Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், நவம்பர் 16, 2009

புத்தர்





* தியானத்தின் மூலம் ஞானம் கிடைக்கிறது. தியானத்தின்
குறைவால் ஞானம் குன்றிவிடுகிறது. திருப்திதான்
பெருஞ்செல்வம்.

* தீமை புரிபவன் இந்த உலகில் துன்புறுகிறான்.
மறுமையிலும் துன்புறுகிறான். இரண்டிலும் அவனுக்குத்
துன்பமே. தான் செய்த தீமையைப் பற்றி நினைக்கும்போது அவன்
துன்புறுகிறான். தீய பாதையில் செல்லும்போது இன்னும்
அதிகமாய்த் துன்புறுகிறான்.

* காஷாய ஆடைகளால் தோள்களை மூடிக் கொண்டிருப்பவர்களிலும்
கூட பலர் தன்னடக்கமின்றி சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்.
அத்தகைய தீமை புரிபவர்கள் தங்கள் தீச்செயல்களாலேயே நரகத்தை
அடைகிறார்கள்.

* குற்றமற்றவர்களைத் தண்டித்துத் தீங்கு செய்கிறவன்,
கூர்மையான வேதனை, வியாதி, உடற்குலைவு, பெரும் விபத்து,
சித்தப்பிரமை, அரசு தண்டனை, பயங்கரமான குற்றச்சாட்டு,
உறவினர்களை இழத்தல், அனைத்து செல்வம் இழப்பு, நெருப்பாலோ,
இடியாலோ அவன் வீடு எரிந்துபோதல் ஆகிய துன்பங்களில் ஒன்றை
உறுதியாகக் காண்பான். மரணத்தின்போதும் அந்த வறட்டு மூடன்
துக்கத்தில்தான் மறுஜனனம் காண்கிறான்.

* கருத்துடைமையில் களிப்புறு; உன் எண்ணங்களைக் கட்டிக்
காத்துக்கொள்; சோர்வுறாதே. சேற்றில் விழுந்த யானையைத்
தூக்கி விடுவதுபோல் உன்னைத் தீயவழியிலிருந்து
மீட்டுக்கொள்.

* வெளிப்புறத்தைக் கழுவியது போதும்! உட்புறத்தைக்
கழுவுவதே எனக்குத் தேவை.

* நம்பிக்கை, ஒழுக்கம், வீரியம், சித்தம், நடுவுடைமை,
தர்மத்தை ஆராய்ந்து தெளிதல், அறிவு, நற்பயிற்சிகள்,
சிந்தனை ஒருமிப்பு – இவற்றில் பரிபூரண நிறைவு பெற்றால்,
துன்பங்களை விரட்டி விடலாம்.


தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால்
வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை
அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின்
நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய
குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும்
குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த
முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால்
இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக்
கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க
மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த
செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன்.
ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள்.
இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய
ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்.
எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம்
உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.


தாய், தந்தையர் தங்கள் மகனைத் தீய வழியிலிருந்து காக்க
வேண்டும். நல்ல வழியில் செலுத்த வேண்டும். வித்தை கற்பிக்க
வேண்டும். பொருத்தமான மனைவியைத் தரவேண்டும். காலம்
வரும்போது தங்கள் செல்வத்தை அவன் கையில் கொடுக்க
வேண்டும்.

* அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். அர்த்தமற்ற
சொற்களால் ஆக்கப்பட்ட ஆயிரம் பேச்சைவிட, அர்த்தமுள்ள ஒரே
சொல் மேலானது. அதை ஒருவன் கேட்பானேயாகில்
அமைதியாகிவிடுகிறான்.

* சொல்லியவாறே செய்கையில் நடக்கும் ஒருவனின் ரம்மியமான
பயனுள்ள பேச்சு வர்ண நிறைவுள்ள அதிக அழகானதொரு புஷ்பம்,
வாசனையும் பெற்றிருப்பது போன்றது.

*வர்ண ஜொலிப்பு நிறைந்த அதி அழகான ஒரு பூ நறுமணம்
பெற்றிராவிட்டால் எப்படியோ அது போன்றது செயலில் காட்டாமல்
வெறும் வாயளவில் மட்டும் மிக ரம்மியமாகப் பேசும் ஒருவனின்
பயனற்றச் சொற்கள்.

* உண்மையான பேச்சை உரைப்பவன் முரட்டுத்தனமில்லாமல்
அறிவுத் தெளிவுடன் இனிமையாகப் பேசுபவன் எவனோ எவர் மனமும்
புண்படாமல் பேசுபவன் எவனோ அவனே சரியான மனிதன்.

* பொன் நாணயங்களை அடை மழையாகப் பெய்தாலும், ஆசைகள்
அடங்காமல் பெருகும்.

*கருத்து முயற்சியில் முன்னேறியவர்கள். அதைத்
தெளிவாக உணர்ந்து கொண்டு அந்தக் கருத்து முயற்சியிலேயே
பேரானந்தம் கொள்கிறார்கள். ஆன்றோர்கள் காட்டிய அறிவு
நெறியில் பெரு மகிழ்ச்சியடைகிறார்கள்.

* இல்லாததைச் சொல்பவன் நரகத்திற்குப் போகிறான். ஒன்றைச்
செய்துவிட்டு அதை, நான் செய்யவில்லை என்று
பொய்யுரைப்பவனும் அவ்வாறே நரகத்திற்குச் செல்கிறான்.

தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.
அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.

‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்
பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்
தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்


அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.

நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.

எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.

அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும்,
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.

மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.

முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய்
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.

உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ,
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.

மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும்
வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம்
அவனைத் தொடர்ந்து செல்லும்.

துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், நாம்
துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப்
பாவிப்போம்.

தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை
வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம்
இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது.

சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு,
துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து
விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும்
உடைத்தெறிந்தவனுக்கு துன்பம் ஏற்படுவதில்லை.

எதிலும் ஆசை வேண்டாம். ஆசைப்பட்ட பொருளை இழப்பது
துன்பம்தான். ஆசையும் பொருளும் அற்றவனுக்கு விலங்குகள்
இல்லை.

கோபத்தை கைவிடு. செருக்கை கைவிடு. உலகப் பற்றுக்கள்
அனைத்தையும் ஒழி. எதையும் தனது என்று நினையாதவனுக்குத்
துன்பங்கள் ஏற்படுவதில்லை.

பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரைக்
காண்பதும் வேதனை தரும்.

பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனைதான். பிரியம்
இல்லாதவனிடம் அன்பில்லை. அதனால் வேதனைதான் மிஞ்சும்.

துன்பத்தை அழிக்கத் தூய வாழ்க்கை வாழுங்கள்.

உன் துன்பத்திற்கு எது காரணமாய் இருந்தாலும்
இன்னொருவரைப் புண்படுத்தாதே.

* நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக.
லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது
பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம்
இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த
நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம்.

* முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து
விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க
வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல்
இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க
முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான்
நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை
எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட
வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
முன்னேறியபடியே இரு!

* இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து
முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள்.
ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும்
இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட,
அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும்.

* என்னுடைய லட்சியத்தை, உண்மையில் சில சொற்களில் சொல்லி
முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்
தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வோர்
இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை
எடுத்துச் சொல்வது தான் அது.

* எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும்
விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள்.
உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால்
மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை
அடையுங்கள்.

* மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது.
உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது.

* உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல்
வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம்
அழைத்துச் செல்கின்றன.

* தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர்
முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த
முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய
வேண்டும்.

* புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் சரண்
அடைந்தவன் மேன்மையான நான்கு வாய்மைகளைத் தனது தெளிந்த
அறிவால் காண்கிறான்.

துன்ப நீக்கத்திற்கான வழி, ஆசைகளை விட்டு விடுவதால்
மட்டும் ஏற்பட்டுவிடாது. சொல், செயல், சிந்தனை
இம்மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும். நேர்மை இருக்க
வேண்டும். கொல்லாமை, அன்புடைமை, தூய அறிவுடைமை ஆகிய இந்த
உயர்ந்த இயல்புகளையும் நிலையாகக் கொள்ள வேண்டும்.

* முற்றிலும் நிந்திக்கப்பட்டவனும், முற்றிலும்
புகழப்பட்டவனும் ஒருக்காலும் இருந்ததில்லை. இருக்கப்
போவதுமில்லை. இப்போதும் இல்லை.

* குழம்பின் சுவையினை அகப்பை அறிய முடியாதது போல, தமது
வாழ்நாள் முழுவதும் அறிஞர்களோடு பழகினாலும், ஒரு மூடன்
அறத்தின் இயல்புகளை அறிய மாட்டான்.

* மலத்தைத் தின்று உடலைப் பெரிதாக்கிக் கொள்ளும்
பன்றியைப் போல, கொழுக்கப் பெரும் தீனி தின்ற சோம்பலிலும்,
தூக்கத்திலும் ஆழ்ந்து படுக்கையில் புரண்டு கொண்டு
இருப்பவன் முட்டாள். இவன் மீண்டும் மீண்டும்
பிறக்கிறான்.

புத்தர்




கருத்துகள் இல்லை: