Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வெள்ளி, நவம்பர் 13, 2009

விருந்தோம்பல்

வீடு தேடிவரும் விருந்தாளிகளை உபசரித்து பாதுகாப்பவனுடைய இல்வாழ்க்கை வறுமையில்லாது நிறைந்த செல்வத்துடன் இருக்கம் என்கிறது வேத புராணங்கள். இன்றைய இளைஞர்களுக்கு உறவு முறைகள் கூட தெரிவதில்லை. யார் சித்தப்பபா? யார் அத்தை? என்ற உறவு முறைகளைக் கூட சொல்லிக் கொடுத்துப் புரியவைக்க வேண்டிய நிலைதான் உள்ளது.

நாம் செல்லும் கல்யாணம், உபநயனம் போன்ற வைபவங்களுக்கு, சொந்தக்காரர்களின் விசேஷங்களுக்கு அவசியம் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போனால்தான் உறவு முறையும் தெரியும், உலகுடன் ஒட்டி வாழவும் முடியும். சொந்தக்காரர்கள் விருந்தாளிகளாக வீட்டுக்கு வரும்போது குழந்தைகள் தனிமையப்பட்டு நிற்காத நிலை ஏற்படும்!

பிரம்ம வேள்வி, வேதம் ஓதுதல், பிதுர் வேள்வி, நீத்தார் கடன் செய்தல், தேவ வேள்வி, தேவதைகளுக்கான யாகங்கள், பூத வேள்வி, காக்கை, குருவி, மிருகங்களுக்கு சோறு இடுதல், மானுட வேள்வி, விருந்தோம்பல் இந்த பஞ்சமகா வேள்விகளில் தலையானது விருந்தோம்பல் என்கிறது வேத மந்திரங்கள்.

விருந்தாளிகளை ஏழை, பணக்காரர் என்ற வித்யாசமில்லாமல் வரவேற்க வேண்டும். பாகுபாடு கூடாது. அவல் கொண்டுவந்த குசேலனைக் கிருஷ்ணபரமாத்மா வரவேற்றார். குசலேன் வீடு செல்வம் கொழித்தது. குசேலன் கொடுத்த அவலைக் கிருஷ்ணன் உண்டான் என்றெல்லாம் கதைகளில் படித்திருக்கிறோமல்லவா? அதிதிதேவோபாவ என்று சம்ஸ்கிருத மந்திரமும் விருந்தோம்பலை ஸ்லாகிக்கிறது. விருந்தோம்பலின் பெருமையை பறைசாற்றும் கீழ்கண்ட குறளையும் நாம் மனத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு - குறள் 81.

கருத்துகள் இல்லை: