Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, டிசம்பர் 18, 2009

முனிவர்களும் அவர்கள் பெருமைகளும்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.



கபில முனிவர்

கபில முனிவர் கடவுளால் படைக்கப்பட்ட சித்த சக்திக் கொண்ட முனிவர். கபில முனிவர் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒரு அவதாரமென்றும், அது போல வெவ்வேறு சூழ்நிலையில் கபில முனிவர் அக்னியின் அவதாரமாகவும், சிவபெருமானின் அவதாரமாகவும் தோன்றியிருக்கிறார். பிரம்ம தேவனின் நிழலில் இருந்து உருவாகிய பிரஜாபதி கர்தாம் என்பவருக்கும் அவருடைய மனைவி தேவயுவதிக்கும் கபிலர் மகனாகப் பிறந்தார். மகன் பிறந்ததும் கர்தாம் தம்பதியர்கள் சித்தபுர் என்ற இடத்திலுள்ள ஆசிரமத்தில் தங்கினர். கபிலர் பிறந்ததும் பிரம்ம தேவன் கர்தாமுக்கு பகவானே ஜனனம் எடுத்ததாக சொன்னார். மேலும் கபில முனிவர் சமக்கிய சாஸ்திரத்தை உருவாக்குவார் என்று பிரம்ம தேவன் சொல்லிவிட்டு மறைந்தார். கபிலமுனிவர் வளர வளர அவருடைய தந்தை சன்னியாசம் பெற்றுக் கொண்டு காட்டிற்கு சென்றார். சில நாட்கள் கழித்து காட்டிலேயே கபிலரின் தந்தை உயிர் நீத்தார். அதன் பிறகு கபில முனிவர் தன்னுடைய அன்னையுடன் சரஸ்வதி நதிக்கரையோரத்தில் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு தங்கினார். ஒரு நாள் பிரம்ம தேவன் தோன்றி தேவயுவதியிடம், அவளுடைய மகன் கபில முனிவர் அவளிடம் அல்லது மக்களிடம் இருக்கும் அறியாமையை அழித்து தன்னிடமிருக்கும் ஞானத்தை எடுத்துரைப்பார் என்று சொல்லிவிட்டு மறைந்தார். பிரம்ம தேவன் கூறியபடியே கபில முனிவர் தியானம் செய்தார். தன்னுடைய ஞானத்தின் மூலம் மக்களுடைய அறியாமையை அகற்றினார். இயற்கை, ஆத்மா இரண்டும் ஒரு சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தினார். தன்னுடைய ஞானத்தால் சமக்கிய சாஸ்திரத்தை படைத்தார். கபில முனிவர் தாயினுடைய அனுமதியோடு கடுந்தவம் செய்ய கங்கையை தாண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். முனிவர் கபில சூத்ரம் ஏன்ற நூலையும் இயற்றினார்.

பகவான் பாதாஞ்சலி

பகவான் பாதாஞ்சலி யோகத்தைப் பற்றி பூலோகத்திற்கு அறிய வைத்தார். பாதாஞ்சலி த்வாபர யுகத்தில் அங்கிரா, கோனிகா தம்பதியருக்கு மகனாக இருவட்டு என்ற இடத்தில் பிறந்தார். கோனிகா தினமும் குழந்தை வரத்திற்காக செப்புச் சொம்பிலிருந்து இரண்டு கைகளிலும் தண்ணீர் விட்டு சூரிய நமஸ்காரம் செய்து வந்தாள். ஒரு நாள் சூரிய பகவான் அவளுடைய கைகளில் குழந்தையை கொடுத்தார். சூரிய பகவானால் பெற்ற அந்தக் குழந்தைக்கு கோனிகா பாதாஞ்சலி என்று பெயர் வைத்தாள். பாதாஞ்சலி குழந்தைப் பருவத்திலே அளவுக்கு அப்பாற்பட்ட அறிவுத் திறனை பெற்றிருந்தார். சிறுவனாக இருந்த போது கடுமையான தவம் செய்தார். அவருடைய தவவலிமையைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், பிரம்மாண்டத்திற்கு மொழிகளின் இலக்கணத்தை அறிய வைக்கும் வரத்தை அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பகவான் பாதாஞ்சலி கோனார்த் என்ற இடத்தில் தஞ்சமடைந்தார். பகவான் பாதாஞ்சலியைப் பற்றி மற்றொரு வரலாறும் சொல்லப்படுகிறது. ஆசார்ய பனினி இருகைகளாலும் தண்ணீர் விட்டு சூரிய பகவானை வேண்டிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அவருடைய கைகளில் பாம்புக் குட்டியைப் போட்டார். அந்தப் பாம்புக்குட்டி குழந்தையாக பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பனினி, பாதாஞ்சலி என்று பெயர் கொடுத்து நல்ல அறிவையும், திறமையையும் கற்றுக் கொடுத்தார். பாதாஞ்சலி சுமேரு மலையிலுள்ள குகையில் லோலுபாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். லோலுபா நல்ல அறிவாளி, இசை ஞானம் தெரிந்தவள். பகவான் பாதாஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை எழுதினார்.

நாட்டியாசாரியார் பரத முனிவர்.

த்ரேதாயுகத்தில் மக்கள் இயற்கை சீற்றத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்திர பகவான் பிரம்ம தேவனிடம் மக்களுடைய சந்தோஷத்திற்காக நாட்டிய சாஸ்திரத்திரத்தை படைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிரம்ம தேவன் ரிக்வேதத்தின் பாடலையும், சாம வேதத்தின் ராகத்தையும், யஜூர்வேதத்தின் நடிப்புத் திறனையும், அதர்வவேதத்தின் ரசத்தையும் ஒன்றாகப் பிணைத்து நாட்டிய சாஸ்திரத்தை இயக்கினார். பிரம்ம தேவன் பரத முனிவருக்கு அந்த நாட்டிய சாஸ்திரத்தைக் கொடுத்தார். பரத முனிவர் அந்த சமயத்தில் வெகு சிறப்பாக நாட்டிய சாஸ்திரத்தை மக்களிடம் பரப்பினார். பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் காளிதாஸரின் காவியங்களை படைத்தன. பரத முனிவரால் படைக்கப்பட்ட நாட்டிய சாஸ்திரம், இயல், இசை, நாடகம், நடிப்பு ஆகிய பாவங்களை மக்களுக்கு எளிமையாகத் தெரிய வைத்தது.

கருத்துகள் இல்லை: