Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 23, 2009

முட்டையை விட மட்டமான சீனப் பணம்?



இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில், 1949 ஆம் ஆண்டில் சீனாவை மக்கள குடியரசாக அறிவித்தார் அப்போதைய அதிபர் மாவோ. அப்போது சீனப் பணத்திற்கு பெரிய மதிப்பு இல்லாமல் போய்விட்டது. முட்டை ஒன்றின் விலை 10 ஆயிரம் சீனப் பணமாக இருந்தது என்றால் சீனப் பணத்தின் வீழ்ச்சி புரியும்.

இந்த நிலையை, தன்னுடைய நினைவில் இருந்து அகற்றாமல் வைத்திருந்தார் தென் சீனத்தைச் சேர்ந்த ஓவியர் குவாங்சுவோ. முட்டைகளைக் கொண்டே சீனப் பணம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.

1980இல் புழக்கத்தில் இருந்த 50 யுவான் சீனப்பணம் போல, முட்டைகளை அடுக்கி உருவாக்கிய, அவருடைய இந்த கலைப் படைப்பு குவாங்டாங்க் கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரு சீனப்பணத்தை உருவாக்க அவர் 1000 முட்டைகளை பயன்படுத்தியிருக்கிறார்.

1000 முட்டையும் அழுகிவிட்டால் நாற்றம் தாங்காதே என்று நீங்கள் முழிப்பது புரிகிறது. இவை உண்மையில் முட்டைகள் அல்ல. கற்களைக் கொண்டே இந்த ஆயிரம் முட்டைகளையும் உருவாக்கி யிருக்கிறார் குவாங்சுவோ..

அன்றைய சீன நிலையை இந்த (கல்) முட்டையிலான ரூபாய் நோட்டு சுட்டிக்காட்டினாலும், ஆயிரம் முட்டைகளைப் பயன்படுத்தி ஒரே ஒரு ரூபாய் நோட்டை உருவாக்கியதன் மூலம், தற்போதைய சீனப் பணத்தின் பெரும் மதிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் கில்லாடி கலைஞர் குவாங்சுவோ

கருத்துகள் இல்லை: