Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

ஞாயிறு, நவம்பர் 08, 2009



மரபணு பயங்கரம்


இன்னும் கொஞ்ச நாட்களில் நீங்கள் சாம்பார் வைப்பதற்காககாய்கறியை எடுப்பதற்கு பிரிட்ஜை திறந்தால் அங்கேயிருக்கும்தக்காளி உங்களைப் பார்த்துவிட்டு தாவிக் குதித்துஓடஆரம்பிக்கும். கத்தரிக்காய் ஜம்ப் பண்ணி ஓடிப்போய்டைனிங்டேபிள் அடியிலே ஒளிந்து கொள்ளும். முருங்கைக்காயைப் பிடித்து இழுத்தால் அது வராமல் முரண்டு பிடிக்கும்.இதெல்லாம் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும்கூடியவிரைவில் இதுபோல நடந்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்தமரபணு மாற்றம் தான். மரபணு (DNA) குறித்து நமக்குஓரளவிற்குத் தெரிந்திருக்கும். ஆனால் அது என்ன மரபணுமாற்றம். ரொம்ப சிம்பிள். இப்ப ஒரு தவளையைப் பிடித்துஅதன் ஜீனை எடுத்து தக்காளியின் ஜீனில் செலுத்தி விட்டால்அது தான் மரபணு மாற்றம்.

அப்படி அந்த தவளையின் ஜீன் மூலம் உற்பத்தியாகும்தக்காளியை கீழேவிட்டால் அது குதித்து குதித்துஓடஆரம்பிக்கும். இது கற்பனையல்ல. நிஜம்.தாவரவியலில்மெண்டல் சோதனை என ஒன்று இருக்கிறது. அதாவது அந்தசோதனையை செய்தவரின் பெயர் மெண்டல், அவர் மெண்டலாஎன்று நமக்குத் தெரியாது.அந்த ஆள் தான் முதலில் இந்தமரபணு சோதனையைச் செய்து வெற்றியடைந்தார். அதாவதுபட்டாணிச் செடியில் குட்டை,நெட்டை ஆகிய ரகங்களைவைத்து அதன் மரபணுக்களை விதவிதமாகக் கலந்து பல புதிய‌வெளியீடுகளை உருவாக்கினார். அதன் பின்னர் இந்த மரபணுசோதனை பல உயிரினங்களில் பரிசோதிக்கப் பட்டது. குறிப்பாகபசுமாட்டில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு பலபுதிய புதிய கலப்பிணங்கள் உருவாக்கப் பட்டன.

ஜெர்சி,சிந்து (நடிகை சிந்து அல்ல) என பல விதமான இனங்கள்உருவாக்கப்பட்டது. சாதாரணமாக நம்ம நாட்டு மாடு,பொழுதுக்கும் புல்லைத் தின்றுவிட்டு மிஞ்சி மிஞ்சிப்போனால் 4லிட்டர் வரை தான் பால் கொடுக்கும். அதை நம் குடியானவர் 8லிட்டராக்குவது வேறு கதை. அதற்குப் பிறகு மரபணுமாற்றத்தோடு வந்த இந்த புதியமாடல் டெக்னாலஜி பசுக்கள்ஆவினுக்கு பால் ஊற்றும் டேங்கர் லாரியைப் போலமாறிவிட்டன‌.எத்தனை லிட்டருங்க? என்று கேட்டால் சும்மா 40லிட்டர் தான் என சாதாரணமாகச் சொல்கிறார் விவசாயி.இத்தனைக்கும் இந்த மாடுகள் நாட்டு மாடுகளை விடகுறைவாகத்தான் சாப்பிடுகின்றன. இது தான் மரபணுமாற்றத்தின் விளைவு. அதன் பலன் ஆரம்பத்தில் மிகநன்றாகத்தான் இருக்கும். பலன் மற்றதை விட அதிகமாகத்தான்இருக்கும். ஆனால் அதன் விளைவுகள் நமக்கு கடைசிவரைதெரியவே தெரியாது. அன்றைக்கு இருந்த நோய்களை விட பலமடங்கு இன்றைக்கு நோய்கள் அதிகமாகிவிட்டன. அதற்குஇதுவும் ஒரு காரணம். உணவே மருந்து என்ற நிலை மாறிஇன்றைக்கு மருந்தே உணவு என ஆகிவிட்டது.

இது போன்ற ஒரு மரபணு மாற்றம் செய்யப் பட்டபருத்திவிதையை அமெரிக்கா கண்டிபிடித்து அதைச்சோதனைசெய்வதற்காக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.விளம்பரம்செய்தால் போதும் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தைக் கூடசுத்தமான இளநீர் என குடிப்பார்கள் என்ற 23ம்புலிகேசியின்வாக்குப்படி என்ன கருமத்தையோ சொல்லி அந்தப் பருத்திவிதைகளை இந்திய விவசாயிகளிடம் தள்ளிவிட்டனர் அமெரிக்கராசாக்கள்.. அவர்களும் அதை விதைத்து விட்டு பஞ்சிவெடிக்கும் .., பஞ்சி வெடிக்கும் என இலவு காத்த கிளியாககாத்திருந்த விவசாயிகளுக்கு கடைசியில் வெடித்தது பஞ்சிஅல்ல.., அவர்களின் நெஞ்சிதான். மஹாராஷ்டிரா,ஆந்திரா எனவிவசாயிகள் கொத்துக்கொத்தாய் தற்கொலை செய்துகொண்டார்கள். அந்த நிலங்கள் வேறு பயிர் செய்வதற்கு ஏற்றாகஇல்லாமல் விசமாக மாறியது.

அத்தோடு கொஞ்ச நாள் அடங்கிப்போயிருந்த அமெரிக்காவின்கொட்டம் இப்போது மீண்டும் அடுத்த சோதனைக்குத்தயாராகிவிட்டது. எத்தனை முறை ஏமாற்றினாலும் மறுபடியும்நம்புவார்கள் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை இந்தியாவிடம்வீண் போகவில்லை. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்டகத்தரிக்காய்களை சோதிக்க முடிவெடுத்து களம் இறங்கிவிட்டது.மாண் சாண்டோ என்ற அமெரிக்க மாமாவின் டுபாகூர் கம்பெனிதயாரிப்பில் பி.டி (B.T) என பெயரிடப்பட்ட கத்தரி விதைகளைஇந்தியாவிலே பரப்ப அனுமதி கொடுத்துவிட்டார் திருவாளர்ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே முல்லைப்பெரியாருபிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து ஆப்பு வைக்கும் இந்தஅதிபுத்திசாலி,இப்போது இந்தியாவிற்கே ஆப்பு வைக்கத்தயாராகிவிட்டார்.

இந்த கத்தரி விதைகளைப் பயிரிட்டால் அதைப் பூச்சிபிடிக்காதாம். காரணம் அந்த விதையில் செலுத்தப் பட்டுள்ளபாக்டீரியாக்கள் அதைத் தடுத்துவிடுமாம். அப்பறம் அந்த கத்தரிவிதை பயிரிட்ட நிலத்தில் வேறு எதுவும் பயிரிட முடியாதாம்.கத்தரி மட்டும் தான் பயிரிட முடியுமாம். அதுவும் அந்தநிறுவனத்தின் பி.டி விதைகள் மட்டும் தானாம். நாட்கள் செல்லச்செல்ல அந்தச் செடிகளைப் பூச்சிப் பிடிக்க ஆரம்பிக்குமாம்.

ஆனால் அதற்கான மருந்தையும்அவர்களேதந்துவிடுவார்களாம்.பின்னர் அவர்கள் வைத்தது தான்விலையாம். நாட்கள்போகப்போக தொலைக்காட்சியின் இரவுச்செய்திகளில் தங்கம் வெள்ளி விலை நிலவரங்கள்வரும் போதுஇன்றைய கத்தரிக்காய் விலை நிலவரம் என்ற புதிய பகுதியும்வரவாய்ப்பிருக்கிறாம். ஆக இதுதான் நவீன விக்கிரமாதித்தனின்நவீன காலனி ஆதிக்கம்.
வெறும் 3 மாதங்கள் மட்டுமே பரிசோதிக்கப் பட்ட இந்தக்கத்தரிக்காய்களை சாப்பிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக அதன்விளைவுகள் நம் மரபணுவையும் மாற்றி புற்றுநோய்,காசநோய், ஈரல் பாதிப்புகள்,கிட்னிகளை செயலிழக்கச் செய்தல்போன்ற பலவிதமான வியாதிகளை கொஞ்சம் கொஞ்சமாகஏற்படுத்தும் என நம்மூர் இயற்கை விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் இந்த கத்தரிக்காய்களைஅறவே தடைவிதித்து விட்டனர்.ஆனால் நமது இந்தியத்திருநாட்டில் இதற்கு சிவப்புக் கம்பளம் விரித்துவரவேற்கின்றனர்.

நேற்று முன்தினம் உழவர் பேரியக்கம் சார்பில் மருத்துவர்ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்இந்தக் கத்தரிக்காய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவாகவிளக்கப்பட்டன. கேரளாவில் இந்தக் கத்தரிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் இதற்குத் தடைவிதிக்க வேண்டுமென தமிழக முதல்வர் தலைவர் கலைஞர்அவர்களுக்கு இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாள்வார்அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்படியே மரபணு மாற்றம், விஞ்ஞான ஏற்றம் எனவிதைகளின் வீரியம் அதிகமாக அதனால் பூச்சிகளின் வீரியம்அதிகமாக அதனால் மருந்துகளின் வீரியமும் அதிகமாகி இதேபோன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தால், நாம்கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் சாதாரண ஸ்பிரே கூட, போகிறபோக்கில் ஸ்பைடர் மேனையே போட்டுத்தள்ளிவிடும் என்பதுநிதர்சனமான உண்மை.
http://etiroli.blogspot.com

கருத்துகள் இல்லை: