Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், நவம்பர் 12, 2009

பஜ கோவிந்தம் (வாழ்க்கை தத்துவம்)

ஆதி சங்கர பகவத்பாதாள் தந்துள்ள வாழ்க்கை தத்துவம் என்ன என்பதை அவர்களுடைய "பஜகோவிந்தம்" என்ற திவ்ய காவியத்தை அடிப்படையாக கொண்டு விவரிக்கிறார் அசலபக்தன்

பஜ கோவிந்தம்
(வாழ்க்கை தத்துவம்)
அசலம்
:முகவுரை:

முன் இதழ்களில் வாழ்வின் லக்ஷியம், வாழ்வின் ரகசியம் என்பதை ஆராய்ந்தோம். ஆனால் வாழ்க்கை எப்படி வாழ்வேண்டும் என் திடடவட்டமாக பார்க்க் வேண்டும். அதர்க்கு வாழ்க்கை தத்துவம் அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை. ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்த்தான் அது நமக்கு ஏற்க்கக்கூடியதாக அமையும். அப்படி பார்க்கும்போது சிரு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வஞ்பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்ததை (HINDUISM) உலகிர்க்கு தந்து, நாலு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து ஸனாதன தர்மத்தை காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் ந்மக்கு தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாக பின்பற்றக்குடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிக தெளிவாகவும், ந்ளினமாகவும் இதில் தந்துள்ளார்.

ந்ம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை ஏவன, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்கணம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களை தெள்ள தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களை சரிவர கிரஹித்து அவைகளை அய்ராது சரிவர நாம் பின் பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிக சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்ற்லுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் அய்யபில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் ஏவை என பார்ப்போமா?

காவியம்:
1
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

ஸாரம்:
கோவிந்தனை பஜி, கோவிந்தனை பஜி, கோவிந்தனையே பஜி ஹே! தெளிவில்லாத புத்திஹீனனே.. உனது கடைசி காலம் (மரணம்) உன்னை நெருங்கும்போது, உனது இலக்கணம், வ்யாகரணம் (முதலிய ஞானம்) உன்னை காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிலையில் இருக்கும்( கோவிந்தனை என்னேரமும் பஜி.

விளக்கம்:
பஜ என்பத்ர்க்கு பஜிப்பது அல்லது, ஜெபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று பொருள். நித்திய சுத்த ஆனந்த நிலைக்கு பெயர் கோவிந்தம். எப்பொழுதும் அந்த நிலையில் இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் கோவிந்தன் எனப்படுவார். மனித ஜென்மம் வேண்டுவது என்ன? ஆனந்தம். அந்த நிலைக்கு உடமை யார்? ஸ்ரீ கிருஷ்னன். ஆகயால் எப்பொழுதும் அவனை நினை அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி சங்கரர் புத்திகெட்டு உழலும் மனித ஜாதிக்கு உபதேசம் சைய்கிறார். அவர் க்ஷேத்திராடன்ம் செல்லும்பொழுது ஒரு மஹா வித்வான் சாஸ்த்ர கிரந்தங்களை வைத்துக்கொண்டு அதன் இலக்கணத்தை(வியாகரணம்) வாய்ப்பாடம் சைய்வதை கண்டார். அதை சுட்டிக்காட்டி எழுதினது இந்த ஸ்லோகம். ஏனென்றால், நாம் எல்லோரும் நம் புஸ்த்தக ஞானத்தில் மிகவும் சமயம் கட்த்துகிறோம். தைவ சிந்தனயோ நம் சுய நிலை சிந்தனையோ இல்லாமல் எப்பொழுதும் உலக சம்பந்தப்பட்ட காரியங்களில் நம்து நேரத்தை சிலவிடுகிறோம். சிறிதளவாவது ஆத்ம சிந்தனை தேவை என கூறுவதாக அமைய்துள்ளது இந்த உபதேசம். நாம் மரணத்தை அணுகும்போது நாம் படித்த விஷயங்கள் (உலகஞானம்) நம்மை காப்பாற்றாது. ஆத்மஞானம் ஒன்றுதான் அதர்க்கு மருந்து என பொருள். அதை அறிய எந்த புஸ்தகமும் உதவாது. மஹாஞானிகள் அவர்கள் தபோ நிலையிலிருந்து தெரிந்துகொண்ட ஆத்ம ஞானத்தை நமக்கு பலகிரந்தகள் மூலமாக தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ கோவிந்தம்.
2
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
ஸாரம்:
ஹே மூடா! திரவ்யத்தில் உள்ள பேராசையை (பணத்தாசை) விடு. இந்த பேராசை ஒழிய மனதில் நல்ல் விசாரத்தை உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்மபலனை மிக சந்தோஷத்துடன் (மனத்ருப்தியுடன்) அனுபவி.

விளக்கம்:
மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்து கொண்டது.. தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா ஸௌகரியங்களையும் சேரும். நாம் பணத்தாசை பிடித்து அதன்மூலம் வரும் ஸுகத்தை நாடுவது நம் பலஹீனம். அதனால் நம் மனம் ச்ஞ்சலப்படும். ஸுகம் கிடைக்கவில்லயேல் துக்கமும், நினைத்த ஸுகம் கிடைத்தால் ஸந்தோஷமும் கொள்ளும் நம் மன்ம். இந்த த்னத்திலுள்ள (ஸுகங்களீலுள்ள) பேராசயை விடு என கூறுகிறார். ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ்முடியாதே. அதெப்படி பணத்தாசையை விடுவது எனவினவலாம். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை கருதாது கர்மம் பண்ணவேண்டும் என கர்ம யோகத்தில் பார்த்தோம். அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள் என பொருள் கொளள்ளவேண்டும்.
“கர்மன்யேவாSதிகாரஸ்தே மாபலேஷு கதாசன”
என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீதையில் சொன்னதுபோல் “கர்மம் செய்வது உன் கையில, ஆனால் அதன் பலன் என் வசம்” என கூறியிருக்கிறார். அதாவது, கர்மம் பண்ண ந்மக்கு அதிகாரம் உண்டு. என்ன கர்மம் பண்ணவேண்டும், எப்ப்டி பண்ணவேண்டும் என தீர்மானிப்பது நம் கையில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நம்க்கு கிடைப்பதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது? கர்மபலன் நாம் செய்யும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை. ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ அவர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள் என பொருள் கொள்ள வேண்டும்..ஆனாலதான் மனச்சாந்தி ஏற்ப்படும்.
3
நாரீ ஸ்தனபர நாபி தேசம்
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்தய வாரம் வாரம்
ஸாரம்:
ஸ்த்ரீகளுடைய மார்பக்கத்தயும் நாபிதேசத்தையும் பார்த்து அதி மோஹம் கொள்ளாதே. அதெல்லாம் வெறும் மாமிசத்தின் விகாரத்தால் தோன்றும் (அநித்திய) தோற்ற்ம மட்டுமே என்று மனதில் தினம் தினம் (எப்பொழுதும்) சிந்தனை கொள்..

விளக்கம்:
முதல் ஸ்லோகத்தில் “ஆசையை (மோஹம்)” விடு என கூறினார். இதில் “காமத்தை“ (பாசம்) விடு என உபதேசிக்கிறார். ஏன் ஸ்த்ரரீகளின் மாற்பிடத்தையும் நாபி தேசத்தையும் குறிப்பாக சொல்லவேண்டும்? இவைதான் நம் காம உணர்ச்சியை. தூண்டுகிறது. வாக்யார்த்தத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் கருத்தை மட்டும் பார்க்க வேண்டும். இது புருஷர்களுக்கு மட்டும் தந்த உபதேசமல்ல. ஸ்த்ரீகளை பொறுத்தமட்டில் புருஷர்களுடைய மயிர்கூபத்துடன் கூடின் மார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியவையும் கூட மாமிசத்தின் தோற்றமே தவிர சாச்வதமல்ல என பொருள் கொள்ளணும். ஆக, ஏதொரு வஸ்து நமக்கு காமத்தை ஊட்டுகிறதோ அவையெல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்தை கொள்ளவேண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்லோகங்களினால் ஆசா பாசத்தை துற என கூறுகிறார். அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மனோ நிலயில் நாம் இருக்க வேண்டும் என்பதை தெளிவாக அடுத்த ஸ்லோகத்தில் தந்துள்ளார்.
4
நளினீதள கத ஜலமதிதரளம்
தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம்
லோகம் சோகஹதம்ச ஸ்மஸ்தம்
ஸாரம்:
தாமரை இலயில் தத்தளிக்கும் ஜலபிந்து போல அமைந்த நமது உலக ஜீவிதம் ரொம்ப ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வ்யாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை உடையவைகளாகவும் அமைந்துள்ளது என ஆறிவாய். .

விளக்கம்:
ந்மது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பீடைகளை கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை ஒரு உபமையுடன் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர். தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கிநிற்க்கும் ஜெலபிந்துக்கள் எப்படி அந்த தாமஇலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் ஜீவிதமும். எந்த நேரமும் அந்த ஜெல பிந்துக்கள் தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் நம் ஜீவிதம் எந்த நேரத்திலும் தத்தளித்துக்கோண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என் பொருள். இதைவிட வேறு உகந்த உபமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உபமையை மைய்யாண்டிருக்கிறார்!
5
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோsபின ப்ருச்சதி கேஹே
ஸாரம்:
உன்னால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுமோ, அது நாள் வரை உன்னை சார்ந்தவர்கள் உன்னிடம் நெருங்கி பழகுவார்கள்.எப்பொழுது நரை விழுந்து தேஹம் நலிந்துபோகிறதோ அப்பொழுது யாரும்–உன் குடும்பத்தார் கூட-உன்னிடம் பேசமாட்டார்கள்

விளக்கம்:
நாம் கண்கூடாக பார்க்கும் ஓர் சத்தியநிலையை எவ்வள்வு ஸுலபமாக சித்ரீகரித்திருக்கிறார்! நம்மால் எவ்வள்வு நாள் ஸம்பாதித்து பண் உதவி பண்ண இயலுகிறதோ அதாவது மற்றவருக்கு எவ்வளவு காலம் ந்ம்மால் உபயோகமுண்டோ அது வரை நம்மை சார்ந்தவர்கள் ந்ம்மிடம் ஒட்டி உறவாடுவார்கள். உலக நியதிப்படி பார்த்தால், எல்லோரும் மற்றவ்ரிடம் உதவி எதிர்பார்த்து உறவு கொள்கிறார்கள். நமக்கு வயதாகி வந்து, நம் தேஹம் நரை கண்டு, க்ஷீணமாகி ந்ம்மால் மற்றவருக்கு உபயோகமில்லாமல ஆகிவிடும்பொழுது, நம் சொந்த குடும்பத்தினரும் கூட ந்ம்மிடம் ஒட்டி உற்வாட தயங்குவார்கள். பேசுவதர்க்கு கூட அருகில் வர மாடார்கள். இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாச்வதமல்ல என்ற தத்துவத்தை மிக எளிதாக சுட்டிகாட்டியிருக்கிறார்.
6
யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே
பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே
ஸாரம்:
(உன்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறதோ அதுவரை உனது குடும்பத்தினர் உன் நலனில் இச்சை காட்டுவார்கள். தேஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டாள், உனது மனைவிகூட உன் (உயிரற்ற) சடலத்தை கண்டு ந்டுங்குவாள்.

விளக்கம்:
பந்தம் பாசம் என்பது உடலில் உயிர் உள்ளதுவரை தான். உயிர் போய் தேஹம் சடலமாகிவிட்டால், அதர்க்கு பெயர் பிணம். பிணத்ததை பார்த்து யார்தான் பயப்படமாட்டார்கள். அப்பொழுது மனைவிகூட அந்த சடலத்தை அணுக பயப்படுவாள். ஏன் மனைவி என்று குறிப்பாக சொல்லணும்? ஏற்றவும் பாஸ்த்துடன் கூடின உறவு கணவ்ன் மனைவி தானே. ஸ்த்ரீகளை கருதும்போது, இங்கு பனைவி என்பதை கணவன் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் இது இரண்டு தரப்பினருக்கும் பாதகமான தத்துவம். இது எவ்வளவு கண்கூடான சத்தியம்! வாழும்போது, இந்த உடலை நாம் போற்றீ கோண்டாடுகிறோம். அதர்க்கு எல்லா ஸௌகரியங்களையும் சைய்துகொடுத்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த உடல் நிரந்தரம் அல்ல, அழியக்கூடியது என்ற உண்மை ந்மக்கு தெரிவதில்லை. மரணத்திர்க்கு பிறகு உடல் தீண்டப்பட மாட்டாது என்ற உண்மையை விளக்குகிறார்.
7
பாலஸ்தாவத் க்ரீடாsஸக்த:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த:
பரமே ப்ருஹ்மணி கோsபினஸக்த:
ஸாரம்:
பால்ய வயது விளையாட்டில் செலவாகிறது, இளைய பிராயம் ஸ்த்ரீ ஸல்லபத்தில் மூழ்கிவிடுகிறது,, முதிர்ச்சிகாலம் விசாரத்தில் (சிந்தனையில்) நலிகிறது, (மனிதன்) ஒருபொழுதும் பிரஹ்ம்மத்தை நாடுவதில்லை

விளக்கம்:
வாழ்க்கை எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிக தெளிவாக சித்ரீகரித்திருக்கிறார். குழந்தை பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனதை இழக்கிறோம். அப்பொழுது சிந்தித்து வேலை செய்ய இயலாது. குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகிவிடுகிறது. பௌரனானால் ஸ்த்ரீசுகத்தில் காலம் ஓட்டுகிறோம். ஸ்த்ரீ ஸுகம் என்பது பெண்களுடன் உறவாடுவது மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா வித ஸுகங்களையும் அது குறிக்கிறது; இப்படி உலக்த்திலுள்ள ஸகல சுகங்களையும் அனுபவிக்க மனம் துடிக்கிறது. அப்பொழுதும் நம் சத்திய நிலையை அறிய ஆவல் கொள்வதில்லை. முதிர்ச்சியடைந்தால் நாம் தனித்துவிடப்பட்டு சிந்தனையில், விசாரத்தில், கவலையில ஆழ்ந்துவிடுகிறோம். நம் குடும்பம், குழந்தைகள், பேரன், பேட்த்தி முதலியவர்கள் நலனுக்காக கவலைப்படுதல், ந்ம்மை யாரும் கவனிக்கவில்லையே என்ற கவலை, நம்மை மரணம் அண்டுமே என்ற கவலை இத்யாதி ஸதா ஸர்வநேரமும் கவலைப்படுவதிலேயே நம் சமயத்தை கழிக்கிறோம். அப்பொழுதும் பிரஹ்ம்மத்தை (நம் சத்திய நிலையை) ஆராய்வதில்லை. ஆத்மஞானம் பெற பாடுபடுவதில்லை. இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாக கழித்துவிடுகிறோம். பகவத் சிந்தனை (ஆதம விசாரம்) நம்மை நாடுவதில்லை. பிறகு எப்படி ஆத்ம சாந்தி பெறுவது? எப்படி ஜீவன்முக்தன் நிலையை ஏய்வது.
8
காதே காந்தா கஸ்தே புத்ர:
ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத:
த்த்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:
ஸாரம்:
உன்னுடய ப்ரியதமன் அல்லது ப்ரியதமை யார்? யார் உன்னுடய புத்திரன்? இந்த ஸம்ஸார ஸாகர்ம் (குடும்பஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது. நீ யாருடையவன்? நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இப்படி (வழ்க்கை) தத்துவத்தை பற்றி சிந்தனை செய் சகோதரா!

விளக்கம்:
இந்த ஸ்லோகம் மூலம் நம்மை ஆத்ம சிந்தனையில் ஈடுபட சொல்கிறார். யார் மனைவி அல்லது பர்த்தா? யார் புத்திரன்? நான் யாருடையவன்? நான் யார், நான் எங்கிருந்து வந்தேன், இந்த ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளதே என்ற தத்வார்த்தமாக சிந்தனை செய் என பொருள். ஸ்ரீ ரமண மஹர்ஷியின் “நான் யார்” என்ற நூலில் இதைத்தான் அவர் கூறுகிறார். முதலில் ந்ம்மை அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல் உலக ஞானம் பூர்த்தியாகாது. உலகத்தை அறிவதர்க்கு முன் யார் அறிகிறார்கள் என பார்க்க வேண்டும். (Know the Knower). அதாவது பார்ப்பவனை (Subject) அறியுமுன் பாற்ப்பதை (Object) அறிய இயலாது. அந்த ஞான்ம் பூர்த்தியாகாது.. ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்மை மூழ்க சொல்கிறார்.
9
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம்
நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

ஸாரம்:
ஸத்துக்களுடைய (புண்ணியாதமாக்கள்) கூட்டுறவு கிடைத்தால் பந்தபாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாச விடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும். மோஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே ஜீவன்முக்தி நிலை.

விளக்கம்:
ஆத்ம விசாரம் செய்ய ந்மக்கு வ்ழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய சங்கம். அதாவது ந்ல் வழியில் செல்லும் ஞானிகளின கூட்டுறவு. அப்படி அவர்களிடம் உறவு கொண்டால் அவர்கள் நம்க்கு வழிகாட்டுவார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். எப்படி? மேலே சொன்ன ஆத்ம விசார பாதயில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள். அப்படி ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Deluision) அக்லும். அதாவது மாயை அகலும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயை அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து (SELF) ந்மக்கு புலப்படும். அப்படி புலப்பட்டால் அதுவே ந்மக்கு மன அமைய்தியை தந்து இந்த உடலில் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையை தரும். இதைத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி “Self Realization” என கூறியிருக்கிறார். திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர் “ஸ்வானுபூதி” என குறிப்பிட்டுள்ளாற். இதைத்தான் ஆட்ம ஸாக்ஷாத்க்காரம் என்று கூறுகிறார்கள். அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது. இதுதான் நம் வாழ்க்கை லக்ஷியம்.
10
வயஸி கதே க:காமவிகார:
சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார:
ஞாதே தத்வே க:ஸம்ஸார:
ஸாரம்:
முதிர்ச்சி அடையும்போது (அதாவது சிறுவயது போய் வயதாகும்போது) என்ன காம விசாரம்? ஜலம் வற்றின் பிறகு எங்கே தடாகம் (ஏரி)? தனமில்லதாகும் பொழுது எங்கே சுற்றத்தார்கள்? (ஆத்ம) ஞானம் கிடைத்தபிறகு ஏது ஸம்ஸாரம்?

விளக்கம்:
உலக பந்தம் பலனில் அடங்கியது. ந்மக்கு பலன் இல்லையேல் நாம் யாருடனும் குட்டுறவு வைத்துக்கொள்ள மாட்டோம். சிறுவயது போய் நாம் முதிர்ச்சி அடையும்போது நம்க்கு காம விசாரங்கள் அடங்கிவிடுகிறது. முதியோர்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது ஸல்லாபம் இருப்பதில்லை. ஒரு தடாகத்தில் (ஏரி) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதர்க்கு தடாகம் என்ற பேர் போய்விடுகிறது. அதேபோல் ந்ம்மிடம் தனமில்லையேல் ந்ம உறவினர்கள் ந்ம்மை நாடி வரமாட்டார்கள். அதாவது நம் பொருளாதார நிலை போய் விட்டாள் சுற்றத்தார் விலகிவிடுவார்கள். ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்கை ந்மக்கு கிடையாது முன் சொன்ன ஸ்லோகத்தில் ஆத்ம ஞானம் பெற வழியை காண்பித்தார். எதர்க்காக ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்று இந்த ஸ்லோகத்திலும் அடுத்து வரும் ஸ்லோகங்களிலும் விவரிக்கிறார்.
11
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ஸாரம்:
தனத்திலோ (ஸுகம்), குழந்தை பருவத்திலோ, யௌவ்வன் பருவத்திலோ அபிமானம் கொள்ளாதே, ஏனென்றால் காலம் இப்பருவங்களை எல்லாம் அகற்றிவிடுகிறது. மாயையால் உண்டான இந்த உலகவாழ்வை விட்டு (என்றேன்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்தை அறிந்து அதில் மூழ்குவாயாம.

விளக்கம்:
உலகஸுகம் தனத்தால் கிடைப்பது. தனம் சாச்வதமல்ல. அதேபோள் குழந்தை/யௌவன பருவவங்கள் சாச்வதமல்ல. ஏனெனில் அவை காலப்போக்கில் மாறக்குடியவை, அழியக் கூடியவை.. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன. அவை இரண்டும் அனித்தியம். பால்யம், கௌமாரம், யௌவ்வனனம், வார்த்தக்யம் என நாலு நிலைகள் நம் ஜீவித்தத்தில் வருகிறது. ஆகயால், இந்த ஒரு நிலையும் சாச்வதமல்ல். என தெளிவாகிறது. ஆதலால் இதன்மேல் அபிமானம் அல்லது நாட்டம் கொள்வது மூடத்தனம். அதேபோல் இந்த உலகத்திலுள்ள எல்லா வஸ்த்துக்களும் மாறக்குடியவை, கிரமேண அழியக்குடியவை. ஏது சாச்வதமல்லவோ அது மாயாஸவரூபம் என அறிந்துகொள்ள வேண்டும். இந்த மாயா வடிவான உலகை துறந்து (விட்டு) நித்திய வஸ்துவான ப்ரஹம்த்தை உண்ர்ந்து அதாகவை பரிணமிக்க வேண்டும். ஆனால்தான் நாம் ஜீவன்முக்தர்களாவோம் என கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு “ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா” (ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிலை, நித்தியம், சாஸ்வதம், உலகம் அநித்தியம் அல்லது மாயை என்ற தத்தவத்தை நிலை நாட்டுகிறார். அப்ப்டி ப்ரஹ்ம்நிலை ஏயதி விட்டால் அதில்தானே திடமாக இருக்கவேண்டும். அதைத்தான் “ஆதம ஸாக்ஷாத்க்காரரம்” என குறிப்பிடுகிறார்கள் பெரியோர்கள். ப்ரஹ்மத்தை அறிவது என்பத்ர்க்கு பதிலாக ப்ரஹ்மநிலையில் திகழ்வது என்பது மிக பொருத்தமான விளக்மாகும்.
12
தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு:
ததபின முஞ்சதி ஆசாவாயு:
ஸாரம்:
இரவும் பகலும், உதயாஸ்தமன்ங்களும், காற்றுக்காலமும் வஸ்நத காலமும் மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்கை ந்லிந்துகொண்டு வருகிறது, ஆனாலும் யாரும் ஆசையை விடுவதில்லை.

விளக்கம்:
நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலக்நீதிக்குட்ப்பட்டு நடப்பதில்லை என்பதை தெளிவாக தந்துள்ளார். பார்ப்போம். இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வ்ஸந்தகாலம் முதலியவை மாறுகிறது. iஇப்படி காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் ந்மது வாழ்க்கையும் மாறி மாறீ வருகிறது (அதாவது பால்யம், கௌமாரம், யௌவ்வனம், வார்த்தக்யம்) இது உலம நியதி (Natural Law). சுருங்க சொன்னால் உலகிலுள்ள எல்லாமே மாறக்குடியவை. இது நம் கையில் இல்லை, அது உலக நியதி. அப்படி உலகமே மாறினாலும், அஹோ! நம் ஆசை மட்டும் ஏன் மாறுவதில்லை? எப்பொழுதும் நாம ஆசாபாசத்தில் உழ்ன்றவண்ணம் இருக்கிறோம். இது மதியீனமல்லவா என சொல்லாமல் சொல்கிறார்.
13
காதேகாந்தா தனகத சிந்தா
வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா
பவதி பவார்ணவ தரணே நௌகா
ஸாரம்:
எத்ர்க்காக மனைவி (கணவன்) தனம் இத்யாதிகளில் விசானம் கொள்கிறாய்? ஹே மதிஹீனனே! உன்னை பரிபாலிப்பவன் உனக்கு இல்லையா? இந்த மூன்று உலகத்திலும் ஸ்ஜ்ஜனங்களுடைய குட்டுறவு மட்டும்தான் உனக்கு இந்த பிறப்பிரப்புடன் கூடின ஸம்ஸார ஸாகரத்தை கடக்க தோணியாக அமியய முடியும்.

விளக்கம்:
ஸத்ஸங்கத்தின் மஹிமையை இங்கு விளக்குகிறார். உலகில் நாம் உழல்வது, மனைவி, மக்கள், பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகலோலுபம் போன்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிறோம். இந்த பந்தங்கள் சரிவர அமையவில்லையானால், நாம் கலங்குகிறோம். நான், எனது என்ற அஹ்ம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் ந்ம்மை காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற பாவம் ந்மக்கு வருவதே இல்லை. எல்லாம் ந்ம்மால் இயங்குகிறது என்ற விசாரம் ந்மக்கு மேல் ஒருவன் நம்மை நடட்த்துகிறான் என்ற விசாரமே இல்லாமல் சைய்துவிடுகிறது. மூன்று உலகம் எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற மூன்று அவஸ்தை. நாம் சில சமய்ம் விழித்திருக்கிறோம், சில சமயம் ஸ்வப்ன உலகில் இருக்கிறோம், இன்னும் சில சமயம் உறக்கத்தில் போய்விடுகிறோம். இப்படி இந்த மூன்றும் மூன்று உலக வாஷ்க்கை என கூறப்படுகிறது. இந்த மூன்று நிலையிலியருந்தும் கடைத்தேற (அதாவது பிற்ப்பு இரப்பு என்ற நிலை இல்லாமலாக) ந்மக்கு உதவி புரிவது ஸ்த்ஸ்ஸ்ங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய வேண்டும். அதாவது ஞானிகளின் கூட்டுறவு. இது முன்பே சொன்னதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. உலகமே மாயம் என்று கூறும்போது, ஸத்ஸ்ஸங்கம் மாயை அல்லவா என்ற வினா எழலாம். இருட்டு அகலவேண்டுமானால், ஒளியை கொணரவேண்டும். ஒளி அநித்தியபாகுமா? ஆகாது. ஏன்? ஓளியில்லயேல் இருட்டு. அப்பொழுது ஒளி ந்ரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராதே. ஆனாலும் அநித்திய அவஸ்தை மாற நித்திய அவஸ்தையை நாட வேண்டும். இருட்டு அஞ்ஞானம். ஒளி ஞானம். ஞானம் வந்தால் அஞ்ஞானம் அகலும் என்பது ந்மக்கு புரிந்ததே. ஒளியில் எல்லாம் விளங்கும். அதுபோல் ஸ்த்துக்களுடைய கூட்டுறவு ந்மக்கு ஞானத்தை தரும். இதுதான் இதன் தாத்பர்யம்.
14
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:
காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பஸ்யதி மூடோ
ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:
ஸாரம்:
தாடி மீசை வைத்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலயில் ஜெடைகள் நிறைந்து, காஷாய வஸ்த்திரத்தை தரித்து இப்படி பல வேஷங்கள் போடுபவன் முடனேயாவான். அவன் பார்வை இருந்தும் குருடனாவான்.. ஏனென்றால் இவையெல்லாம் அவ்ன் வயற்றுப்பாட்டிர்க்கே.

விளக்கம்:
ஸன்யாஸம் என்ற ஓர் உன்ன நிலையை கள்ங்கப்படுத்தும் வகையில் தாடி மீசை வைய்த்து, தலையை முண்டனம் சைய்து அல்லது தலையில் ஜெடையை வளர்த்தி, காஷாய வஸ்த்திரம் தரித்து தம்மை ஸன்யாஸி என்று கூறிக்கொள்பவர் மூடர்கள ஆவார்கள். அவர்கள் வயிற்றுப்பாட்டிர்க்காக போடப்பட்டவை இந்ததவேஷம். இவர்களை கண்ணிருந்தும் கானாதவர்கள் என் கூரும் மருத்து சிந்திக்க திராணி இருந்தும் ஞானமில்லதவர் என பொருள். வெறும் வேஷம் போட்டதால் ஒருவன் ஸன்யாஸி ஆகிவிட முடியாது. ஸன்யாஸி வேஷம் போடவேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை இதுமூலம் தெளிவுபடுத்துகிறார். ஸன்யஸம் என்பது மனத்தளவில். ஆசாபாசத்தை துறந்து, உலக சிந்தனைய்ற்று மௌன்மாக தியானநிலையில் பிரஹ்மமானுபூதியில் எப்பொழுதும் நிலைத்திருப்பதுதான் ஒரு ஸன்யாஸியின் லக்ஷ்ணம். அல்லது வேஷம் போடுவதல்ல என பொருள். ஸன்யாஸிக்கே இயப்படியானால் நம் நிலை என்ன? உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லாம் அதில் வேஷதாரிகள் என சொல்லமல் சொல்வதுபோல் இருக்கிறது.
15
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபின முஞ்சதி ஆசாபிண்டம்
ஸாரம்:
உடல் நலிந்து (சோர்வடைந்து), வாயில் பல்கள் வீழ்ந்துபோய், தலைமுடி நரைத்துப்போய், கையில் ஊன்றுகோலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிலையிலும் ஆசைகள் எனும் மூட்டையை விடுவதில்லை.

விளக்கம்:
ஆசை யாரை விட்டது என கேட்ப்பதுண்டு. ஆசை யாரையும் பிடிகூடுவதில்லை. நாம் தான் அதை பிடிகூடுகிறோம் என்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்களெல்லாம் உதிர்ந்து, தலைமுடி முழுவதும் ந்ரைத்து, ந்டப்பதர்க்கு ஊன்றுகோல் வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு கிழவன்கூட தன ஆசையெனும் மூட்டையை விடுவதில்லை. இதிலிருந்து நாம் உலக ஸுகத்தில் எவ்வளவு ஆசை வைக்கிறோம் என்று தெரிகிறது. நாம் தள்ளாத நிலையிலும ஆசையை விடுவதில்லை.. எவ்வள்வு மூடத்தனம்! இது நம் அறிவீனம் என்றே சொல்லவேண்டும்.
16
அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ
ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ:
ததபின முஞ்சதி ஆசாபாச:
ஸாரம்:
முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸூர்யனும், இரவுனேரம் தன் கால்முட்டுகள் தாடியை தொடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இருகர்ங்க்ளையும் ஏந்தி பிக்ஷை வாங்கி சாப்பிடும் நிலையிலும் (அவன்) ஆசாபாசங்களை விடுவதில்லை.

விளக்கம்:
தள்ளாடி தத்தளிக்கும் முதியவரை பற்றி சொன்னார். ஆனால் முதியவர் மட்டுமல்லாமல், எவரும் தன் அனாத நிலையிலும் வைய்யிலில் அலைந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன் உடம்பை மூட கம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடலை குறுக்கி உட்கார்ந்து இருகைகளையும் ஏந்தி பிச்சை எடுக்கும் ஒரு மனிதனும் தன ஆசாபாசங்களை விடுவதில்லை. அதாவது மனிதர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் உலக ஆசாபாசங்களை விட முயலுவதில்லை என பொருள். ஆசை யாரை விட்டது?
17
குருதே கங்கா ஸாகர கமனம்
வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன
முக்திம் ந பஜதி ஜன்மசதேன
ஸாரம்:
(ஓருவன்) கங்கா ந்தியில் ஸ்னனம் செயாலாம், வ்ருதங்கள் இருக்கலாம் நோம்புகள் நோக்கலாம் அல்லது நிறைய தான தர்மங்கள் பண்ணலாம், ஆனாலும் ஞான்ம் (ஆத்மக்னானம்) வரவில்லையேல், நூறு வருடங்கள் சென்றாலும் (அவனுக்கு) முக்தி (ஜீவன்முக்தி) கிடைக்காது.

விளக்கம்:
ஆத்மஞானம் பெறவேண்டியது எவ்வள்வு முக்கியம் என்றூ த்ரிந்து கொள்ள வேண்டும். முதலில ஆசாபாசத்தை விட்வேண்டும் என்றூ பார்த்தோம். பிறகு ஆத்மஞானம் பெறவேண்டும். ஒருவன் எவ்வளவுதான் கங்காஸ்னானம் சைய்தாலும், வ்ருதங்கள் இருந்தாலும், நோம்புகள் நோற்றாலும், நிறைய தாந்தர்மங்கள் சைய்தாலும் ஆத்மஞனம் கிடைக்கவில்லையானால் நூறு வருடங்களானாலும் (அதாவது நூறு என்பது ஒரு கணக்கிர்க்கு சொன்னது. இதல் பொருள் எவ்வள்வு வருடம் அல்லது காலம் என எடுத்துக்கொள்ளவேணடும்)
18
ஸுர்மந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ பொகத்யாக:
கஸ்ய ஸுகம் ந்கரோதி விராக
ஸாரம்:
ஆலயங்களிலோ, மரத்தின் சுபட்டிலோ வெறும் நிலத்தில் மரவுரி கட்டி உற்ங்குபவனும் எல்லா உடமைகளையும் தியாகம் சைய்து ஸமபாவனையுடன் கூடின ஒருவனுக்கு ஸுகம் எப்படி வராமலிருக்கும்?

விளக்கம்:
ந்மக்கு ஸுகம் உலகில் கிடைக்கும் வஸ்த்துக்களிலிருந்து வருகிறது என நினைக்கிறோம். ஆனால் உண்மையான் ஸுகம் எங்கிருக்கிறது? இடுப்பில் மரவுரி கட்டி, தன்னுடைய எல்லா உடமைகளிலிருந்தும் கிடைக்கும் ஸுகத்தையும் அந்த உடமைகளையும் துற்ந்து, ஆலயங்களிலோ, மரச்சுவட்டிலோ வெறும் தறையில் ம்ரவுரிகெட்டி படுத்துற்ங்கும் வைராக்கியம் கொண்ட (ஸமபாவனனையயுட்ன்) ஒருவனுக்கு கிடைக்கும் ஸுகத்தை யாரால் தடய முடியும்? அதாவது உலகிலிலுள்ள எல்லா வஸுதுக்களிலும் உள்ள அசாபாசத்தை துறந்து எல்லா உடமைகளையும் துறந்து, சுக துக்கங்களில ஸமபாவனைகொண்டு திறந்த வெளியில் மரசசுவட்டில் வெறும் தறயில் வஸ்தரஹீனனாய் மரவுரி உடுத்துற்ங்கும் யோகிக்கு ஸுகம் இல்லை என்று யார் சொன்னது? அவருக்கு உள்ள ஸுகத்தை யாரால் தடுக்கமுடியும்? அதாவது உடமையற்று நிச்சிந்தயாய், கவலையில்லாமல் இருக்கும ஸுகமே ஸுகம் என் பொருள்
19
யோகரதோ வா போகரதோ வா
ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ
ஸாரம்:
(ஏதொருவன்) தியானத்திலிருந்தாலும், இந்திரியானுபவங்களில் மூழ்கிய்ருந்தாலும், மற்ற்வருடன் கூடியிருந்தாலும் அல்லது தனந்தனியே (ஏகாக்ரமாய்) இருந்தாலும் சரி (அவன்) பிரஹ்ம் நிலையில் நிலைத்திருந்தால் ஸுகத்தை, ஸுகத்தை, ஸுகத்தையே அனுபவித்திருப்பான்.

விளக்கம்:
ஏது ஸுகம் என சென்ற ஸ்லோகத்தில் சொன்னார். இந்த் ஸ்லோகத்தில் அதை விரிவு படுத்துகிறார். இரண்டின் கருக்தும் ஒன்றுதான். அதாவது, ஒரு யோகி எந்த நிலையில் இருந்தாலும் (உலகவாழ்க்கையில்) ப்ரஹ்ம நிஷையில் இருந்தால் அவனுக்கு ஸுகமே கிடைக்கும். பிரஹ்ம நிஷ்டைக்கு போகுமுன் என்ன செய்ய வேண்டும்? எல்லா பொருளயும் அவைகளிலுள்ள எல்ல ஸுகங்களையும் துறந்து, கிடைத்த இடத்தில் வஸம் சைய்து, (கிடைத்ததை புஜித்து), ஸம்த்ருப்திய்டனும் ஸமபாவனையுட்னும் ப்ரஹ்மநிலையில் நிலைத்திருந்தால் கிடைக்கும் அனுபவமே ஸுகம் என பொருள். ஸுகம் வெளியில்ல்ல, நம் உள்ளில் உள்ளது என தெரிகிறது.
20
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
ஸாரம்:
யாதொருவன் கொஞ்சமாவது பகவத்கீதயை ப்டித்து, ஒருதுளியாவது கங்கா ஜலத்தை பருகி, சிறிது நேரம் முராரியை (முரன் என்ற அஸுரனை கொன்றவன் – ஸ்ரீ கிருஷ்னன்) பஜித்துவருகிறானோ (அவனுக்கு) யமனுடன் வாதடி ஜ்யிக்கமுடுய்ம்,.


விளக்கம்:
யேன் பகவத்கீதா படன்ம் என்|று சொல்கிறார்? கீதை ஐந்தாவது வேதம் என கூறப்ப்டிகிறது. அதில் வேதத்தில் சொன்ன எல்லா தர்மங்களும் அட்ங்கியிருக்கிறது. அதை படித்தால் வேதத்தை படித்ததுபோல் ஆகும். அதே போல் ஏன் கங்காஜலபானம் ச்லாக்யம் என கூறுகிறார்? ந்திகளில் முக்கியமானது கங்கை. கங்காஜலம் முக்தியளிக்கும் என நமக்கு தெரியும். ஆகையால் கங்காஜல் பான்ம் உசிதம். முராரி என்ற அஸுரனை கொன்றவன் கிருஷ்ணன். அதுமட்டுமல்லாமல், எப்பொழுதும் நித்திய ஸுகத்தில் இருப்பவன் கோவிந்தன் (கிருஷ்ணன்). ஆகையால் நித்திய ஸுகத்திர்க்கு அவனை பஜிக்கவேண்டும். இதிலிருந்து, நித்தியஸுகத்திர்க்கு என்ன வழி என விளங்குகிறது. புண்ய ந்தி ஸ்னானம், பகவத்கீதா படனம், ஈறைவன் வழிபாடு இவை நிஷ்டையுடன் சய்துவந்தால் அவனுக்கு யெமனுடன்கூட சர்ச்சை சைய்து ஜெயிக்கமுடியும். அதாவது மரண பயம் சிறிதும் இராது என பொருள்.
21

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
ஸாரம்:
மீண்டும் ஜனிப்பது, மீண்டும் மரணமடைவது, திரும்ப திரும்ப மாதாவின் கர்ப்ப பாத்திரத்தில் கிடப்பது என மாறி மாறி வரும். இந்த நிலையை(ஸம்ஸார ஸகர்த்தை) கடப்பது என்பது (என்னால்) இயலாத காரியம். ஹே முரனை கொன்றவனே! தயைகூர்ந்து (என்னை இந்த ஸம்சாரஸாகரத்திலிருந்து) காப்பாற்று.



விளக்கம்:
உலக வாழ்க்கையின் நியதியை பற்றி விவரித்திருக்கிறார். ஜனன மரணம் என்பது ஒரு சக்கிரத்தின் இடைவிடாத சுழர்ச்சிபோல். திரும்ப திரும்ப வருகிறது. ஜனனத்திர்க்கு முன் 10 மாதம் மாதாவின் கர்ப்ப பையில் கிணட்ந்துழலும் கஷ்டம் நாம் அறிந்ததே. ஜனித்தால் மரிக்க வேண்டும். ஜனனம் மாதாவின் உதரத்திலிருந்தே என்ற நியதி மாறாது. இப்படி ஜனனத்திர்க்கும் மரணத்திர்க்கும் இடையே உள்ள வாழ்க்கைதான் ஸம்ஸார ஸாகரம் எனப்படும். இதிலிருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் நிலை அடைய வேண்டுமானால், இறைவனுடியய க்ருபை அவசியம். ஆகையால் நித்திய ஆனந்தநிலையில் திகழும் ஸ்ரீ கிருஷ்ணனை பஜி என்று கருத்து.
22
ரத்யா சர்பட விரசித கந்த:
புண்யா புண்ய விவர்ஜித பந்த:
யோகீ யோக நியோசித சித்தோ
ரமதே பாலோன்மத்தவதேவ
ஸாரம்:
வழியில் கிடக்கும் கிழிந்த சாக்கு துணிக:ள் முதலியவையை எடுத்து உடுத்தி, ந்ல்லது கெட்டது வழிகளை துறந்து யோகநிலையில் (ப்ரஹம் நிலையில்) ரமித்திருக்கும் யோகி ஒரு குழந்தையைபோல் அல்லது ஒரு உன்மத்தனை போல் காண்பாடுகிறான்.

விளக்கம்:
நித்திய ஸுகம் என்பது ப்ரஹ்மத்தில் உறைத்திருப்பது என பார்த்தோம். அப்பேர்ப்பட்டவனுக்கு பெர்யர் யோகி. தியானத்திலிருந்துகொண்டு ப்ரஹமநீலையில் உறைத்திருக்கும் ஒருவன் ஈப்படி ஐருப்பல் என வியவரிக்கிறார். வழியில் கிடைத்த கந்தல ஆடையை எடுத்துடுத்தி, ந்ல்லது கெட்டது என்ற (ஸுக துக்கம்)காரியங்களிலிருந்து அகன்று எப்பொழுதும் த்யானநிலையில் ப்ரஹ்ம நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகி ஒரு குழந்தையை போல் அல்லது ஒரு உன்மாத பித்தனை போல் திகழ்வான். ஏன்? குழந்தையும் பித்தனும் எப்படி ந்ல்லது கெட்டதை பிரித்தறிவார்கள்? அவர்களுக்கு எல்லம் ஒன்றேதான். வித்தியாசமிருக்காது. ஒரு பித்தனையும் ஒரு யோகியயும் பிரித்தறிய இயலாது. அவர்கள் அப்பொழுதும் ஸுகதுக்கத்தை உணரமாட்டார்கள். இதர்க்கு சன்று திருவன்னாமலையில் இருந்த ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். அவர் இதேபொல் வழியில் கிடைத்ததை உடுத்துவார், வழியில் கிடைத்ததை எடுத்து புஜிப்பார், தடியால் அடிப்பர்ர், கடைகளில் புகுந்து துணிகளை கிழிப்பார், பொருள்களை வாரி இறைப்பார். ஆனால் அதன் உடமகளுக்கும் ந்ஷடம ஏற்படாது என்று மட்டுமல்ல அவர்கள் வியாபாரம் செழிக்கும். இது கண்கூடாக அனுபவித்தோர் உண்டு. அவர் பரம யோகியாய் திகழ்ந்து ஸ்ரீ ரமண மஹருஷியை உலகிர்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.
23
கஸ்த்வம் கோஹம் குத ஆயாத:
காமே ஜனனீ கோமே தாத:
இதி பரிபாவய ஸர்வம்ஸாரம்
விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
ஸாரம்:
நீ யார்? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? என் தாய் யார்? என் தகப்பன் யார்? இந்த உலகம் ஒரு ஸாரமில்லா வஸ்து, அது ஒரு ஸ்வபனம் போல் என சிந்தித்து உலகத்தை விடு (மறந்து விடு).

விளக்கம்:
ஸ்ரீ ரமண மஹர்ஷி இதைத்தான் சொல்லியிருக்கிறார். அதாவது உன்னை நீ அறிந்துகொள். எப்படி? நீ யார், நான் யார், எனது தாய் தகப்பன் யார், இந்த உலகமவாஷ்வு ஒரு ஸ்வபனம் என மனதில் சிந்தனை செய் என்று. உடல் வழ்க்கை உலகில் இருக்கும்போதே, இந்த் உலகம் ஒரு ஸ்வ்பன்ம் போல, நீ, நான், தாய் தகப்ப்ன் என்றெல்லாம் உற்வுகொண்டாடுவது வேறும் ஆசாபாசத்தால், இப்படி வேறுபாடு ப்ரஹ்மத்திர்க்கு இல்லை, நாம் ப்ரஹ்மத்தின் அம்சம் என்று இப்படி விடாது சிந்தனை செய்தால் ப்ரஹ்மமாகவே திகழ்லாம். அதுதான் நித்திய. சத்திய ஆனந்த நிலை. கிதையில் ஸஸ்ரீகிருஷ்னனும் இதைத்தான் சொல்கிறார். இந்த உற்றர் உறவினர்கள், நல்லது, கெட்டது, ஸுகம் துக்கம் போன்ற த்வந்தங்கள் வெறும் மாயை. இந்த உலகம் ஒரு ஸ்வ்பன வடிவம். அதில் ங்கழும் வாழ்க்கை அனித்தியம் என அறிந்துகொள் என அர்ஜுனனுக்கு உரைக்கிறார். இப்படி மனத்தில் உறுதியாக சிந்தனை சைய்தால் நாம் முக்தி அடையலாம்.
24
த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு
வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணூ:
ஸர்வஸ்மின் அபி ப்ச்யாத்மானம்
ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்
ஸாரம்:
உன்னிலும், என்னிலும், எலலாற்றிலும் ஒரே சக்தியாக விஷ்ணு (இறைவன்) வீற்றிருக்கிறார். பொறுமையிழந்து நீ எனனிடம் கோபம் கொள்கிறாய். எல்லாற்றிலும், எல்லோரிலும் நீ அந்த இறைவனை (SELF).பாற். வ்ய்கதி பேதங்களை உருவக்கும் அந்த அஞ்ஞானத்தை துற

விளக்கம்:
ஸமபாவனை வருவத்ர்க்கு வஷி காட்டுகிறார். நாம் எல்லோரிலும், உலகிலுள்ளா எல்லா வஸ்துக்களிலும் உயிராக ஓர்சக்தி திகழ்கிறது. அதைத்தான் இறைவன் என கூறுகிறோம். அப்ப்டியானால் ஒருவன் மற்றொருவன் பால் காண்பிக்கும் க்ரோதம் (கோப்ம்) சரியல்லவே. கோபம் ஏன் வருகிறது? பொறுமை இல்லாததால். பொறுமை ஏன் இல்லாதாகிறது? நான் வேறு, நீ வேறு, மற்றவைகள் தனிதனி என அஞ்ஞானத்தால் உண்டாகும் வ்யக்தி பேதமே. உலகில் எல்லா வஸ்துக்களிலும் திகழும் சக்தி (இறைவன்) ஒன்றேதான். அப்ப்டியானால் இந்த வ்யக்தி பேதம் ஏன் மருகிறது? அதுதான் அஞ்ஞானம் (அறிவீனம்) எனப்படுவது. இந்த அஞ்ஞானம் அக்ன்றால் இந்த வ்யக்தி பேதமும் அகலும். மேலே சொன்ன உண்மை புரியும். அப்படி புரிந்தால் எல்லாற்றிலும் இறைவனை காண்முடியும். இந்த நிலைக்கு ஸமபாவனை என பேர். இந்த நிலையயைத்தான் ஸ்ரீ கிருஷ்னன் யுத்த்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஞானக்கண் தந்து தன் விஸ்வரூப தரிசனத்தில் கண்கூடாக காண்பித்தாற். அங்கு அர்ஜுனன் இந்த உலகம் முழுவதும், அதிலுள்ள சராசரங்கள், தான், கிருஷ்னன், ய்த்த்க்களம், அதில் நிரந்ததுநிற்க்கும் வீரர்கள் எல்லாவற்றையும் கண்டான். பிறகு அவனுக்கு ஞானோதயம் வந்தது. ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்ம்மேந்த்ர ஸ்வாமிகள் தான் இயற்றிய ப்ஜனை பாடல்கள் ஒன்றில் இதை ”ஸ்ர்வம் ப்ரஹ்ம மயம்” என எடுத்துரரைத்திருக்கிறார். அவர் பெரிய ஞானி. ஸ்ரீ தியாகராஜ ஸ்வமிகள் தன் க்ருதிகளில் இதைத்தான் “எல்லாம் ரமமயம்” என பாடினார். அவர் பக்திமான். எல்லாவற்றிலும் அவர் இறைவன் ராமனையே கண்டார். ஞான மார்கம் பக்தி மார்கம் இரண்டிலும் இதைத்தான் தந்திருக்கிறார்கள் பெரியோர்கள்.
25
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ
மாகுரு யத்னம் விக்ரஹஸந்தௌ
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம்
வாஞ்ஞஸ்ய சிராததி விஷ்ணுத்வம்
ஸாரம்:
சத்ருக்களுடனும் மித்ரர்களிடமும், புத்திரனிடமும் பந்துக்களிடமும் (மற்றெல்லாரிடமும்) சத்ருதயோ, சினேகமோ கொள்ளாதே. (உனக்கு) அதிவேகம் விஷ்ணுபதம் (ப்ரஹ்மதவம் அல்லது ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்) கிடைக்க வேண்டுமானால், எல்லவற்றிலும் இறைவனை காணும் ஸமபாவனை நிலையை அடைவாயாக.

விளக்கம்:
ஸத்திய நிலை பெற, ஆசாபாசத்தை விட்டால் மட்டும் போதாது, ஈல்லாற்றிலும் ஏக சக்தியாக விளங்கும் அந்த பரமாதம தத்துவத்தை உணரவேண்டும். இதற்க்கு சத்ருத்வம், மைத்ரி, ஸுகம், துக்கம், நான், நீ முதலிய த்வந்த்வ பாவம் போய எல்லாம் ப்ரஹ்ம மயம் என்ற ஸமபாவம் வரவேண்டும். அதத்தான் இங்கு வலியுறுத்துகிறார். இங்கு சத்ருக்கள், மித்ரர், புத்திரன், பந்துக்கள் என்று மட்டும் சொல்லவில்லை. இப்படி சொல்வதிலிருந்து, எல்லா ஜீவராசிகளும் உள்படும். உதாஹரணத்திர்க்காக் இவை நாலை மட்டும் குறிப்பிடுகிறார். இதில் எல்லா வித பந்தங்களும் அட்ங்கிவிட்டன்.
26
காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வாSSத்மானம் பாவய கோSஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா:
தே பச்யந்தே ந்ரக நிகூடா:
ஸாரம்:
காமம், க்ரோதம், லோபம், மோஹம் முதலிய (துர்குணங்களை) குணங்களை விட்டு உன்னுள் “நான் யார்” என்று விசரம் கொள். ஆத்மஞானம் இல்லாதவர்க்ள் மூடர்கள், அவர்க்ள் இவ்வுலகிலேயே ந்ரகவேதனைக்குள்ளாவார்கள்.

விளக்கம்:
ந்ம்மை ந்யிப்பது காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யம் என்ற 6 துர்குணங்கள். காமம் என்பது கீழ்த்தர ஆசை (EGOCENTRIC DESIRE), க்ரோதம் என்றால் கோபம் (ANGER), லோபம் என்பது கஞ்சத்தனம் (GREED), மோஹம் என்பது அஞ்ஞானம் (DELUSION), மதம் என்றால் கர்வம் (SELF CONCEIT), மாத்ஸர்யம் என்பது விரோதம் (ENMITY)/ இப்படிப்பட்ட் துகுணங்கள் நம்மை ஆட்டி படைப்பதால் நாம் நம் சுய நிலையை மறந்து உலகத்தில் ஸுக துக்கதிகளில் நலிந்து நரகவேதனை படுகிறோம். இதிலிருந்து விமுக்தி வேண்டுமானால், இந்த குணங்களை விட்டு, முதலில் நான் யார் என்|ற் ய்ண்மையை அறியவேண்டும். அப்படி ஆத்ம ஞானம் அடையாதவர்கள் இந்த் உலகிலேயே ந்ரகவேதனை பட்டு உழ்லுகிறார்கள் என்று எடுத்துரைக்கிறார். இப்படி அஞ்ஞானத்தில் மூழ்கி இந்த ஸமஸார ஸாகரத்தில் பல கஷ்டங்களும் படுபவர்கள் ஞனம் பெ|றாதவர்கள். இதிலிருந்து தப்ப, நம்முள் நான் யார் என்ற சிந்தனையில் மூழ்கி ஆத்மஸ்வரூப ஞானம் பெறவேண்டும்.. இதை ஸ்ரீ ரமண மஹருஷி “உன்னை நீயே உணர்ந்துகொள்” என சொல்லியிருக்கிறார்.
27
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
ஸாரம்:
(பகவத்) கீதையை படி, (கீதாசார்யனின்) 1000 நாமத்தை சொல், லக்ஷ்மீபதியிலன் (விஷ்ணுவின்) ரூபத்தை மனதில் தியான்ம் செய், ஸத்துக்களுடன் (ஸஜ்ஜனங்களுட்ன்) கூட்டுறவு கொள், தீனஜன்ங்களூக்கு தனத்தை தானம் செய்.

விளக்கம்:
நம் ஆசாபாசத்தையும் துர்குணங்களையும் விட்டால் மட்டும் போதாது, ந்ல்ல காரியத்தில் ஈடுபடவேண்டும். அவை ஏவை? கீதை என்பதை ஸகல சாஸ்திரங்கள் என கொண்டு சாஸ்த்ர படனம் என இதர்க்கு அர்த்தம் கோள்ளவேண்டும். பகவான் நாமாவை உச்சரிப்பது. பூசை செய்தல் என விஸ்தாரமாக எடுத்து கொள்ளவேண்டும். மந்தில் இறைவன் ஸ்வரூபம் காணுதல் தியானம் என கொள்ளவேண்டும். பிறகு ஸத்ஸ்ஸங்கம், தான தர்மாதிகள் செய்வது என இப்படி உட்ல், மனம், புத்தி மூன்றையும் நல் வழியில் செலுத்தல் வேண்டும். அதர்க்கு, பாராயணம், ஜபம், சத்ஸ்சங்கம், தந்தர்மாதிகள் என அழி வகுத்திருக்கிறார்கள் பெர்டியோர்கள். இப்படி செய்யும்போது, அஹ்ம்காரம், மமாகாரம் போய், எல்லொரும் ஒன்றே என்ற பாவம் வரும். இது ஆத்ம சிந்தனைக்கு உதவியாக அமையும்.
28
ஸுகத: க்ரியதே ராமாபோக:
பச்சாத்தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
தத்பி ந முஞ்ஞ்தி பாபா சரணம்
ஸாரம்:
இந்திரிய ஸுகத்தை நாடுகிறோம். அதன் விளைவாக உடல் ரோகத்தில் தத்த்ளிக்கிறது, மரணம்தான் எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி என்று அறிந்தும், (மனிதன்) பாப செயக்ளிலிருந்து விலகுவதில்லை.

விளக்கம்:
அஹோ என்ன பரிதாபநிலை! மனிதன் இந்திரியத்தால் கிடைக்கும் ஸுகங்களை அனுபவிக்கிறான். அதன் விளைவாக உடல் நலமற்று வியாதியில் உழலுகிறான். மரணம் இந்த உலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி என தெரிந்தும், தான்செய்யும் பாபச்செயல்களிலிருந்து விலகுவதில்லை. இதை என்னவென்று சொல்வது. அஞ்ஞானம் என்றல்லாமல் வேறென்ன? ஒருபுறம் ஆத்மஞாந்த்திர்க்கு வழிகாட்டி இன்னொருபுறம் உலக் வாழ்க்கை தரத்தை சுட்டிக்காட்டுவதிலிருந்து ந்மக்கு நல்வஷி ஏது, ஆபத்தான வழி ஏது என்று இரண்டையும் எடுத்துரைக்கிறார் குருநாதர். மனித இயல்பு என்ன, அதை எப்படி ந்ல்வழியில் திருப்பவேண்டும் என இரண்டு பக்கத்தையும் புரட்டி பார்த்த பலன் கிடைக்கிறது.
29
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸாரம்:
ஸொத்து (இருப்பது) ந்ல்லதல்ல. இதை எப்பொழுதும் நினை. அதிலிருந்து ஸுகம் கிடைப்பதில்லை, இதுதான் சத்தியம். தன்வான்கள் தங்கள்புத்திரர்களால் பீதி அடைகிறார்கள். இதுதான் உலக்த்தில உள்ள நியதி.

விளக்கம்:
என்ன ஒரு ங்க்னகான சத்தியம்! ஸொத்திருந்தால் குடவே பயம் வரும். அதை கட்டிக்காக்க வேண்டும். யரும் திருடக்கூடாது. அது குறையாமல் இருக்க வேண்டும் என்ற பேராசை வரும். அதிலிருந்து ஏக்கம், பயம், அனுமித்தனம் முதலிய குணங்கள் வந்து சேரும். மன நிம்மதி இராது. ஸொத்திருந்தால் ஸுகம் வரும் என்று இப்போ சொல்ல முடியுமா? இல்லை. துக்கம் தான் வரும் இல்லயா? தன்வான்கள் தங்கள் பிள்ளைகளையே பயப்பட வேண்டியதாகும். ஏனென்றால் அவர்களுக்கு தனம் தரவில்ல்யேல் அவ்ர்கள் தொல்லை செய்வார்கள், சண்டை சச்சரவு எழும். அவர்களுக்குள் மோதல் வரும். கூடாது அவர்களிடமிருந்து தன்வான்களுக்கு மரண்பயம் கூட வரும். இதை நாம் பத்திரிகை வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொண்டுள்ளோம். “பணம் ஆளை கொல்லும்” என்ற பழ்மொழி சரியாகிவிட்டது.
30
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யாSநித்ய விவேக விசாரம்
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம்
குர்வவதானம் மஹதவதானம்
ஸாரம்:
ப்ராணாயமம் செய்தல், இந்திரிய அடக்கம் கொள்தல், நித்திய அனித்திய வஸ்துக்களை வகைதிரித்து ஆறிதல், ஜபம்செய்து மனதை அடக்குதல் இத்யாதிகளை மிக கவனமாக செய்.

விளக்கம்:
நல்லது கெட்டதுகளை சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும் தந்து, ஆத்ம விசாரம் செய்து கடைத்தேறு என்று சொன்னால் மட்டும் போதுமா? ஆத்மவிசரம் எப்படி செய்யவேண்டும்? ஆத்விசரத்திர்க்கு க்குன்னோடியாக நாம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாதன் விஷயங்களை அடுத்துரைத்ததொடு நில்லாமல், ஆத்கஞாந்த்திர்க்கு என்ன வழி என்றும் தெள்ள தெளிய தருகிறார். ப்ராணாயமத்தால் விசாங்களை அடக்குவதும் (மனோ நியந்த்றணம்), ப்ரத்யாகாரத்தால் இந்திரியங்களை அட்க்குவதும் (உடலுருப்புகளை), நல்லது கெட்டது என வகைதிரித்தறிவதினால் விவேகம்டைவதும் (புத்தி ஸுக்ஷ்மதை), ஜபம் மூலம் ஏகாக்ரசித்த்த்துடன் இருப்பதும் (தியானம்) கடைசியில் ஆத்மஸாக்ஷாத்க்காரம் எனும் ஸமாதி நிலையில் கொண்டு சேர்க்கும். தியானம் நிலையாக எப்பொழுதும் இருப்பது ஸமாதி நிலை. இந்த வழியை மிக கவனமாகவும் கருத்துடனும் செய்யவேண்டும்.
31
குரு சரம்ணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாரத்Sசிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
ஸாரம்:
குருவின் சரணாரவிந்தத்தை நிரந்தர பக்திச்ரத்தையுடன் இறுக பற்றி (மேல்சொன்ன படி) மனோநியந்த்ரணம், இந்திரிய தமனம் முதலிய வ்ழி (பின்பற்றி) இந்த (ஜனன மரண) ஸம்சாரத்திலிருந்து ஈடுபட்டு
உன் இதயத்துள் நிரந்தரமாக பிரகாசிக்கும் அந்த இறைவனை (ஆத்மஸ்வரூபத்தை – SELF) அடைய்வாயாக.

விளக்கம்:
நாம் ஏதொரு காரியம் செய்யும்போதும் குருவின் அருள் கிடைக்க வேண்டும். அவர் காட்டிய வழியில் செல்ல வேண்டும். குரு க்ருபை இல்லயேல் நம் பிரய்த்னம் பலம் தராது. ந்ம்மால் இறைவனை காணமுடியாது (ஆத்ம ஸாக்ஷாத்க்காரம்). அதர்க்கு குரு வழிகாட்ட்வேண்டும். “குருவருள் இல்லயேல் திருவருள் இல்லை” என்ற மகாவாக்கியம் இங்கு கவனத்திர்க்கு வரவேண்டும். அந்த குருவிர்க்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அவர் சொல்லில் ந்ம்பிககை வைத்து, அவ்ர் சொல்படி இயங்கினால் அவர் அருள் கிடைக்கும். அப்புறம் நமக்கு வெற்றிதான். இந்த மஹா தத்துவத்தை கடைசியில் வைத்திருக்கிறார். நம்பிக்கையுட்ன் குருவின் பாதகமலத்தை பிடித்து அவர் காண்பித்தபடி மனோலயம், இந்திரிய அடக்கம், ஜபம் வழி தியானம் இப்படி செய்தால் ஸமாதி நிலை கிடைக்கும். இப்படி தியான் நிலை நீடித்திருந்தால் அதாவது உலக நினைப்பு இல்லாமல் எப்பொழுதும ஆத்ம ஸ்வரூப அனுபூதி நிலையில் இருந்தால் அது தான் ஸமாதி எனப்படும். இது தான் ஆத்ம ஸாக்ஷாத்க்காரம் அன்ப்படும் நிலை. இது தான் மனித ஜாதியின் வாழ்வின் நோக்கம். இதுவேதான் வாழ்வின் ரகசியம் கூட.
முடிவுரை:
பவகத்கீதை எப்படி ஐந்தாவது வேதமென்று கொண்டாடுகிறோமொ அதேபொல் பஜகோவிந்தம் அத்வைத ஸிந்த்தாந்தத்தின் ஸாரம் முழுவதும் அட்ங்கியிருக்கும் ஒரு திவ்ய காடியம். ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் இதை தன் ஸ்வானுபத்திலிருந்து கடைந்தெடுத்து தந்திருக்கிறார். இதை படித்து அதன் படி வாழ்க்கை வாழ்ந்தால் ஆதமானுபூதி கிடைக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை.

எம்மால் முடிந்தமட்டும் நாம புரிந்துகொண்டபடி இந்த ஸ்லோகங்களுக்கு ஸாரமும் விளக்கமும் தந்திருக்கிறோம். இதில் வல்ல தவறும் இருந்தால் பெரியோர்களும் ஞானிகளும் எம்மை மன்னித்த்ருளும்படி வேண்டுகிறோம். அதேபொல் எமக்கு தெரிந்தமட்டில் Audio வுக்கு ராகங்களை சேற்த்திருக்கிறோம். அந்த ராகங்களில் பிசகு ஏதேனும் இருந்தால் ஸ்ங்கீதஸ்தார்கள் பொறுத்தருளுமாறு வேண்டுகிறோம். அச்சுப்பிழை ஏதேனும் இருந்தால் மன்னிக்குமாறு கோருகிறோம்.

நன்றியுறரை:
இதை மழ்லைகள் மிந்தளத்தில் பிரசுரிக்க முன்வந்த ஸ்ரீ ஆ.கி.ரா அவர்களுக்கும், இந்த நூலை யூனிகோட் தமிழில் தயார்செய்ய உதவியாயிருந்த அழகி என்ற Softwareஐ தந்த ஸ்ரீ விஸ்வனாதன் என்ப வருக்கும் எமது ந்ன்றி உரித்தாகும்.. இதை பொறுமையுடன் படித்துவரும் வாசக ந்ண்பர்கள் அனைவருக்கும் எமது ந்ன்றியை ரேகைப்படுத்துகிறோம். இந்த நூலை படித்து அது யாருக்கேனும் வாழ்க்கை வழி அமைய காரணமாக பவித்தால் அதுவே நாம் பெற்ற் பேறாக கருதுகிறோம். வணக்கம்.

முற்றும்

achalam38@gmail.com மின்னஞ்சலுக்கு வரும் வினாக்களுக்கு நேரடியாக உங்கள் மின்ன்ஞ்சலுக்கு பதில் தரப்படும். Website:www.geocities.com/v_achalam :எமது “ஆத்மீகம்”,“பஜனசம்ப்ரதாயம்”,“வெப்வ்யூ”மிந்தளங்களுக்கு போக நுழைவாயில்

கருத்துகள் இல்லை: