* இரவு உறங்கும் முன்பு மஞ்சள் அல்லது சந்தனத்தை முகத்தில் தேய்த்துவிட்டு படுக்கவும். காலையில் முகத்தை கழுவிவிட்டு கண்ணாடி முன்நின்று பாருங்கள். உங்கள் வசீகர முக அழகைப் பார்த்து நீங்களே பொறாமை கொள்வீர்கள்.
* ஆரஞ்சு சாறு, முள்ளங்கிச்சாறு, உளுந்துமாவு - இந்த மூன்றையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் எடுத்து தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசவும். தொடர்ந்து 2 வாரங்கள் இப்படி செய்து வந்தாலே போதும். முகம் பளபளக்க ஆரம்பித்து விடும்.
* சிலருக்கு கண்ணுக்கு கீழ் உள்ள கரு வளையம் பாடாய் படுத்தும். அழகான கண்களுக்கு அது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
* கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்.
* உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பளபளப்பு பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக