Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 23, 2009

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்




உடல் நலக் குறிப்புகள்

கொழுப்பு கொலஸ்டிரால், வித விதமான எண்ணெய்ப் பொறியல் முதலியவற்றை அதிகம் சேர்த்தால் சிறுநீரகத்தில் கற்கள் எளிதில் சேரும். மேலும் தினமும் பத்து டம்ளர் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும். அமெரிக்க மருத்துவரான சூசன் லார்க் அல்லோபதி மருத்துவம் பார்ப்பவர். இவரோ இந்திய மூலிகை மருந்துகளையே சிறுநீரகக் கற்களுக்குச் சக்தி வாய்ந்த மருந்துகள் எனக் கண்டுபிடித்துள்ளார். இவற்றுள் மஞ்சள், டான்டெலின் (மலர்ச்செடி), ஆர்ட்டி சோக் (முள்ளினச்செடி) என இவை மூன்றும் முக்கியம் என்கிறார். இவை கூட்டு மாத்திரைகளாக விற்கப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘ஈ’ அகிய மாத்திரைகளை அதிக டோஸ் கொடுத்துக் குணப்படுத்துகிறார். உங்கள் உணவில் 50% ஆவது பழங்களும் காய்கறிகளும் இடம் பெற்றால் சிறுநீரகக் கற்கள் உருவாகாது என்கிறார் இவர்.
சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கு வழிகள்?



கண்ணாடி அணிவதைத் தடுக்க முடியும்!


முந்நூறு கிராம் நாட்டு நெல்லிக்காய்ப்பொடி, நூறு கிராம் சுக்குப் பொடி (இஞ்சி), இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இரண்டு பொடிகளையும் மூலிகை மருந்துக் கடைகளில் பெறலாம். தினமும் காலையும் மாலையும் ஒரு தேக்கரண்டி இந்தப் பொடியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் அருந்தி வரவும். இல்லையெனில் இரண்டு தேக்கரண்டி அளவு பொடி எடுத்து நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேன் சேர்த்தோ சேர்க்காமலோ அருந்தலாம். இது ஓர் உடல்நலம் காக்கும் அரிய பானம். குறிப்பாக, கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இந்த ஆரோக்கியப் பானத்தை அருந்தி வருவது நல்லது.
இத்துடன் தினமும் கேரட்டுகள் இரண்டு முறை, பாசிப்பருப்புப் பாயசம் ஒரு முறையும் அருந்தி வரவேண்டும். பச்சைப்பட்டாணியோ அல்லது கொண்டைக் கடலையோ தினமும் உணவில் சேரவேண்டும். ஆரோக்கிய பானம், கேரட் சாறு, பருப்பு கொண்டைக்கடலை மூலம் செரிமான சக்தி உடலில் மிகச் சரியாக நடைபெறுகின்றது. அப்போது இந்த உணவுகளின் மூலம் அதிகம் சேரும் வைட்டமின் ‘சி’யும், வைட்டமின் ‘ஏ’யும் உடலில் நன்கு கிரகிக்கப்படுவதால் மைனஸ் 3 முதல் 4 வரை லென்ஸ் அணிந்துள்ள கண்ணாடிக் காரர்கள் சில மாதங்களிலேயே கண்ணாடி இன்றி எளிதில் படிக்கலாம். கண்களில் அக்கு பிரஷர் சிகிச்சை செய்யும் முறையைக் கற்றுக்கொண்டால் எளிதில் படிக்கலாம். பார்வைத்திறன் மேலும் நன்கு அதிகரிக்கும்.




தங்கப்பானம் அருந்துங்கள்!


தங்கத்தாது உடலுக்கு நல்லது. 15 முதல் 30 கிராம் எடையுள்ள வளையல்கள், சங்கிலிகள் அழுக்கு, எண்ணெய்ப்பசை இல்லாமல் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். தங்கத்தின் எடை குறைந்தது 15 கிராம் இருக்க வேண்டும். இந்தத் தங்கத்தை நான்கு டம்ளர் தண்ணிரில் கொதிக்க வையுங்கள். மூன்று டம்ளராக குறைந்ததும் எடுத்து தர்மாஸ் ஃப்ளாஸ்க்கில் உற்றி வைத்துக்கொள்ளுங்கள். காலையில் இந்தத் தங்கப்பானத்தை ஒரு டம்ளர் அருந்துங்கள். மூச்சுக்குழல், நுரையீரல்கள், இதயம், மூளை முதலியவற்றிற்குச் சிறந்த டானிக் இது. இரத்தக் கொதிப்பு மூட்டுவலி, புற்றுநோய், இதய அடைப்பு முதலியவற்றை விரைந்து குணமாக்கும். தங்கத்தாது சேர்ந்த இந்தத் தண்ணீர் ஆறினாலும் 1/2 டம்ளர் வீதம் ஆறுநாட்கள் வரையில் இந்தத் தண்ணீரை அருந்தலாம். பிறகு மறுபடியும் தயாரித்துக் கொள்ளலாம்.
மன அழுத்தம், தோல்நோய், போலியோ, மூட்டுவலி, முதலியவற்றிற்கு 60 கிராம் செம்புத்தகடை நன்கு சுத்தம் செய்து இதே போல் 4 டம்ளர் தண்ணிரில் கொதிக்க வைத்து மூன்று டம்ளராக வற்றியவுடன் எடுத்து வைத்து அருந்தி வரவேண்டும். நரம்பு மண்டலத்திற்கான சத்துநீர் இது.
இந்த முறைகளைக் கண்டுபிடித்த மும்பை டாக்டர் தேவேந்திர டோரா ஜீரண உறுப்புகளையும் சிறுநீரகத்தையும் பலப்படுத்த முப்பது கிராம் வெள்ளித்தகடு ஆபரணத்தை இதே முறையில் வெந்நீரில் கொதிக்க வைத்து அருந்தச் சொல்கிறார். இந்த மூன்று தாது உப்புக்கள் சேர்ந்த இந்தத் தண்ணீர் குறிப்பிட்ட உறுப்புகளுடன் தொடர்பு கொண்டு பலப்படுத்திவிடும். இதனால் நோய் குணமாகி உறுப்புகளும் பலமாகி விடும்.
ஒருவருக்கு ஒரு பானமே போதும். ஆரோக்கியமாக உள்ளவர்களும், பெரிய பொறுப்புகளில் உள்ளவர்களும், எழுத்தாளர்களுக்கும் தங்கத்தாதுவில் பலப்படுத்தப்பட்ட தங்க நீர் மிகவும் நல்லது.




மருத்துவம் :

ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும். ஆறியதும் கொஞ்சம் மிளகு தூள், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு முதலியன கலந்து அருந்தவும். தினமும் ஒரு வேளை அருந்தினால் போதும். ஆஸ்துமா கட்டுப்படும்.
ஆஸ்துமாவுக்கு ஒரு கப் சூப்!


கொலட்ஸ்ட்ராலுக்கு ஒரு கப்!

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கிறது என்றால் கொத்துமல்லிக் காபி அருந்தவும். இல்லையேல் கொத்துமல்லியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்தத் தண்ணீரை அருந்தவும். தினமும் ஒரு டம்ளர் போதும். இதனால் கொலஸ்ட்ராலும் குறையும். சிறுநீரகங்களும் சிறப்பாக வேலை செய்யும். குடிக்காரர்கள் இந்த முறையில் பயன்படுத்தினால் குடிபழக்கத்தின் மீதான நாட்டம் குறையும்.


மலட்டுத்தன்மையைக் குணமாக்கும் சூப்!

250 மில்லி பசும்பாலில் பதினைந்து கிராம் அளவு முருங்கைப் பூவைப்போட்டுக் காய்ச்சவும். முருங்கைப் பூவும் பாலும் கலந்த இந்த சூப்பைத் தினமும் ஒரு மாதம் கணவனும் மனைவியும் அருந்தி வந்தால் மலட்டுத்தன்மை இருவருக்கும் மறையும். இருவரும் மதியம் முருங்கைக்காய் சாப்பிட்டு வந்தாலும் இது தொடர்பான அனைத்து பலவீனங்களும் மறையும்.




கே.எஸ்.சுப்ரமணி

கருத்துகள் இல்லை: