உள்ள கிழங்குகளையும் குறிக்கும். மருந்து ஸ்ரீ மூலப்பொருள், அடிப்படையான ஆதாரமான பொருள். மூலிகை என்பது ஒரு பொருளில் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் இருந்து கொண்டு குறிக்கும் நுட்பங்களையும் குறிப்பதாகும்.
மூலிகை பறிக்கும்போது கூறப்பட வேண்டிய மந்திரம்
“ஓம் மூலி, ஓங்கார மூலி, உன் உயிர் உன் உடலில் நிற்க ஸ்வாகா.”
பண்டைய காலத்தில் மூலிகைகளின் பயன்பாடு
பண்டைய காலத்தில் குடிசைகளுக்கு கூரை, படகுகளுக்கு வெட்டு மரம், துணிகளுக்கு இழைகள், நார்கள், அவற்றுக்கு வண்ணம் தோய்க்க சாயங்கள் என ஏராளமான மூலிகைச் செடிகள் பயன்பட்டு வந்தன.
தற்காலத்தில் மூலிகையின் பயன்பாடு
1.புற்று நோய் தீர்க்க நித்ய கல்யாணியிலிருந்து Vinblastin, Vincoblastin என்ற மருந்துகளும் Barley யில் இருந்து மென்தால்பின் என்ற மருந்தும் தயாரிக்க படுகின்றன.
2.AIDS என்னும் மேக உருக்கி நோயை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை “அதிமதுரத்திலிருந்து” பிரிக்கும் Glycerine சத்து கட்டுப்படுத்துவதாக Japanனில் கண்டுபிடித்துள்ளனர்.
3.துளசி ஒரு கருத்தடை மருந்து.
4.இரைப்பை புற்று நோயை வெள்ளைப் பூண்டு தடுக்கும்.
5.வேம்பு ஊhசழஅழளழஅந களை பாதிக்காமல் நோய் கிருமிகளை மட்டும் அழிக்கும் அபூர்வ சக்தி படைத்தது.
தாதுச் சத்துகள் உள்ள மூலிகையின் பயன்பாடு
மூலிகையில் காணப்படும் தாது உப்புகள் பக்குவப்படுத்தப்பட்ட நிலைகளில் Protein உடன் சேர்த்து காணப்படும். எனவே உடலில் தாது உப்புக் குறைவினால் வரும் நோயினை அந்த உப்பு அதிகமாக உள்ள மூலிகையினை கொடுத்து சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம். இஃது பாதுகாப்பானதும், பக்க விளைவு இல்லாததுமாகும்.
எண் உலோகச் சத்து மூலிகையின் பெயர்
1 இரும்புச் சத்து கரிசலாங் கண்ணி, பொன்னாங்கண்ணி
2 ஈயச் சத்து சீதேவி செங்கழுநீர், சிறுபீளை விழுதி, வெள்ளறுகு
3 செம்புச் சத்து தேக்கு, அவுரி, சிறுகீரை, தாமரை, மூக்கிரட்டை, புளியரணை
4 தங்கச் சத்து செம்பருத்தி
காயகற்ப மூலிகைகள்
சித்த மருத்துவத்தில் காயகற்பம் முதன்மை நிலையடைகிறது. உடல் நோய் உளநோயகற்றும் நிலைகளையே நாம் காயகற்பத்தில் காண முடியும்.
எ.கா.:
பொருந்திட்ட கொல்லனுடைய கோவையுண்டு
போக முனி கோடிவரை யிருந்திட்டாரே.-சட்டமுனி கற்பம் 100
காயகற்ப விதிகளில் பயன்படும் மூலிகைகள்
1.ஆதிகாய சித்தி: உடலை விரைவாகச் சித்தி பெறச் செய்கிறது. (எ.கா. தூதுவாளை, பேய்ச்சுரை, பேய்ச்சீந்தில்.)
2.காயசித்தி: மிளகு, மஞ்சள் கரிசலை, சேராங்கொட்டை
3.கற்ப மூலி: கீழா நெல்லி, சக்கரை, வேம்பு
4.நரை திரை மாற்றி: கருநெல்லி, சிவனார் வேம்பு
5.காயத்தை வேதிச்சி: செங்குமரி, கருநொச்சி
தெய்வ வழிபாட்டில் மூலிகைகள்
வில்வம், துளசி, மஞ்சள்.
யாகத்திற்கு பயன்படும் மூலிகைகள்
சடாமஞ்சில், தாளிசப்பத்திரி, ஆல், அரசு, புரசு.
ஹோமங்களில் சேர்க்கப்படும் மூலிகைகள்
உளுந்து, தர்ப்பைப்புல், அகில் கட்டை, சந்தன கட்டை, தேவதாரு கட்டை, கருங்காலி கட்டை.
மருத்துவத்தில் மூலிகை பயன்பாடு
உடனடி நிவாரண மூலிகை
1.வாயு பிடிப்பிற்கு: முருங்கை இலைச்சாறு + உப்பு
2.உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி: சோற்றுக்கற்றாழை சோறு மட்டும் 50 கிராம் அளவு எடுத்து சாப்பிட இருவேளை உடனே தீரும்.
3.கட்டி உடைவதற்கு: பிரம்ம தண்டு செடியை பறித்து விளக்கெண்ணெய்யில், தடவி விளக்கில் வாட்டி வெளியே போட கட்டி உடையும்.
நஞ்சு முறிவிற்கு மூலிகைகள்
நஞ்சுபொருள்
வெள்ளை பாஷாணம்
செம்பு
எட்டி
கற்சுண்ணாம்பு
மூலிகை
அவுரிவேர் + மிளகுக் குடிநீர்
பழச்சாறு + சுக்குத்தூள்
நாவல் பட்டைக்குடிநீர்
தேங்காய்ப்பால், மஞ்சள் குடிநீர்
நவகிரகங்களும், மூலிகைக்கும் உள்ள தொடர்பு
பூமியைப் போல் நவக்கிரகங்களும், பஞ்சபூத பஞ்சீகரணத்தால் உண்டானவை. நவகிரகங்களின் பார்வை பூமியில் உள்ள உயிர்களின் மீது படுகிறது. நம் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் கிரகங்களுக்கான, மரக்கட்டை, மற்றும் தானியங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
கிரகம் மரக்கட்டை தானியம்
சூரியன் எருக்கு கோதுமை
சந்திரன் முருக்கு நெல்
செவ்வாய் கருங்காலி துவரை
புதன் நாயுருவி பச்சைப்பயிறு
குரு அரசு கொத்துக்கடலை
சுக்கிரன் அத்தி மொச்சை
சுனி வன்னி எள்
ராகு அருகு உளுந்து
கேது தர்ப்பை கொள்ளு
நவகிரக ஹோமங்கள் நடத்துவதன் மூலம் கிரக தோடங்கள், மற்றும் கன்ம நோய்களை நீக்கலாம்.
எளியமுறையில் பயன்படும் மூலிகைகள்
1.குப்பைமேனி தைலம்
2.அகத்திக்கீரைத் தைலம்
3.குளியல் பவுடர்
4.பற்பொடி
சுற்றுப்புறச்சூழலில் மூலிகைகளின் பங்கு
1.காடுகளில் காணப்படும் மூலிகை மரங்கள் இயற்கைச் சூழலை சீர்செய்கிறது. மண் அரிப்பைத் தடுத்து, பூமிக்கடியிலுள்ள நீர் மட்டங்களை சமப்படுத்துகிறது.
2.மலை மேல் உள்ள மரங்கள் உயிரினங்களின் இருப்பிடமாக இருந்து மழை பெய்வித்து, குளிர்ச்சியினைத் தருகிறது.
3.செடிகள் பிராண வாயுவைத் தருகிறது.
வசியம் தீர்க்கப்பயன்படும் மூலிகை
நீல அவுரியின் பட்டை எலுமிச்சங்காயளவு அரைத்து காடி நீரில் கரைத்து சிறிதளவு வெல்லத்தைத் தந்தால் மருந்தீட்டினால் ஏற்பட்ட மயக்கம் தீரும்.
விலங்குகளுக்கு மூலிகை பயன்பாடு
1.நாய் தன் வயிற்று வலிக்கு அருகம் புல்லைத் தின்று வலியை நீக்கிக் கொள்கிறது.
2.கோழி தன் வயிற்று வலிக்கு குப்பைமேனி மூலிகையைத் தின்னும்.
தாதுவர்க்கத்தில் மூலிகையின் பங்கு
1.சுத்தி – செம்புச் சுத்தி – செம்பருத்தி இலைச்சாறு.
2.பற்பம் - கருவங்கத்தை துளசிச் சாற்றில் புடமிட்டெடுக்க பற்பமாகும்.
3.துணை மருந்தாக – நாகபற்பம் - துணைமருந்து – கருப்பஞ்சாறு – தீரும் நோய் மேகவெட்டை.
இரசவாதத்திற்கு மற்றும் இரசமணிகள் செய்ய இரசத்தைக் கொண்டு மற்ற உலோகங்களை தங்கமாக்கும் முறையே இரசவாதம் எனப்படும்.மூலிகைகளின் சாற்றினால் சரக்குகளுக்கு கவசம் செய்தும் சுருக்கு கொடுத்தும் இரசவாதம் செய்யப்படுகிறது.
எ.கா. கருப்பு ஊமத்தங்காயில் இரசமணி 108 புடமிடப்படுகிறது.
உணவுப் பொருட்களில் மூலிகைகளின் பங்கு
1.சேப்பங்கிழங்கு இலையிலிருந்தும் இலைக்காம்பிலிருந்தும் எடுக்கப்பட்டச் சாறு குருதிப் பெருக்கை நிறுத்த சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
2.பூசணிக்காயில் Vit B1 உள்ளது.
3.பப்பாளியில் Vit B2, Vit A உள்ளது.
4.முருங்கைக் கீரையில் Vit A உள்ளது.
இலைச்சாறுகளின் மகிமை
1.சுத்தம் பெற்ற உடலின் வெளிப்புறம் போல் உடலுள்ளே நரம்புகள், இயங்கி நல்வினைத்தரும் “அருகம்புல் சாறு”
2.இலந்தையிலை ஒருகைப்பிடி பறித்து சாறாக்கி ஐந்தாறு மிளகுடன் சில பூண்டுகளை அரைத்து மாத ருதுவான இளங்காலை வெறும் வயிற்றில் முதல் இரண்டாம் நாள் கொடுக்க கருப்பை சுத்தமாகி புத்திரப்பேறு உண்டாகும்.
உணவே மருந்து மருந்தே உணவு
கீரையை துவையலாக அரைத்து சாப்பிடுவதன் மூலம் அஃது மருத்துவமாக மாறுகிறது. நமது அன்றாட வாழ்வில் அறுசுவைகளை உணவில் நாம் கீரைகளின் மூலம் பெறுகிறோம்.
புல்லுருவியின் மருத்துவ குணங்கள்
புல்லுருவியானது மூலிகைகளில் வளரும். மூலிகைகளின் சத்துக்களை உறிஞ்சி வைத்துக் கொள்ளும், புல்லுருவி ஆண், பெண் என இருவகைப்படும்.
http://vethathiri.org/SpiritualDiscussion/index.php?topic=227.0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக