'எனது பருமனான உடம்பை இளைக்கச் செய்வதற்காக, குறைவாகவே சாப்பிடுகிறேன்' என்று சொல்வதை நிறுத்திக்கொள்வது சாலச் சிறந்தது.
பருமனான உடலை இளைக்க வைப்பதற்கும், அன்றாடம் உண்ணும் உணவைக் குறைத்துக் கொள்வதற்கும் சம்மந்தமே இல்லை.
இதையே ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறது.
நியூகாஸ்டில் மருத்துவ ஆய்வுக் குழு ஒன்று, உடல் பருமனுக்கும், அன்றாட உணவைக் குறைப்பதற்கும் தொடர்பு உண்டா என்பதை உடல் பருமனான 179 பேரைக் கொண்டு ஆய்வு செய்தது.
இவர்களில் பாதிபேருக்கு கட்டுப்பாட்டு உணவாக, மூன்று வேளை மட்டுமே சாப்பாடு அளிக்கப்பட்டது. எஞ்சிய பாதி பேருக்கு மூன்று வேளை உணவுடன் வழக்கம் போல் நொறுக்குத் தீனிகளும் கொடுக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஆய்வின் முடிவில் சாப்பாடு குறைக்கப்பட்டவர்கள் எவ்வித மாற்றமுமின்றி பருமனாகவே இருப்பது தெரியவந்தது.
மேலும், பருமனான நபர் அன்றாடம் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பது முக்கியமல்ல; எந்த வகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறார் என்பதே முக்கியம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
எனவே, உடம்பை இளைப்பதற்காக சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளாமல், கொழுப்பு போன்றவை குறைவாகவுள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நன்மை பயக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக