செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிட்டு வருகின்ற நாசா நிறுவனத்தின் ஃபீனிக்ஸ் விண்கலம், அங்கு பனிப் படிகங்கள் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று தாம் நம்புவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த வார முற்பகுதியில் செவ்வாயின் துருவப் பகுதியில், தனது இயந்திரக் கரத்தினால், சிறிய அளவிலான அகழ்வு ஒன்றை மேற்கொண்ட ஃபீனிக்ஸ் விண்கலம், அதிலிருந்து பல பிரகாசமான துகள்களை வெளியே எடுத்தது.
அவை உப்பாக இருக்கலாம் என்று முன்னர் நம்பப்பட்டது, ஆனால், வியாழனளவில் அவை மறைந்துவிட்டன.
உப்பு ஆவியாகாது என்றும், தாம் கண்டுபிடித்தது பனிக்கட்டிதான் என்பதற்கு இது ஒரு ஏற்புடைய ஆதாரம் என்றும், இந்த ஃபீனிக்ஸ் விண்கலத் திட்டத்தின் தலைமை விஞ்ஞானியான அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்மித் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக