Vaalga
திங்கள், நவம்பர் 23, 2009
மேக்கப்… ரசாயணக் களமான பெண்களின் உடல்!
தலை, கண், காது, மூக்கு, முகம், தேகம், கை, கால்கள், இடுப்பு எனஅலங்கரிக்காத இடம் என்று எதையாவது விட்டு வைத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள்? அழகு சாதனங்கள், இதர பேன்சி பொருட்கள் மூலம் பெண்கள் தினசரி 515 ரசாயணங்களை தங்கள் மீது இட்டுக்கொள்கிறார்களாம்.
அழகு சாதனங்கள் அமர்க்களமான தோற்றத்தை, அசத்தும் வாசத்தோடு தரலாம். ஆனால், அவற்றை கொண்டு வரக் ஆயிரத்தெட்டு ரசாயணங்களை தயாரிப்பாளர்கள் உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.
என்ன விஷயம் என்று பார்ப்போம்.
தலையில் போடும் ஷாம்பில், நம்மை நுரை தள்ளி கீழே தள்ளும் வகையில் 15 ரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் சோடியம் லாரல், சல்பேட் டெட்ராசோடியம் மற்றும் பிரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை. இவற்றின் விளைவாக கண் எரிச்சல் மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறு. இதனால் நம்முடைய உடல் செல்களின் வடிவமைப்பேக்கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.
ஐ ஷேட்களில் 26 விதமான ரசாயணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் பாலிதிலின் டெரிப்தாலேட் என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ரசாயணம். புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவை ஏற்படக்கூடும்.
கன்னத்துக்கு போடும் ருஜ் போன்றவைகளில் 16 ரசாயணங்கள் உள்ளன. இதில் எதில்பாரபின், மெதி ல்பாரபின், பிராபிபாரபின் போன்றவை அதிக ஆபத்தானவை. கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்.
உதட்டுச்சாயத்தில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட33 ரசாயணங்கள் உள்ளன. அலர்ஜி மற்றும் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் கொண்டவை இவை.
முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தான ரசாயணமாகும். இவற்றால் அலர்ஜி, இம்யூன் சிஸ்டத்தில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.
வேர்வை, உடல் வாசனையை மாற்றும் டியோடெரண்டுகள்: இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதில் உள்ள இசோப்ரோபில், மைரிஸ்டேட்பார்ஃபர் போன்ற ரசாயணங்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது. தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்கள் போன்றவை ஏற்படும்.
நெய்ல் பாலிஷ்களில் 31 ரசாயணங்கள் உள்ளன. இவற்றில் ஃபத்தாலேட்டுகள் உள்ளன. குழந்தையின்மை மற்றும் குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
உடலுக்குப் போடும் பாடி லோஷன்: இதில் 32 ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதில் உள்ள மெதில் பாரபின், ப்ராபிபாரபின், பாலி திலின் க்ளைகால் போன்றவை ஆபத்தானவை. தோல் தடிப்பு, தோல் நிறம் மாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை எதிர்விளைவுகள்.
ஃபேக் டான்: தொடை மற்றும் பின்பக்க இடுப்புக்குக் கீழே போடப்படும் க்ரீம் இது. இதில் 22 விதமான ரசாயணங்கள் உள்ளன. இதில் கலக்கப்பட்டுள்ள ரசாயணங்களில் எதில்பாரபின், மெதில்பாரபின், பிராபி பாரபின் போன்றவை ஆபத்தானவை. குறிப்பிட்ட பகுதியில் தோல் தடித்தல், எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக